.

Pages

Thursday, March 27, 2014

கையூட்டு - ச்சீ !?

பொறுப்புள்ளக் குடிமகனின் அடையாளம்
..........புத்தியினைத் தீட்டித்தான் வாக்களிப்பார்
மறுப்புகளைச் சொல்லியவர் விடமாட்டார்
..........மதித்தேத்தான் பொறுப்புடனே வாக்களிப்பார்
வெறுப்புகளும் வரத்தானே நேர்ந்தாலும்
..........விவேகமாக நல்லாரைத் தேர்ந்தெடுப்பார்
உறுப்பினர்கள் சபையினிலே வெளியிட்டு
..........உரிமைகளைப் பெறவேதான் தூண்டிடுவார்.

உணர்வுகளைத் தூண்டுவாரின் மதிமயக்கும்
..........உளிகளின்சொல் தீவலையில் அவர்வீழார்
இணங்கிடவே எதனையுமே கையாளும்
..........இவர்களுடை வலையினிலே சிக்கிடாரே
கணப்பொழுதும் மதிமயங்கிப் போகமாட்டார்
..........கவலையுடன் முன்னோக்கிச் சிந்திப்பார்
குணம்கண்டே ஒதுங்கியேயேப் போய்விடுவார்
..........கொள்கைதனில் குறியாக நின்றிடுவார்.

மாற்றங்கள் வந்துதானே ஆட்சிகளும்
..........மான்பினதாய் நல்லாட்சித் தந்திடுமாம்
ஏற்றங்கள் வேண்டுமெனில் புத்தியுடன்
..........இப்பொழுதே தீர்மானம் கொண்டிருப்பார்
சீற்றங்கள் இடையிடையே தோன்றினாலும்
..........சிறப்பைத்தான் நோக்கித்தான் சிந்திப்பார்
தூற்றிடுவார் பொருளாசைக் காட்டிவிட்டால்
..........துவண்டிடார்நல் நேர்மைதானே உயர்வென்பார்.

தரும்காசு அவர்விதையாம் தவறாகத்
..........தருணத்தில் பலகோடிச் சுருட்டிடவே
ஒருநாளின் பசிப்போக்கும் கையூட்டு- ச்சீ !
..........ஒருபோதும் மேன்மக்கள் விளைபோகார்
வரும்நாளில் நம்வாழ்வு சிறப்பிடவே
..........வசந்தங்கள் நம்நாட்டில் பெருகிடவே
ஒருநேரம் கையூட்டு தரவந்தால்
..........ஓட்டிடுவார் கைப்பேசிச் சுழற்றிவிட்டே !

நபிதாஸ்
அரையடிக்கு காய் காய் காய் ஆசிரிய விருத்தம்.

16 comments:

  1. இந்த விழிப்புணர்வூட்டும் ஆக்கத்தை தேர்தல் கமிசனுக்கு அனுப்பி வைத்தால் நிச்சயம் பரிசு உண்டு.

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பரே.

      பரிசுக்காக எழுதவில்லை. மனித பண்புக்காக எழுதினோம். எந்நிலையிலும் மனிதனாக வாழ வேண்டும்.

      //ஒருபோதும் மேன்மக்கள் விளைபோகார்//

      Delete
  2. // ஒருநாளின் பசிப்போக்கும் கையூட்டு - ச்சீ !
    ஒருபோதும் மேன்மக்கள் விலைபோகார்... //

    பல உணர வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தினுக்கு நன்றி.

      பலர் உணர வேண்டிய வரிகளாக பாடலின் கருவை எடுத்துக் காட்டியமைக்கு நன்றிகள் பல.

      தொட்டால் சினுங்கிப் போல் கையூட்டுக்கு "ச்சீ ! வேண்டாம்" என்ற உணர்வு மனிதனின் உணர்வு என்பதை ஞாபகம் செய்ய வேண்டிய நிலைக்கு இன்று அரசியல் மட்டும்மன்றி வாழ்வில் சூழல்கள் உருவாகிவிட்டனவே !

      Delete
  3. நாட்டின் நலன் நாடி ..
    எழும் கவி ..
    வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றிகள் பல.

      Delete
  4. சூல்நிலைகேற்ற கவி ..
    விழிப்புணர்வு தரும் கவி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாக்காளர்கள் விழிப்புணர்வு அவசியம் பெற வேண்டும்.
    இல்லையேல் தவறான வழிகளில் பணம் சேர்க்கும் குணம் தழைத்துவிடும். அநியாயங்கள் நியாயமாகப் போய்விடும். இத்தகைய மலேரியா நோயை நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும். களைகளை அகற்றாவிடில் வல்லரசு கனவாகவேப் போய்விடும்.

    தங்கள் வாழ்த்தினுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  6. பொறுப்புள்ளக் குடிமகனின் அடையாளம்
    பொறுப்புடன் எழுதப்பட்ட நல்லுபதேசம்
    விருப்புடன் நல்லோர்க்கு வாக்களிக்க
    வீணாக கையூட்டு நமக்கெதற்கு.!

    ReplyDelete
    Replies
    1. விருப்புடன் நல்லோர்க்கு வாக்களிக்க
      வீணாக கையூட்டு நமக்கெதற்கு ?
      மருவிலா உந்தனது மனதினிலே
      மதிமிகுந்த முத்தான பின்னோட்டம்
      தரும்உம் எண்ணங்கள் வலுவூட்டும்
      தரம்மிகு நல்லதொரு கருத்துக்கள்
      அருமையின் வரிசையில் அணிசேர்க்கும்
      அதனின் சொற்கூட்டில் சொக்கினேனே.

      Delete
  7. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. கையூட்டு அல்லது இலஞ்சம் என்பது, ஊழலின் ஒரு வடிவம் ஆகும். வாங்குபவர் தனது கடமைகளுக்குப் பொருத்தமில்லாத வகையில், அல்லது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்காகப் பணம் அல்லது அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதை இது குறிக்கும். கையூட்டு ஒரு குற்றம் ஆகும். பிளாக்கின் சட்ட அகரமுதலி (ஆங்கிலம்), பொது அல்லது நீதிச் சேவையில் உள்ள அலுவலர் அல்லது பிற பணியாளர் ஒருவருடைய செயல்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன் பெறுமதியான ஏதாவது ஒன்றை வழங்க முற்படுதல், கொடுத்தல், வாங்குதல் போன்றவை கையூட்டு ஆகும் என வரையறுக்கின்றது.

      Delete
    2. வாக்களிக்க கையூட்டு (Notes-for-vote அல்லது cash-for-votes scandal) என்பது இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சூலை 22, 2008 அன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மன்மோகன் சிங் தலைமையிலான பெரும்பான்மை கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, பா.ஜனதா கட்சி உறுப்பினர்களுக்கு பணம் வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினைக் குறிக்கும். இந்திய அரசு இந்திய அமெரிக்க அணுவாற்றல் உடன்பாட்டின்படி பன்னாட்டு அணுசக்தி முகமையை நாடியதை எதிர்த்து இந்தக் கூட்டணி அரசிற்கு அமைச்சரவையில் பங்கேற்காது வெளியிலிருந்து ஆதரவளித்து வந்த மார்க்சிய பொதுவுடமைக் கட்சித் தலைமையிலான இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியதாயிருந்தது.

      Delete
    3. தலைப்பில் எழுதினால் கூகுள்போல் தகவலை அள்ளித்தரும் எங்கள் கூகுள் தாங்களே என்றால் மிகையாகாது.

      Delete
  8. பிரமாதம் பாராட்டுக்கள்.

    அண்மைக் காலமாக கவியன்பன் கலாம் அவர்களின் கவிதைகளைப் படிக்க முடியவில்லை. அந்தக் குறையை இக்கவிதை போக்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. கலாமின் கவிதயால் உறங்கி கிடந்த கவிதை எழுதும் எந்தன் ஆசை முளைவிட்டு தலைகாட்டுகிறது என்பது உண்மை. அதுவே தாங்கள் போன்றோர் பாராட்டுதலையும் பெற்றுத்தருகிறது. எனவே தங்களது பாராட்டுகள் கலாமுக்கும் தான் என்பதில் மகிழ்கின்றேன்.

      தங்களது பாராட்டுகளுக்கு நன்றிகள் பல.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers