.

Pages

Saturday, February 15, 2014

வேலன்டைன் குறும்பாக்கள்

வேலண்டைன் என்னும்
விண்கலம் ஏறி
"செவ்வாய்"க் கேட்டான்;
செதுக்கியச் சிலையாய் நின்றாள்!

நன்றாய்ப்பார்
நானொரு சனிக்கோள் என்றாள
இன்றோ தேடினான்
இவளிடம் “திருநள்ளாறு”!

அட்டைகள் தோறும்
அழகாய்ப் "பொரித்த"
சட்டைக் கழற்றிய இதயம்
சட்டெனக் கவரும் வண்ணம்!.

செல்பேசிகளில்
செலவாகிப் போயின
செல்வங்கள் நில்லாமல்
வரவாகிப் போயின
வணிகர்களின் கல்லாவில்!.

பொருளாதாரம் செழித்தது.
பொழுதும் கழிந்தது;
அருளாதாரம் அழிந்தது
அதுவே காதல் என்றது!

காதலின் புனிதம்
காணாமற் போன மனிதம்
காமத்தின் உச்சம்
காதலென்று உச்சரிக்கும்!

வணிகமில்லா அன்புக்கு
வணிகம் செழிக்க வைத்து
வணிகமயமாக்கிய காதல்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

11 comments:

 1. எனது தகப்பனாரின் கண் அறுவை சிகிச்சையை சிறப்பாக முடித்துக்கொண்டு தற்போதுதான் ஊர் திரும்பினேன்.

  கவிக்குறளின் சமூக விழிப்புணர்வூட்டும் இந்த கவிதையை வாசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  சிறப்பாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் கவிக்குறள் !

  ReplyDelete
  Replies
  1. நண்பர் நிஜாமின் வாப்பாவின் கண் அறுவை சிகிச்சை சிறப்பாக நிறைவேறியதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவோம்

   விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனைகள்...

   Delete
 2. தங்களின் வாப்பா அவர்களின் கண் அறுவை சிகிச்சைக்குத் தாங்கள் உடனிருந்த நற்பணபைப் பாராட்டி, இன்ஷா அல்லாஹ் எனக்கும் எதிர்வரும் ஏப்ரலில் (இன்ஷா அல்லாஹ் மார்சு 27ல் தாயகம் வ்ருவேன்) நடக்க இருக்கும் கண்புரை அறுவை சிகிச்சையில் தங்களின் உதவியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன்.

  மேலும், என் பாலும் என் கவிதையின் சிறப்பின் பாலும் காலம் கருதி உடன் பதிவிட்ட தங்களின் உள்ளம் பார்த்து வழங்குகின்றேன், வாழ்த்து
  ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

  நிற்க. எங்கள் இணையக் கவியரங்கக் குழுவில் என் கவிதை அரங்கேற்ற நேற்று அழைப்புக் கிட்டியது; நேற்றுப் பதிந்தேன் அந்தக் குழுவினரின்- தமிழுலகப் பாவேந்தர்கள்- பாவரசர்கள்- தமிழ்மாமணிகளின் மதிப்பெண்ணும் மதிப்புரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருந்க்கின்றன. இன்ஷா அல்லாஹ் அப்பாடல் மிகவும் உணர்ச்சிகரமாகப் பாட வேண்டி பாடகரிடம் கொடுத்துள்ளேன்; இன்ஷா அல்லாஹ் ஆயத்தமானதும் அதன் காணொளி அடுத்தப் பதிவாகத் தங்களின் தளத்தில் தொடரும்.

  ReplyDelete
 3. நண்பர் நிஜாமின் வாப்பாவின் கண் அறுவை சிகிச்சை சிறப்பாக நிறைவேறியதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவோம்

  விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனைகள்...

  ReplyDelete
 4. கவியன்பனின் வரிகளில் கூடாக் காதலுக்கு சிறப்பான அவமறியாதை...!!

  ReplyDelete
  Replies
  1. தற்பொழுது இறையருளால், தணிக்கைக்குத் தயாராகும் அளவுக்குப் பணி நெருக்கம் குறைந்து விட்டதும்; நேற்றும் இன்றும் நல்ல ஓய்வில் இருந்ததும்; என் தாயகப் ப்யணம் குறித்த திடமான ஒரு நம்பிக்கையும் இன்ஷா அல்லாஹ் ஏற்படும் என்ற மனத் தெம்பும் என்னை மீண்டு வரச்செய்து மீண்டும் கவிதைகள் வனையச் செய்தன; அல்ஹம்துலில்லாஹ்! பாடகர் இளம்முரசு ஜாஃபரின் வாழ்த்துக்கு நன்றிகள். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து உங்கட்கும் உடல் நலம் பெற்று சீரும் சிறப்புடன் எமது கூட்டு முயற்சியில் பாடல்கள் காணொளிகளாக வலம் வர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

   Delete
 5. அன்பின் சகோதரர் நிஜாம் அவர்களின் வாப்பா கண் அறுவை சிகிச்சை சிறப்பாக நிறைவேறியதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவோம்

  விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனைகள்...

  ReplyDelete
 6. சிறு இடைவெளியானாலும் கவித்தீபத்தின் சிறந்த சிந்தனையில் வேலண்டைன்சை கொண்டாடுவோர் கவனிக்கவேண்டி சிறப்பான கவிதை படைத்து அசத்தியுள்ளீர்கள். நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்த சோதனைகள்; பணி நெருக்கம்; பயணத்திட்டத்தில் மாறுதல் போன்றவற்றால் மன உளைச்சலுக்கானதால் கவிதைகள் வனைய ஆர்வம் குன்றியது; அலஹ்மதுலில்லாஹ் இப்பொழுது யாவும் பகலவனைக் கண்ட பனி போல் விலகின; மாஷா அல்லாஹ், அதனாற்றான், சிறு இடைவெளியில் சிறப்பாய் அமைகக் முடிந்தது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் தொடரும். உங்களின் சிறப்பான வாழ்த்தினுக்கு என் உளம்நிறைவான நன்றிகள்.

   Delete
 7. பதிவுக்கு நன்றி.

  மச்சான் இப்போதெல்லாம் அந்த டே இந்த டேன்னு ஒரு பாடுண்டு.

  நாம் சிறுவயதாக இருக்கும் போது எந்த ஒரு தகவல் நுட்பம் இல்லாத காலத்தில் இந்த டேக்களைப் பற்றி யாரும் சிந்திக்க வில்லையா? அல்லது இதுமாதிரி டேக்கு பதில் வேறு ஏதாவது இருந்ததா?

  வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 8. அன்பு கொண்டோர் ..
  தினமும் நேசிப்பார் ,காதல் கொள்வர்
  தன துணைவி மீது ..வருடம் ஒரு முறை
  கொண்டாடும் காதலர் தினம் ..
  மற்ற நாட்கள் வேதனை தினமா...?

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers