.

Pages

Saturday, March 1, 2014

போலிகள் [ செயலில் போலி !? ]

அறிவுத்தேன் II
இதற்குமுன் கருத்துப் போலிகள் பார்த்தோம். அதிலிருந்து எவ்வாறு தெளிவு பெறுவது என்பதை இறுதியில் பார்ப்போம்.

ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைகள் உண்டு. தன் தன்மைப்படித்தான் ஒவ்வொருவரும் வாழ வேண்டும். அதைவிடுத்து மற்றவர்போல் வாழ முயற்சிப்பது போலி வாழ்க்கையாகும்.

நல்லவர் ஒருவர் வாழ்ந்தது போல் நாம் வாழ வேண்டும் என்றால் அது போலி என்றாகிவிடாது. அந்நல்லவர் வாழ்ந்து காட்டிய பிரகாரம் வாழ்தல் என்பது அவர்களின் சுய நிலை புரிந்து அவர்களின் நற்குணங்களை தன்குனத்திலாகி, அக்குனங்களை தன் வாழ்வியலில், தன் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும். இதனை பின்பற்றுதல் அல்லது வழிநடத்தல் அல்லது வழிப்படுதல் என்று கூறலாம்.

பொதுவாக உதவி செய்தல் என்பது நல்ல குணம். அதனால் திருடன் ஒருவன் திருடும்போது அவனுக்கு உதவி செய்கிறோம் என்று உதவி செய்தால் அவர் உதவி செய்தல் என்றதின் நோக்கத்தின் பொருளைப் புரியாமல் செயல் படுகிறார் என்றுதான் பொருள். அதுவும் போலியே.

மனித வாழ்வில் சில அனுஷ்ட்டானங்கள் என்ற பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு மத/மார்க்கங்களில் உண்டு. அது ஏன் செய்கிறோம் என்று புரியாமல் தவறாது அதனைச் செய்து வருவார்கள்.

சில உண்மைகளை சொன்னால் பக்குவமின்மை காரணமாக புரியாது. அதனால் "இதை செய்து வா", என்று முன்னோர்கள் கடமைப் படுத்தி வகுத்துத் தந்து சென்றிருக்கின்றனர். செய்யாவிட்டால் தெய்வக் குற்றமாகவும் சொல்லப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு மனிதரும் தன் அறிவு படித்தரத்தில் வேறுபட்டே இருப்பார்கள். என்று ? அவர்களுக்கு அறிவுத் தெளிவு ஏற்படுமோ அன்று, எதற்காக இந்த அனுஷ்டானம் என்ற இந்தப் பழக்கவழக்கம் என்று புரிவார்கள்.

தெளிவு ஏற்படும் முன் அப்பழக்க வழக்கங்கள் அதனை அவர்கள் அறிவைப் பயன்படுத்தி சிந்தித்து தவறு என்றும் தீர்ப்பும் கூறிவிடுவார்கள். அதனால் குழப்பங்களும், பிளவுகளும்  சமூகத்தில் உண்டாகும், ஒற்றுமை, அமைதி குழையும்.

மனிதன் இப்பூமியில் தோன்றி 6000+ வருடங்களுக்கு மேல் ஆகிருக்கின்றது. மனிதன் எந்த உணவு சாப்பிட தகுந்த நல்ல உணவு என்பதை அறிந்துக் கொள்வதற்கே பலதை சாப்பிட்டு இறந்தவர்களும் பல ஆயிரம் இருக்கலாம்.

நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்து அனுபவித்து, சிறந்த நல்ல உண்மைகளை நமக்கு சேகரித்து தந்து சென்றிருக்கின்றனர். அதனில் நாம் நம் நுண்ணறிவுடன் விளங்க இயலாதும், வளரும் வயதில் அது சரி, இது தவறு என்று சொல்வதும் எந்த வகையிலும் நியாயமும், தருமமும் ஆகாது.

இறைப்பொருத்தம் அடைவது உச்சம் என்றால் அவ்வாறு பல ஆயிரம் மனித புனிதர்கள் அந்நிலை அடைந்து வாழ்ந்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்றதை இன்று புரிவதற்கே பலப்பிரிவுகளாக புரிந்த நிலைக்கேற்ப நிற்கின்றோம். அவர்களின் அறிந்தவைகலையே பல்கலைகழகம் மூலம் பயில்கின்றோம்.
பூமி தட்டை என்று வாழ்ந்த பின் அது உருண்டை என்று நிருபித்த காலத்தில் மட்டும்மல்லாது, அண்மித்த கிரகங்களையும் இயந்திரங்களைக் கொண்டு ஆராய்கிறோம், அறிகிறோம். வகுத்துத் தந்த வழிமுறைகளில் நம் அறிவுக்கு புரியவில்லை என்பதற்காக, அதனில் தவறு காணும் நிலை மாறி இன்னும் அறிய வேண்டிய புதுமைகளைக் காண்பது சிறப்பு.

ஒருவருடைய செயல்கள் சிலருக்கு அறியாமையாகவும் அல்லது மூட நம்பிக்கையாகவும் தெரியலாம். இதில் யார் மூட நம்பிக்கையில் இருக்கின்றார் என்பது அதன் விளைவில்தான் தெரியும். எனவே அடுத்தவர் இவர் மூட நம்பிக்கையில் இருக்கின்றார் என்று கூறுதல் அறிவுடமையாகாது. தான் அறிந்ததை சொல்லலாம், அதனால் அதனை அடுத்தவர் வாழ்வில் புகுத்துதல் வன்மம் ஆகும். இதனையே அன்றே "அவரவர் வழிகள் அவரவருக்கு, எனேவ மற்றவர் வழியில் குறுக்கிடாதே", என்று அறிவின் தோற்றமான அண்ணல் பெருமான்(ஸல்) வழிகாட்டியுள்ளனர்.

மனிதன் தானும் தன் சக மனிதர்களும் நிம்மதியாக வாழ்தல் ஒன்றை மையமாகக் கொண்டு நம் சிந்தனையைச் செலுத்த வேண்டும். அவ்வாறு அல்லாமல் நல்லது செய்கிறேன் அல்லது நல்வழி காட்டுகிறேன் என்று மனித மன நிம்மதியைக் குழைப்பது, தான் அறிந்த எந்த அறிவானச் செயல் என்றாலும், அது சரியாகாது. இது செயல் போலி என்று சொன்னால் மிகையாகாது.

நபிதாஸ்

10 comments:

 1. செயல் போலிகள் குறித்த விளக்கம் அருமை !

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் விளங்கி கருத்திட்டமை மகிழ்வைத் தருகிறது.

   Delete
 2. //"அவரவர் வழிகள் அவரவருக்கு, எனேவ மற்றவர் வழியில் குறுக்கிடாதே", என்று அறிவின் தோற்றமான அண்ணல் பெருமான்(ஸல்) வழிகாட்டியுள்ளனர்.// இது ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் பொருந்தும் அல்லவா?

  ReplyDelete
  Replies
  1. கணவன் மனைவி என்பது உருவத்தில் இருவர். திருமணம் முடிக்கும் முன்பு பெற்றோர்களுடன் அவர்கள் வழிகாட்டுதலில், ஆனால் நகமும் சதையும் போல் திருமணம் முடித்த குடும்ப வாழ்க்கையில் ஒன்றித்து ஒரு வண்டியில் பூட்டி வாழ்க்கை பயணத்தை ஓட்டிச் செல்பவர்கள்." கணவன் மனைவிக்கு ஆடையாகவும் மனைவி கணவனுக்கு ஆடையாகவும் ஒருவரை ஒருவர் பேணி வாழ வேண்டும்", என்று நபிகள் பெருமானார் (ஸல்) அன்னவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

   //ஒருவருடைய செயல்கள் சிலருக்கு அறியாமையாகவும் அல்லது மூட நம்பிக்கையாகவும் தெரியலாம். இதில் யார் மூட நம்பிக்கையில் இருக்கின்றார் என்பது அதன் விளைவில்தான் தெரியும். எனவே அடுத்தவர் இவர் மூட நம்பிக்கையில் இருக்கின்றார் என்று கூறுதல் அறிவுடமையாகாது. தான் அறிந்ததை சொல்லலாம், அதனால் அதனை அடுத்தவர் வாழ்வில் புகுத்துதல் வன்மம் ஆகும். இதனையே அன்றே "அவரவர் வழிகள் அவரவருக்கு, எனேவ மற்றவர் வழியில் குறுக்கிடாதே", என்று அறிவின் தோற்றமான அண்ணல் பெருமான்(ஸல்) வழிகாட்டியுள்ளனர்.//

   தாங்கள் எழுதிய பிரகாரம் ஆண், பெண் ஒரு குடும்பத்தில் என்றால் அது கணவன் மனைவி என்ற நோக்கில் எழுதப்பட்டால்.....

   மேற்கண்ட கட்டுரையின் பகுதி ஒன்றில் ஒருவர் என்பது குடும்பமாக வாழ்க்கை நடத்தும் கணவன் மனைவி என்று இவர்களைப் பிரித்துப் பார்ப்பது போல் எழுதப்பட்டதல்ல. கட்டுரையின் நோக்கம் அல்லது அதன் மனம் ஒவ்வொருவரின் வேற்பட்ட கொள்கை வழிகளில் (மார்க்கங்களில்) அவர்கள் மனம் நோக "இவர் மூட நம்பிக்கையில் உள்ளார்" என்று கூறுதல் அறிவுடமையாகாது, என்றக் கருத்தில் எழுதப்பட்டது. இதனைத்தான் இறை வேதத்தில் இருந்து, அன்றே "அவரவர் வழிகள் அவரவருக்கு, எனேவ மற்றவர் வழியில் குறுக்கிடாதே", என்று அறிவின் தோற்றமான அண்ணல் பெருமான்(ஸல்) வழிகாட்டியுள்ளனர், என்று எழுதப்பட்டது.

