kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, April 23, 2014
ஒழித்திடு தேர்தல் பெரும்செலவு !
தேர்தல் திருத்தங்கள்
.....திறம்படச் செய்கின்றார்
ஆர்தல் செய்திகளே
.....அனைவரும் மகிழ்கின்றார்
வீதி என்கினுமே
.....விளம்பரம் ஒழிந்தனவே !
மீதிச் செயல்களிலும்
.....விரயமும் தவிர்க்கனுமே !
சுத்தம் நிறைந்திட்டே
.....சுவர்களும் இருக்கிறதே !
பித்தம் தலைக்கேறி
.....பிரச்சினை கிளம்பினதே !
"வேண்டாம் வராதீர்கள்"
.....மலிந்திடும் செய்திகளும்
சீண்டும் வழிமுறையும்
.....சிலச்சிலத் தோன்றியதே !
வேஷம் பலகண்டோம்
.....வேடிக்கைகள் அரங்கேற்றம்
தோஷம் தொடர்கிறது
.....தொல்லைகள் மலிந்தனவே
சட்டம் செயல்பாட்டில்
.....சலிப்புகள் தோன்றினவே
திட்டம் நடைமுறையில்
.....திணறின வியாபாரம்
பாவ மந்திரியே
.....பகுதியில் வரவேண்டாம் !
கோபம் கொப்பளித்தே
.....கொட்டினர் குடிமக்கள்
சேதம் கைசேதம்
.....சேர்த்திட தவிப்புகளாம்
தூதும் துடிக்கிறதாம்
.....தொகைகள் கைமாற !
தூண்டும் செய்கைகளும்
.....தோல்விகள் காணவில்லை !
வேண்டும் பொறுமைகளும்
.....விரக்தியில் வெடித்தனவே !
நாள்கள் நகர்ந்துவிடும்
.....நடந்தவை வடுக்களாகும்
தாள்கள் கரைந்துபோகும்
.....தவிப்புகள் மிஞ்சிவிடும்
வாக்கு தராவிட்டால்
.....மாறிடு இடத்தைவிட்டு !
தாக்கு பிடிக்காதே
.....தந்திடு எமினவீட்டை !
போக்கு இதனையுமே
.....புகைத்திட விடவேண்டாம்
தாக்கம் அறிவுடனே
.....தகுந்தவர் அகற்றனுமே
பணத்தின் நடமாட்டம்
.....பலவும் தடுத்திட்டாய் !
குணங்கள் மாறுமுன்னே
.....கொள்கைகள் வகுத்திடுவீர்
திண்மைக் கொண்டிட்டே
.....திறம்பட வகுத்திடனும்
உண்மை உரைக்கின்றேன்
.....ஒழித்திடு பெரும்செலவு
வாழ்க சீர்திருத்தம் !
.....வரணும் சிறப்புடனே !
வீழ்க விரயங்கள் !
.....வேணுமே வல்லரசு !
நபிதாஸ்
தேமா காய் விளம் காய் வாய்ப்பாடு
.....திறம்படச் செய்கின்றார்
ஆர்தல் செய்திகளே
.....அனைவரும் மகிழ்கின்றார்
வீதி என்கினுமே
.....விளம்பரம் ஒழிந்தனவே !
மீதிச் செயல்களிலும்
.....விரயமும் தவிர்க்கனுமே !
சுத்தம் நிறைந்திட்டே
.....சுவர்களும் இருக்கிறதே !
பித்தம் தலைக்கேறி
.....பிரச்சினை கிளம்பினதே !
"வேண்டாம் வராதீர்கள்"
.....மலிந்திடும் செய்திகளும்
சீண்டும் வழிமுறையும்
.....சிலச்சிலத் தோன்றியதே !
வேஷம் பலகண்டோம்
.....வேடிக்கைகள் அரங்கேற்றம்
தோஷம் தொடர்கிறது
.....தொல்லைகள் மலிந்தனவே
சட்டம் செயல்பாட்டில்
.....சலிப்புகள் தோன்றினவே
திட்டம் நடைமுறையில்
.....திணறின வியாபாரம்
பாவ மந்திரியே
.....பகுதியில் வரவேண்டாம் !
கோபம் கொப்பளித்தே
.....கொட்டினர் குடிமக்கள்
சேதம் கைசேதம்
.....சேர்த்திட தவிப்புகளாம்
தூதும் துடிக்கிறதாம்
.....தொகைகள் கைமாற !
தூண்டும் செய்கைகளும்
.....தோல்விகள் காணவில்லை !
வேண்டும் பொறுமைகளும்
.....விரக்தியில் வெடித்தனவே !
நாள்கள் நகர்ந்துவிடும்
.....நடந்தவை வடுக்களாகும்
தாள்கள் கரைந்துபோகும்
.....தவிப்புகள் மிஞ்சிவிடும்
வாக்கு தராவிட்டால்
.....மாறிடு இடத்தைவிட்டு !
தாக்கு பிடிக்காதே
.....தந்திடு எமினவீட்டை !
போக்கு இதனையுமே
.....புகைத்திட விடவேண்டாம்
தாக்கம் அறிவுடனே
.....தகுந்தவர் அகற்றனுமே
பணத்தின் நடமாட்டம்
.....பலவும் தடுத்திட்டாய் !
குணங்கள் மாறுமுன்னே
.....கொள்கைகள் வகுத்திடுவீர்
திண்மைக் கொண்டிட்டே
.....திறம்பட வகுத்திடனும்
உண்மை உரைக்கின்றேன்
.....ஒழித்திடு பெரும்செலவு
வாழ்க சீர்திருத்தம் !
.....வரணும் சிறப்புடனே !
வீழ்க விரயங்கள் !
.....வேணுமே வல்லரசு !
நபிதாஸ்
தேமா காய் விளம் காய் வாய்ப்பாடு
Subscribe to:
Post Comments (Atom)
சரியான நேரத்தில் வந்த சிறந்த விழிப்புணர்வு ஆக்கம் !
ReplyDeleteசரியான நேரத்தில் வந்தே
Delete.....தகுதியானத் தூண்டுதல் தந்தீர்
புரியாத கவியின் ஆக்கம்
.....புனைந்திடவும் பெற்றேன் ஊக்கம்
சொரிகின்ற கலாமின் வார்த்தை
.....சுதாரித்தே சொக்கிச் சேர்த்தேன்
தெரிந்திடவும் முயன்றுத் தேடும்
.....திடமான உள்ளம் நாடும்.
நாடும் மனதினில் நல்லதான நோக்கமும்
கூடும் முயற்சியால் கொண்டு.
காலத்தே ஊட்டும் கவிகள் விதைகளாலும்
ஞாலத்தில் வேண்டும் நலன்
வணக்கம்
ReplyDeleteகாலத்துக்கு ஏற்ப விழிப்புணர்வு நன்றாக உள்ளது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உள்ளதைச் சொன்னாலே உள்ளம் இனித்திடும்
Deleteஅள்ளுகிறேன் உள்ளுணர்வை ஆழ.
இன்றைக்கு பொருத்தமான பகிர்வு...
ReplyDeleteபகிர்வுகள் பண்படப் பார்க்க எழுதத்
Deleteதகிடுதத்தம் தோன்றினால் தடு.
நல்லதொரு கவிதந்தீர்
ReplyDeleteநாட்டில் உள்ளவர்கள்
உணர்ந்திடவே
பொல்லாதவர்
பெருத்துவிட்டர்
பொறாமையில்
பகைத்துக் கொள்வர்
நல்லோர்கள்
நாற்காலியில் அமர
நல் வாக்கு
அளித்திடுவீர்
நல்லோர்கள் இந்நாட்டில் நல்லாட்சி தந்திட
ReplyDeleteநல்வாக்கு எல்லோரும் நல்கிடனும் - பொல்லாதார்
தந்திடும் கையூட்டு தம்மை தரம்தாழ்த்தும்
நிந்தித்தே நீக்கியே நில்.