kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, January 17, 2014
திரும்பி வாரா நொடிகள்...
மடிநீங்கும் பாலும் மடிநோக்கிப் போகா(து)
நொடிநீங்கும் காலம் நுழையக் - கடிகார
முட்களாக மீண்டும் முயற்சித்து வாராத
உட்புகாத் தன்மைதான் உள்ளு.
வாய்ப்புகள் என்னும் வசந்த நொடிகளும்
காய்ப்பதும் பின்னர்க் கனிந்தபின்- தேய்வதும்
ஆகிய நற்பருவம் ஆங்குக் கழிவதும்
ஏகியப் பின்னர் இரா.
கைவிட்ட பின்னரே கைசேதம் என்றுதான்
பொய்கூட்டிப் பேசிடும் போதினில் - செய்யும்
வழிகளைச் சொன்னால் மனத்தினில் சோம்பற்
குழிகளைத் தோண்டும் குணம்.
காலமும் நம்மிடம் கண்போன்ற தென்றுதான்
ஞாலமும் கண்டநம் ஞானிகள் -- சீலமும்
பற்றிடச் சொன்னதைப் பற்றி நினைத்திடப்
பற்றுடன் சொல்லவேயிப் பா.
உண்டுச் சுவைத்தாய்; உடுத்திக் கிழித்ததும்
கண்டு மகிழ்ந்ததும் காணோமே- தொண்டு
புரிந்த நொடிகளும் புண்ணியமாய் நீண்டு
வரிந்துத் திரும்பி வரும்..
"கவியன்பன்"
நொடிநீங்கும் காலம் நுழையக் - கடிகார
முட்களாக மீண்டும் முயற்சித்து வாராத
உட்புகாத் தன்மைதான் உள்ளு.
வாய்ப்புகள் என்னும் வசந்த நொடிகளும்
காய்ப்பதும் பின்னர்க் கனிந்தபின்- தேய்வதும்
ஆகிய நற்பருவம் ஆங்குக் கழிவதும்
ஏகியப் பின்னர் இரா.
கைவிட்ட பின்னரே கைசேதம் என்றுதான்
பொய்கூட்டிப் பேசிடும் போதினில் - செய்யும்
வழிகளைச் சொன்னால் மனத்தினில் சோம்பற்
குழிகளைத் தோண்டும் குணம்.
காலமும் நம்மிடம் கண்போன்ற தென்றுதான்
ஞாலமும் கண்டநம் ஞானிகள் -- சீலமும்
பற்றிடச் சொன்னதைப் பற்றி நினைத்திடப்
பற்றுடன் சொல்லவேயிப் பா.
உண்டுச் சுவைத்தாய்; உடுத்திக் கிழித்ததும்
கண்டு மகிழ்ந்ததும் காணோமே- தொண்டு
புரிந்த நொடிகளும் புண்ணியமாய் நீண்டு
வரிந்துத் திரும்பி வரும்..
"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 15-01-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...
Subscribe to:
Post Comments (Atom)
+2 பாட புத்தகத்தில் இடம்பெற வேண்டிய படைப்பு !
ReplyDeleteஎக்காலத்திற்கும் ஏற்றதொரு சிறந்த ஆக்கம் - வாழ்த்துக்கள் கவிக்குறள்
அல்லாஹ் நாடினால் நடக்கும்; உங்களின் ஆர்வமும் நிறைவேறும்.
Deleteநண்பர் ஜாஃபருக்கு ஏற்பட்ட தொண்டை வலியின் காரணமாக இந்த முறை கவிக்குறளின் வரிக்கு குரல் கொடுக்க இயலவில்லை. இதன் தாக்கம் வாசகர்கள் மத்தியில் மட்டுமல்ல இலண்டன் வானொலி அறிவிப்பாளர் சகோதரி சைஃபா மாலிக் அவர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. வானொலியில் ஒலிபரப்பின் போது இவற்றை சுற்றிக்கட்டி பேசியுள்ளார்.
ReplyDeleteவிரைவில் நண்பர் ஜாஃபர் அவர்களுக்கு தொண்டையில் ஏற்பட்ட வலி குணமடைந்து மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி தொடர்வதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
உங்களின் ஆதமார்த்தமான துஆவினால் எம் நண்பரும் பாடகருமான ஜஃபருல்லாஹ் அவர்கள் உட்ல்நலம் தேறி வருவதைக் கீழ்க்காணும் அவர்களின் தனிமடலில் காணலாம்:
Delete\\---------- Forwarded message ----------
From: JAFARULLAH
Date: 2014/1/17
Subject: Re: உடல் நலக் குறைவு
To: KALAM SHAICK ABDUL KADER
இன்ஷா அல்லாஹ்.. ஆண்டிபயாடிக் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.. இன்ஷா அல்லாஹ் இன்னும் இரண்டு தினங்களில் சரியாகிவிடும்\
))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
மேலும், அமீரகத்திலும், சிங்கை, மலேசியா நாடுகளிலும் மற்றும் மூன் தொலைக்காட்சியிலும் புகழ் பெற்ற தேனிசைச் தென்றல் தேரிழந்தூர் -தாஜூத்தின் என்னும் பாடகர் அவர்கள் என்னிடம் நேற்று (இங்கு அமீரகத்தில் நடந்த மீலாத் விழாவில் கண்டு) அவர்கட்காகவும் பாடல் வரிகள் எழுதித் தரவும் வேண்டினார்கள்; முஸ்லீம் லீக் பாடலை எழுதத் தூண்டியவர்களில் ஒருவரான ஆவை அன்சாரி என்னும் சகோதரர் அவர்களின் ஆவலின் பேரில்- அவர்களின் தூண்டுதலில் இந்த உடன்பாடு எட்டியது; இன்ஷா அல்லாஹ், தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் “நபிகளாரின் நன்னெறி” என்னும் பாடல் (இன்னும் முழுமை பெறவில்லை) முழுப்பாடலையும் கீழ்க்காணும் மூன்று பேர்களிடமும் கொடுத்துப் பாட வைப்பேன்,இன்ஷா அல்லாஹ்!
1) உடல்நலம் தேறியபின்னர் அதிரைப் பாடகர் இளம் முரசு ஜஃபருல்லாஹ்
2) தேனிசைத் தென்றல் தேரிழந்தூர் -தாஜூத்தீன்
3) இன்று எனக்கு அனுப்பியத் தனி மடலில் என் பாடல் “பொருளீட்டும் போதினிலே” என்ற பாடலைத் தானாகவே முன்வந்து க்ர்னாடிக் மெட்டில் பாடி ,mp3 ல் அனுப்பி என் விருப்பம் கேட்டு வைத்த , “புதுசுரபி” ரஃபீக் சுலைமான் (துபை), (முன்னாள் செய்தி வாசிப்பாளர், ஜெயாத் தொலைக்காட்சி)
ஆகியோர்கட்கு, இன்ஷா அல்லாஹ் முழுப்பாடலும் ஆயத்தமான பின்னர் அனுப்பிப் பாட வைப்பேன்.
(இப்பாடலை மேற்கூறிய மூன்று பாடகர்களும் வாயசைப்புக்குள் அமரும் வண்ணம் “வண்ணப்பாடல்” என்னும் மரபிலக்கண அமைப்பின் வாய்பாட்டில் அமைக்கின்றேன்; அதனால், அவர்கள் வாயும் எளிதாகும் பாடும் என்றே நம்புகின்றேன்.
முத்தான மூன்று பாடகர்களும் தானாகவே முன்வந்து என் பாட்டைப் பாட விழைந்தனர் என்ப்தே அல்லாஹ் என் உழைப்புக்குக் கொடுத்த அங்கீகாரமும்; கவுரவுமும் ஆகும்; எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
.
திரும்பி வருமாமே தெள்ளுத் தருமம்
ReplyDeleteஅரும்பி தழுவிடுமே அன்பும் - விரும்பி
நெருங்கும் குடும்பமுமே நீங்கா மகிழ்வில்
சுருக்கித் தருமிதில் சூழ்.
தெள்ளு தருமம்- தெளிவான தருமம் , தான் செய்தேன் என்ற உரிமை கொள்ளாத் தருமம்.
நல்ல கருத்து; ஓட்டம்; ஓசை நயம்; தளைகள் தட்டாத வெண்பா.
Deleteமுயற்சிக்குப் பாராட்டுகள்; வாழ்த்தினுக்கு நன்றிகள்.
அன்பரே!
Deleteதுபாய்த் தமிழர் சங்கமம் நடத்தும் கவிதைப் போட்டியின் முதற்சுற்றில் தேர்ந்தெடுக்கப் பட்ட பத்துக் கவிஞர்களில் தாங்களும் ஒருவரே என்பதால் தான் தங்கட்கும் தனிமடலில் இறுதிச் சுற்றிற்கான “வாய்ப்புகள் தந்திடும் வாழ்வு” என்னும் தலைப்பில் கவிதையை இம்மாதம் 25ஆம் திகதிக்குள் அதே முகவரிக்கு (dubaitamizharsangamam@gmail.com) அனுப்பக் கோரியிருந்தோம். இன்று வரை தங்களின் கவிதை அந்தத் தலைப்பில் வந்து சேரவில்லை; ஆனால், மூன்று கவிதைகள் இன்று வரை எமக்குக் கிடைத்தன:
1) இலண்டன் கவிஞர் கிரிகாசன்
2) தூத்துக்குடி பொற்கிழிக் கவிஞர் சவகர்லால்
3) முத்துப்பேட்டை கவியருவி மலிக்கா ஃபாரூக்
இன்னும் எட்டு நாட்களே உள்ளதால், விரைவாக அனுப்பி வையுங்கள்; அவற்றை எம் குருநாதர் அவர்களிடம் காண்பித்து ஓர் அதிசிறந்த கவிதைக்கு முதற் பரிசிலுக்கான தெரிவை அறிவிப்பார்கள்.
இன்ஷா அல்லாஹ் எழுதிவிட்டேன். நாளை அல்லது மறுநாள் அனுப்பிவிடுவேன்.
Deleteநன்றி.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமச்சானின் திரும்பி வாரா நொடிகள் ஒரு அருமையான படைப்பு.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
”திரும்பி வாரா நொடிகள்” இன்னும் நீளும்
Deleteமரணத்தின் கடைசி நேரம் அறிவோம் அந்த நொடிகளை;
மரணத்த பின்னர் கடந்துவிட்ட நொடிகளும் திரும்பி வாரா;
ஆயினும், நம்முடன் திரும்பி வரும் நொடிகள் எல்லாம் நாம் செய்த நனமை- தீமைகளும் (அவைகள் பதியப்பட்ட ஏடும்).
நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் அந்தத் தீர்ப்பு நாளின் திரும்பி வரும் நொடிகளாக நன்மைகளை மட்டும் ஏற்பானாக; அதனூடே சுவனத்தை வழங்குவானாக; அதற்காகவே யாம் இம்மை என்னும் வாழ்க்கை பூமிய்ல் நன்மைகள் என்னும் விதைகளை விதைக்கும் நொடிகளே திரும்பி வரும், உறுதியாக!
மச்சானின் வாழ்த்தைப் படித்த நொடிகள்;யான் விரும்பிய நொடிகள்!
சிறப்பான வரிகள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
”ஐயா” என்று அன்பொழுக- மரியாதையும் மதிப்பும் நிரம்ப வாழ்த்தும் உங்களைப் போன்றோரகளை இம்மாமன்றத்தில்- இவ்வலைத் தோட்டத்தில் காணும் போதினில், என்னுள்ளம் மகிழ்ச்சியும்- நெகிழ்ச்சியும் அடைகின்றன அன்பரே!
Deleteஆயினும், நமக்குள் வேரூன்றி விட்டத் “தமிழர்” என்ற இன உணர்வையும் - சமூக நல்லிணக்கத்தையும் கெடுக்கும் வென்னீராய்ச் சிலரும் உளரே என்றெண்ணும் போதினில், “நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மானிடரை நினைக்கையிலே” என்றுதான் பாடத் தோன்றும்.
மீண்டும் உங்களின் சிறப்பான வாழ்த்தினுக்கும், விளிப்புக்கும் நன்றிகள், அன்பரே!
திரும்பிவரா நொடிகள் திரும்பிவருமா எனத் திரும்ப வாசிக்கத் தூண்டின. அருமை. வாழ்த்துக்கள் கவித்தீபம் அவர்களே.!
ReplyDeleteஅருமையான வாழ்த்தினை அகமகிழ்ந்தளித்த அதிரை மெய்சா என்னும் அன்பர்க்கு என் அகமகிழ்வான நன்றிகள்.
Deleteஅருமையான வரிமுத்துகள். வாழ்த்துகள் காக்கா
ReplyDelete