.

Pages

Monday, April 28, 2014

[ 3 ] மகவே கேள் ! அறிவுரை தொடர்கிறது...

பெற்றோருக்கு நீ செய்யும் சேவை இறைவன் உனக்கு நற்கூலி தரும் சேவைதான். அது பற்றி இவ்வாரம் பார்ப்போம். பெற்றோர்கள் என்பதை தாய், தந்தை என தனித்தனியாய் ஆராய்வோம்.

தாய்க்கு செய்யும் சேவை : 
பத்து வயது வரை பிள்ளைக்கு சேவை செய்யும் தாய் வளர்த்த  பிள்ளையை பார்த்து தாய்க்கு நம்பிக்கை வரும் தருணம் தம் பிள்ளை தனக்கு உதவியாய் இருக்கும் என்ற நம்பிக்கை தாய்க்கு வரும் தருணம், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக நீ நடந்து கொள்ள வேண்டும்.

பத்து முதல் பதினெட்டு வயது வரை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ள வயது அதனால் நீ ஈடுபடும் எந்த செயலாக இருந்தாலும் அதிலேயே மூழ்கும் நிலை ஏற்படலாம் அதில் முக்கியமான சில விசயங்கள்...

1. நட்பு ( தோழன் அல்லது தோழி )
2. விளையாட்டு
3. கணினி ( கேம் )
4. டி.வி ( சீரியல் மற்றும் சினிமா )

இன்னும் இதர பல காரணங்களால் தாயை கண்டுகொள்ளாமல் இருத்தல்.., தாய்க்கு மன உளைச்சலை ஏற்படுத்தும், தாயவளுக்கு  பிள்ளை தன்னிடமிருந்து பிரிந்து செல்லும் உணர்வு ஏற்படும், அதனை தவிர்க்க தாயவள் சிறு உதவி கோருவாள். சிறு பொருள் கடையில் வாங்கி வர சொல்வாள், உனது ஈடுபாடு அதிகமுள்ள ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு இருந்தாலும், தாயின் கோரிக்கையை நீ நிராகரித்து விடாதே !

இதோ வருகிறேன் அம்மா என்று நீ தலைசாய்த்து சிறு உதவி செய்தால் அது உன்னிடம் இருக்கும் பாசம், நீ தாய் மீது காட்டும் மரியாதைக்கான சான்று
எனவே இது போன்ற தருணத்தை தவறவிடாதே. வாலிப பருவத்தில் உரிமையாய் தாய் மீது கொள்ளும் கோபத்தை தவிர்த்து கொள், தாய்க்கு நல்ல பிள்ளையாய் இரு அது உன் வாழ்நாள் முழுவதும் திருப்தி தரும் என்பதை அறிந்து கொள்  "தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது என்பதை நீ மனதில் கொள் " தாய்க்கு செய்யும் சேவை, தாய் மீது கொள்ளும் பாசம் அன்பும் தான் !

தந்தைக்கு செய்யும் சேவை :
உறவுகள் பற்றி மற்றொரு வலை தளத்தில் எழுதி வந்தேன். அதில் குறிப்பிட்ட ஒரு கருத்தை இதில் பதிய விரும்புகிறேன்...

விவசாயம் செய்யும் தொழிலாளி தான் வீடு திரும்பும் போது களைத்து காணப்படுவார். ஒரு மிடறு தண்ணீர் கொடுத்து உதவும் மகன். எதிர்கால நம்பிக்கையாய் தெரிவான். தந்தையின் வழி காட்டலை செவி சாய்க்கும் மகன் தந்தைக்கு சேவை செய்யும் மகனாய் தெரிவான்.

வாணிபம் செய்யும் தந்தைக்கு உதவியாய்  இருக்கும் மகன் போற்ற படும் மகன் .கருத்து பேதம் களைந்து அமைதி காக்கும் மகன் தந்தையின் உடல் நலம் காக்கும் மகனாவான். வாலிப பருவத்தில் ஈர்க்கப்படும் சில கொள்கைகள் தந்தை மனம் நோகும் செயலாய் அமையலாம். அதனை தவிர்ப்பதே நீ தந்தைக்கு செய்யும் சேவை சிறு சிறு உதவிகள் மூலம் பெற்றோருக்கு நீ செய்யும் சேவை காலத்தால் அழிக்க முடியா சேவையாய் அமையும்.

குருவிற்கு செய்யும் சேவையை அடுத்த பதிவில் காண்போம்.
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

14 comments:

 1. சிறந்த அறிவுரைகள்... பேணி நடந்தால் நன்மை பயக்கும்

  ReplyDelete
  Replies
  1. அறிவுரை ...ஒருவரிடம் போய் சேர்ந்தாலும் எனக்கு
   பெரிய நன்மை கிடைக்கும்

   Delete
 2. உரை நடைகள் மெதுவாய் அடியெடுத்து வைக்கின்றன சிறுவர்களுக்கு பாடம் புகட்டும் விதம் சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அதே ஆசைதான் ..சிறார்கள் கற்க பெரியோர்கள் ..முயற்சிக்க வேண்டும்

   Delete
 3. மிகச்சிறந்த பகிர்வு

  ReplyDelete
 4. அருமையான பதிவில் ஆழமான கருத்துக்கள்.தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ..கருத்து ..என் எழுத்துக்கு ஊக்கம்
   தருகிறது

   Delete
 5. // வாலிப பருவத்தில் ஈர்க்கப்படும் சில கொள்கைகள் தந்தை மனம் நோகும் செயலாய் அமையலாம். அதனை தவிர்ப்பதே நீ தந்தைக்கு செய்யும் சேவை//

  காலத்திற் கேற்ற அறிவுரை

  ReplyDelete
  Replies
  1. ஆம் ..சகோ
   இக்கால இளைஞனின் மன ஓட்டங்கள் வெகு வித்தியாசமாக உள்ளது இறக்கம் ,அன்பு பாசம்
   போன்ற விசயங்கள் மிக அற்ப அளவே உள்ளது ..
   தங்களின் கருத்திற்கு நன்றி

   Delete
 6. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு நன்றி ...
   எங்கள் தளம் உங்கள் மூலம் பலருக்கு செல்வதில்
   மகிழ்ச்சியே .

   Delete
 7. அன்பின் அதிரை ஊற்றே, உங்களின் ஆக்கத்திற்கு நீண்ட நாடகளுக்குப்பின் பின்னூட்டம் வரைகின்றேன். இடையில் எனக்கு ஏற்பட்ட வேலைகள், விடுப்பிலும் தொடர்ந்த பணிகள் காரணீயமாக இத்தளம் மட்டுமன்று எத்தளத்திலும் யான் ஈடுபாடு இன்றி இருந்தேன். இறையருளால், இப்பொழுது ஓரளவுக்க்குச் சுமைகள் குறைந்தன; உங்களின் ஆக்கம் படித்து மனத்தில் எழுதும் ஆர்வங்கள் நிறைந்தன.

  ReplyDelete
 8. தங்கள் வருகை நல்வரவாகுக ..
  பின்னூட்டம் மூலம் நட்பை பலமாக்கும் தங்கள் எழுத்து
  என்னை மகிழ்விக்கிறது

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers