kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, January 27, 2014
பெண் ஜென்மம்
“பூப் போன்ற கனவேந்தி,
வளர்த்த பைங்கிளி காண்!
புவிக்கு பாரமென்ற
புள்ளியோடு கோலமாய் !
பள்ளிக்குப் பத்திரமாய் ;
அனுப்பிவைத்துக் காத்திருந்து,
பாசமகள் வருமட்டும்
மடியில் நெருப்போடு,
வழிமேல் விழிவைத்து, வரும்வரை
வேர்த்திருந்து கண்ணின் கண்மணியாய்,
வளர்த்த அன்பு மகள் ...!
பூப்பெய்தி மலராக,
இணைதேடும் நாடகங்கள்,
தினந்தோறும் அரங்கேற்றம்,
இல்லாதார் வாழ்வினிலே!
ஏழைகளின் எள்ளுருண்டை,
எட்டிக்காய் ஆகிறது!!! ..
பொன்னில்லா பெண்ணிங்கு;
குப்பை மேட்டு கூரையாய்!
இருப்பவன் கொண்ட பசிக்கு
இல்லாதார் இரையாவார் ...
இன்றில்லை; நாளை விடியும்,
கனவோடு காத்திருக்கும்,
வாழ்வில் விடியலலுண்டோ?
இறைவா நீயெங்கே!
பாதையும் சரியில்லை,
பணமும் கையில் இல்லை,
பாசம் மட்டும் வாழ்ந்தெதற்க்கு,
பாவம் வாழும் உலகினிலே!
விடையில்லா கேள்வியாய்....!
எச்சிலைக்கே போராட்டம்!!
ஏழைகள் வாழ்வினிலே,
எல்லாம் கனவுகளே!
சிலைகிருக்கும் மரியாதை,
உயிர்க்கு இங்கே இல்லையடா!
சிந்தித்தால் மரணமொன்றே,
இல்லார்க்கு சொர்கமடா!!
வழியுமில்லை ஒளியுமில்லை,
பெண்ஜென்மம் பாவமடா!
விடியல்பேசும் வித்தகரே,
எதுவும் தேவையில்லை,
நிம்மதி தேடுகிறோம்,
வாழவிட்டால் அதுபோதும் !
வளர்த்த பைங்கிளி காண்!
புவிக்கு பாரமென்ற
புள்ளியோடு கோலமாய் !
பள்ளிக்குப் பத்திரமாய் ;
அனுப்பிவைத்துக் காத்திருந்து,
பாசமகள் வருமட்டும்
மடியில் நெருப்போடு,
வழிமேல் விழிவைத்து, வரும்வரை
வேர்த்திருந்து கண்ணின் கண்மணியாய்,
வளர்த்த அன்பு மகள் ...!
பூப்பெய்தி மலராக,
இணைதேடும் நாடகங்கள்,
தினந்தோறும் அரங்கேற்றம்,
இல்லாதார் வாழ்வினிலே!
ஏழைகளின் எள்ளுருண்டை,
எட்டிக்காய் ஆகிறது!!! ..
பொன்னில்லா பெண்ணிங்கு;
குப்பை மேட்டு கூரையாய்!
இருப்பவன் கொண்ட பசிக்கு
இல்லாதார் இரையாவார் ...
இன்றில்லை; நாளை விடியும்,
கனவோடு காத்திருக்கும்,
வாழ்வில் விடியலலுண்டோ?
இறைவா நீயெங்கே!
பாதையும் சரியில்லை,
பணமும் கையில் இல்லை,
பாசம் மட்டும் வாழ்ந்தெதற்க்கு,
பாவம் வாழும் உலகினிலே!
விடையில்லா கேள்வியாய்....!
எச்சிலைக்கே போராட்டம்!!
ஏழைகள் வாழ்வினிலே,
எல்லாம் கனவுகளே!
சிலைகிருக்கும் மரியாதை,
உயிர்க்கு இங்கே இல்லையடா!
சிந்தித்தால் மரணமொன்றே,
இல்லார்க்கு சொர்கமடா!!
வழியுமில்லை ஒளியுமில்லை,
பெண்ஜென்மம் பாவமடா!
விடியல்பேசும் வித்தகரே,
எதுவும் தேவையில்லை,
நிம்மதி தேடுகிறோம்,
வாழவிட்டால் அதுபோதும் !
சசிகலா
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபெண் ஜென்மம் என்ற தலைப்பில் இந்தக் கவிதையை மிகவும் நன்றாக வடித்துள்ளீர்கள்.
பெண் ஜென்மம் பேசுவதை இந்த உலகம் பார்த்துக்கொண்டு இருக்குது.
//விடியல்பேசும் வித்தகரே,
எதுவும் தேவையில்லை,
நிம்மதி தேடுகிறோம்,
வாழவிட்டால் அதுபோதும் !//
என்னைக் கவர்ந்த வரிகள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
பெண் ஜென்மம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
Deleteபெண் ஜென்மம்
இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்பாளர் ஏ. சி. திருலோகச்சந்தர்
நடிப்பு முத்துராமன்,பிரபா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு ஆகஸ்ட் 19, 1977
ஏன் இந்த பெண் ஜென்மம்
Deleteநூற்றாண்டு தோறும் மாறாத நிலை...!
உண்மையான ஆதங்கம் வரிகளில்...
ReplyDeleteசகோதரியின் கோபம் நியாமானதே !
ReplyDeleteவிழிப்புணர்வு பெறுவது அவசியம்
உருக்கமான வெளிப்பாடுகள்
ReplyDeleteஉள்ளுக்குள் இருந்தால் வெடித்துவிடும் !
நெருப்பான வார்த்தையில்
நெகிழவைக்கும் பெண்ஜென்ம போராட்டம் !
கருப்புக்கொடிகள் பறக்கின்றது
காப்பாற்ற வேண்டாம் வாழவிடு !
தருவோரும் உண்டா
தந்திடுங்கள் நம்மதி ஒன்றே !
சகோதரி சசிகலா எழுதிய ஒவ்வொரு வரியும் ஆணித்தரமாக நெஞ்சில் பாயும் வரிகள் அத்தனையும் சிறப்பு. வாழ்த்த வார்த்தைகளில்லை.
ReplyDeleteவறுமையின் அவலத்தைக் காட்டமாகக் காட்டியவிதம் மனதை நெகழ வைத்து விட்டீர்கள் சஹோதரியே........
ReplyDeleteஇப்படிக்கு......ஜியாவுதீன் அமீரகம் -அல் அயின்
This comment has been removed by the author.
ReplyDeleteசாடல் மிக்கப் பாடல்.
ReplyDelete