   எனவே அவ்வாறு தங்கள் கருத்து இருக்குமானால்....

   கருத்துக்கோர்வையை விட்டு விட்டு இடையில் ஒருக்கருத்தை எடுத்து தன் அறிவுக் கண்ணோட்டத்தில் காண்பது தான் அறியாமலே தன்னை போலிச் சிந்தனைக்குள் இவ்வாறுதான் இழுத்துச் சென்றவிடுமோ என்பது புலப்படுகிறது. இவ்வாறுதான் இன்று ஒரே கொள்கையினுள் ஒரு வழிகாட்டல் பலவிதமாக புரியப்பட்டு அமைதிகள் குழைகின்றன.

   அவ்வாறு அல்லாமல், //ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் பெண் அனைவருக்கும் பொருந்தும் அல்லவா?// என்பதில் சகோதர சகோதரி போன்று அவர்கள் வெவ்வேறு கொள்கையில் மனம் முடித்துப் போய் இருப்பார்களேயானால் அங்கு கட்டுரையும் நோக்கம் போல் கருதலாம்.

   ஏனென்றால் உடன்பிறவா சகோதரியே....

   மனிதன் தானும் தன் சக மனிதர்களும் நிம்மதியாக வாழ்தல் ஒன்றை மையமாகக் கொண்டு நம் சிந்தனையைச் செலுத்த வேண்டும். அவ்வாறு அல்லாமல் நல்லது செய்கிறேன் அல்லது நல்வழி காட்டுகிறேன் என்று மனித மன நிம்மதியைக் குழைப்பது, தான் அறிந்த எந்த அறிவானச் செயல் என்றாலும், அது சரியாகாது. இது செயல் போலி என்று சொன்னால் மிகையாகாது, சகோதரியே.

   அதனையே "அவரவர் வழிகள் அவரவருக்கு, எனவே மற்றவர் வழியில் குறுக்கிடாதே", என்று அறிவின் தோற்றமான அண்ணல் பெருமான்(ஸல்) அன்னவர்கள் இறை வேதத்திலிருந்து வழிகாட்டியுள்ளனர்

   தாங்கள் வருகைக்கும் இது போன்ற கேள்விகள் கேட்பதற்கும் மிக்க நன்றி, சகோதரியே.

   Delete
  2. மிக மிக அருமையான விளக்கம் நண்பரே.

   Delete
  3. விளக்கங்களை தாங்கள் உள்ளபடி புரிந்தமைக்கு அகம் மகிழ்கின்றேன். நல்லவரே, நண்பரே.

   Delete
 3. பதிவுக்கு நன்றி.

  அருமையான ஆக்கம்.
  நல்ல கருத்துகளோடு மிகவும் அழகாக இருக்கின்றது.

  உண்மையில் நினைத்து பார்த்தால் வேதனையாக இருக்கின்றது, இப்போ உள்ள தலைமுறைகள் நடத்தைகள் வேருங்க,

  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
  Replies
  1. தேன் சுகமானது. நல்ல மருந்து. உயிரோடு உள்ளவைகளை அவ்வாறே பாதுகாப்பது.

   அந்த தேன் குணங்களை தங்கள் எழுத்துக்களில் சுவைக்கின்றேன்

   Delete
 4. //மனிதன் தானும் தன் சக மனிதர்களும் நிம்மதியாக வாழ்தல் ஒன்றை மையமாகக் கொண்டு நம் சிந்தனையைச் செலுத்த வேண்டும். அவ்வாறு அல்லாமல் நல்லது செய்கிறேன் அல்லது நல்வழி காட்டுகிறேன் என்று மனித மன நிம்மதியைக் குழைப்பது, தான் அறிந்த எந்த அறிவானச் செயல் என்றாலும், அது சரியாகாது. இது செயல் போலி என்று சொன்னால் மிகையாகாது.\\

  கட்டுரையின் முத்தாய்ப்பானக் கருத்தை முடிவில் தந்து விளங்க வைத்து விட்டீர்கள்; பாராட்டுகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

  குடும்பங்கள் குலைந்தது ஏன்?
  ச்முதாயம் பிளவு பட்டது ஏன்?
  அண்டை மாநிலங்களுடன் ச்ண்டையிடல் ஏன்?
  கண்டங்களுக்கிடையே போர் மூளுதல் ஏன்?

  எல்லாவற்றிற்கும் விடை இந்தப் பதிவில் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. குடும்பங்கள் குலைந்தது ஏன்?
   ச்முதாயம் பிளவு பட்டது ஏன்?
   அண்டை மாநிலங்களுடன் ச்ண்டையிடல் ஏன்?
   கண்டங்களுக்கிடையே போர் மூளுதல் ஏன்?

   எல்லாவற்றிற்கும் விடை இந்தப் பதிவில் உண்டு எனக் கட்டுரைக் கருவை பிரசவம் செய்து நடமாடவிட்ட கவிஞர் தங்கள் கருத்துக்கு நன்றியும் மகிழ்வும்.

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers