kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, April 4, 2014
முகமூடிகள் !?
இந்தியாவை ஆள்வது யார் ?
இலகுவாக அந்தயிந்த கட்சி சொல்லிடுவார்
எந்திரக் கதியில் வாழ்வுகள்
இதனால் யாவரும் சிந்திப்பதில் நோவுகள்
மந்திரம் எதுவும் இல்லை
மயக்கிடும் பணத்தின் ஆட்சி வலிமை
தந்திரமாய் உள்ளனர் சிலர்
தயவுகளால் மனசாட்ச்சி விட்டனர் பலர்
இலட்சங்கள் செலவிட சட்டம்
இதனால் இலட்ச்சியங்கள் வார்த்தையில் மட்டும்
பலக்கோடிகள் வேண்டும் வெல்ல
பாமரனை விலைக்கு வாங்க மெல்ல
சுலபமாக வெல்லவே திட்டம்
சொந்த பணத்தை இழக்க வாட்டம்
பலப்பலபச் சீமன்களிடம் கதைப்பார்
பலலட்சங்கள் கோடிகள் அவர்கள் விதைப்பார்.
பெற்றதனால் கைகட்டி நிற்பார்
பெருமை பேசும் மந்திரியும் மற்றவரும்
உற்றதேசம் வளர்ச்சி திட்டம்
உருவாக்கிடுவர் நன்றியினில் அவர்சொல் கேட்டும்
முற்றும் இவர்களின் முகமூடியில்
முழுவதும் சீமான்களே அந்தரங்க அகஆட்சியில்
குற்றம் தெரிந்தே செய்திடுவார்
கூனியும் நிமிர்ந்தே சுயலாபம் சேர்த்திடுவார்.
அந்தோ பாவம் குடிமக்கள்
அறியார் பாவம் இவர்கள் அதிகுடிமாக்கள்
இந்த இலட்ச்சங்கள் கோடிகள்
இல்லாத ஆட்சி மாற்றம் நாடிடுங்கள்
சிந்தனை செய்திட வேண்டாமா
சீர்திருத்தம் அடிப்படை அரசியலில் கொண்டிட்டே
எந்த வழியை திறந்தாலும்
ஏற்றம் எல்லோரிலும் இருப்பதே அறம்தானே
சுகமாய் பேசும் வல்லரசும்
சுலபமாய் பெருந்தொழில் அல்லும் வல்லவனும்
அகமாய் இருந்தே வகுத்திடும்
அரசியல் அதர்மம் இழிவழிகள் தகுமாமோ
உகந்த வல்லரசு ஆகிடுவோம்
உடந்தை அரசியல் அடியோடே நீக்கிடுவோம்
முகமூடிகள் ஆள வேண்டாமே
முழுவதும் மக்கள் சிந்தனை ஆள வேண்டுமே.
சுதந்திரம் இன்னும் கிடைக்கலையே
சுத்தம் எங்கும் எதிலும் காணலையே
இதமாய் பேசி வலைக்கின்றார்
இவர்களும் அடிமை வாழ்வில் வீழ்கின்றார்
முதலில் வாக்காளர் வேட்பாளர்
முழுவதும் சுயமாய் செயல்தனில் காட்டனுமே
அதர்மம் அழித்திட கூடிடுவோம்
அன்றே யாவரும் சுதந்திரம் அடைந்திடுவோம்.
நபிதாஸ்
இலகுவாக அந்தயிந்த கட்சி சொல்லிடுவார்
எந்திரக் கதியில் வாழ்வுகள்
இதனால் யாவரும் சிந்திப்பதில் நோவுகள்
மந்திரம் எதுவும் இல்லை
மயக்கிடும் பணத்தின் ஆட்சி வலிமை
தந்திரமாய் உள்ளனர் சிலர்
தயவுகளால் மனசாட்ச்சி விட்டனர் பலர்
இலட்சங்கள் செலவிட சட்டம்
இதனால் இலட்ச்சியங்கள் வார்த்தையில் மட்டும்
பலக்கோடிகள் வேண்டும் வெல்ல
பாமரனை விலைக்கு வாங்க மெல்ல
சுலபமாக வெல்லவே திட்டம்
சொந்த பணத்தை இழக்க வாட்டம்
பலப்பலபச் சீமன்களிடம் கதைப்பார்
பலலட்சங்கள் கோடிகள் அவர்கள் விதைப்பார்.
பெற்றதனால் கைகட்டி நிற்பார்
பெருமை பேசும் மந்திரியும் மற்றவரும்
உற்றதேசம் வளர்ச்சி திட்டம்
உருவாக்கிடுவர் நன்றியினில் அவர்சொல் கேட்டும்
முற்றும் இவர்களின் முகமூடியில்
முழுவதும் சீமான்களே அந்தரங்க அகஆட்சியில்
குற்றம் தெரிந்தே செய்திடுவார்
கூனியும் நிமிர்ந்தே சுயலாபம் சேர்த்திடுவார்.
அந்தோ பாவம் குடிமக்கள்
அறியார் பாவம் இவர்கள் அதிகுடிமாக்கள்
இந்த இலட்ச்சங்கள் கோடிகள்
இல்லாத ஆட்சி மாற்றம் நாடிடுங்கள்
சிந்தனை செய்திட வேண்டாமா
சீர்திருத்தம் அடிப்படை அரசியலில் கொண்டிட்டே
எந்த வழியை திறந்தாலும்
ஏற்றம் எல்லோரிலும் இருப்பதே அறம்தானே
சுகமாய் பேசும் வல்லரசும்
சுலபமாய் பெருந்தொழில் அல்லும் வல்லவனும்
அகமாய் இருந்தே வகுத்திடும்
அரசியல் அதர்மம் இழிவழிகள் தகுமாமோ
உகந்த வல்லரசு ஆகிடுவோம்
உடந்தை அரசியல் அடியோடே நீக்கிடுவோம்
முகமூடிகள் ஆள வேண்டாமே
முழுவதும் மக்கள் சிந்தனை ஆள வேண்டுமே.
சுதந்திரம் இன்னும் கிடைக்கலையே
சுத்தம் எங்கும் எதிலும் காணலையே
இதமாய் பேசி வலைக்கின்றார்
இவர்களும் அடிமை வாழ்வில் வீழ்கின்றார்
முதலில் வாக்காளர் வேட்பாளர்
முழுவதும் சுயமாய் செயல்தனில் காட்டனுமே
அதர்மம் அழித்திட கூடிடுவோம்
அன்றே யாவரும் சுதந்திரம் அடைந்திடுவோம்.
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
// எந்த வழியை திறந்தாலும்
ReplyDeleteஏற்றம் எல்லோரிலும் இருப்பதே அறம்தானே //
உணர வேண்டிய வரிகள்...
அதுதானே ஜனநாயகம். சமத்துவம். இதனை அடிப்படையாகக் கொண்டு சட்டம் வகுக்கவில்லையாயின் அது சுய நலமே.
Deleteநன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
வரிகள் ஒவ்வொன்றும் சிறந்த கருத்துகளை தாங்கி வருகின்றன !
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
சிந்திப்பவர்களே பற்றுகின்றனர்.
Deleteநன்றி சேக்கனா M. நிஜாம் அவர்களே.
வாக்காளரின் ஆதங்கம் ...
ReplyDeleteதங்களின் கவியில் தெரிகிறது ...
ஆள்வது யார் ...முக்கியம் அல்ல
வாழ்வது யார் என்பதே முக்கியம்..
நல்ல கவி வாழ்த்துக்கள்
பல அரசியல் ஆட்ச்சியாளருக்கு பின்னால் சுயநலவாதிகள் ஆட்சியை வழி நடத்துகின்றனர். இதற்க்கு பெரும் செலவு அரசியல் முறை அடித்தளமிடுகிறது. இது மாற வேண்டும். அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்றால் இந்த பெரும் செலவு தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.
Deleteநன்றி அதிரை சித்திக் அவர்களே. அதனையே தாங்கள் //ஆள்வது யார் ...முக்கியம் அல்ல
வாழ்வது யார் என்பதே முக்கியம்..// என்று எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.
முகமூடி இட்டவர் முழுப்பொழுதும்
ReplyDeleteஅகம் மூடி அலைந்திடுவர் அருவெறுப்பாய்
சினம்கொண்டுப் பகையான சிநேகிதனும்
சேர்ந்திடுவார் இவ்வேளை பணம்பறிக்க
மனம்கொண்டு நல்லாட்சி அமைந்திடவே
மக்கள் தம் சுயமாக சிந்தித்து வாக்களிப்பீர்
நபிதாஸின் உபதேசம் கவிவரியில்
நலமாக்கி மக்கள் தான் உணரவேண்டும்
சபிக்காத நல்லோர்கள் வந்தமர
செவிகேட்டு என்றென்றும் மகிழ வேண்டும்
முகமூடி இட்டவர் முழுப்பொழுதும்
Deleteமுயல்வார் அடுத்தவரின் அகம்கொண்டு
அகமூடி ஆற்றும் ஆளுமைகள்
ஐயகோ ! அதழிவைத்தான் தருமே !
இகத்தின் வாழ்வில் பணத்தை
ஈர்க்க பகைகளும் நண்பனாகின்றன
சுகமான வாழ்வு சமதர்மத்தில்
சார்ந்துள்ளதை மனிதம் ஏற்காததேன் ?
என்பன சிந்தனையைக் கிளறிய அதிரை.மெய்சா தங்களுக்கு நன்றிகள் பல.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான விளக்கம்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
எமது நாட்டில் முகமூடிகள் தொடர்ப்பாக 1895 க்கு முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரசித்திப் பெற்ற கதைகளை நடிக்கப்பட்ட பாத்திரங்களுக்காக முகமூடிகளை உபயோகிக்கப்பட்டுள்ளது. இந் நாட்டில் முகமூடி கலை ஆரம்பமாகி இருப்பது விஜய அரசன் உட்பட்ட தொகுதியினர் இங்கு வருகை தந்ததன் பின்னரே. பிசாசுகளை வழிபட்ட கால கட்டத்தில் தென்கிழக்கு இந்தியாவில் இருந்து இங்கு வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. இக் கருத்துக்களை சிங்கள மக்கள ஒரு கலையாக முன்கெண்டு வரப்பட்டுள்ளனர். (விஜய மற்றும் பண்டுவாசதேவ அரசர்களுக்கு குவேனியால் இடப்பட்ட சாபத்தை விவரிக்கும் குவேனி அஸ்ன எனும் நூல் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் கோட்டை இராஜதானியில் இரிந்து எழுதப்பட்டுள்ள நூலில் உட்பட்டுள்ளது.)
Deleteகி.பி. 16 ஆம் ஆண்டில் புராதன ஐரோப்பியர்கள் நாட்டை ஆண்ட காலகட்டத்தில் தென் இந்தியாவில் இருந்து இந் நாட்டுக்கு வந்துள்ள முகமூடிகளுடனான ஒரு நடன குழுவின் மூலம் பேய்யாட்டங்கள், கோலம் நடனங்கள் இலங்கையில் பிரபல்யம் அடைந்திருப்பதாக புத்தகங்களில் பாரம்பரிய கதைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு இக்கால கட்டத்தின் போது முகமூடிகளுடன் கோலம் நடனம் இணைந்திருப்பதாக குறிப்பிடலாம். இவ்வாறே பல நாடுகளில் முகமூடி கலை காணப்படுவதோடு பர்மா, கிரேக்கம், றோமன் மற்றும் பிற்காலத்தில் ஐரோப்பிய முகமூடிகள் மற்றும் இலங்கை முகமூடிகள் இடையில் ஒரு வகையான சமானத்துவம் காணப்பட்டது. ஆயினும் இலங்கையர்களின் முகமூடிகளை ஒரு தனிப்பட்ட கலாச்சார பாரம்பரியத்திற்கும் கலை முறைக்கும் அமைவாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
Deleteஇந்தியாவின் கேரள மற்றும் மலபார் பகுதிகளில் இருந்து எமக்கு பேய்யாட்டங்கள் மற்றும் முகமூடிகள் கிடைத்திருப்பதோடு எமது கலைஞர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப இவற்றை வர்ணங்களாலும் வடிவங்களாலும் அலங்காரப் படுத்தப்பட்டுள்ளனர். புராணக் காலத்தில் இருந்தே இலங்கையில் முகமூடிகளை நிர்மாணித்து நடனமாடுகின்ற கலை நடை முறையில் இருந்திருப்பதற்காக சிங்கள இலக்கிமும் சாட்சி கூறுகின்றது. இதற்கான நிதர்சனங்களை ‘லோவெட சங்கராவ’ மற்றும் ‘குத்தில கவிய’ எனும் நூல்களில் வரும் இரு கவிதைகளால் தெளிவு படுத்திட முடியும்.
ReplyDeleteKala rasa mudu yojana kara pem
ReplyDeleteGala suwandethi senedu manaram
Lala abarana nisi lesa serasum
Pala giya weni bahu ruu kolam
Kiyamin gee rasa miuru
Thabamin padha thala anuru
Vandimin thuna matha nuwaru
Kelimin yathi wendi wanduru
தற்போது, முகமூடிகள் கலை பெந்தர, அம்பலாங்கொடை, வதுகெதர மற்றும் இலங்கையின் மேற்கு, தென் மாகாணங்களில் ஒருசில குடும்பங்கள் மத்தியில் நடைப்பெற்று வருகிறது. முகமூடிகள் உற்பத்தி செய்வதில் மென்பாலை மற்றும் ‘திய கந்துரு’ போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இம் மர வகைகளில் முக்கியத்துவம் யாதெனில் பாரமற்ற தன்மை மற்றும் உறியுமே. முகமூடிகளை ‘சன்னி பண்டார’, ‘ராக்ஷ கார்ண’ மற்றும் ‘யகஷ கண்டம்’ என ஒவ்வொரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதோடு இத்துடன் இன்னும் பல் வகையான பொருட்களும் காணக்கிடைக்கின்றன. புராணத்தில் ஒரு பெருமிதமான கலையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள முகமூடிகளை சமய வழிபாடுகளிலும் உபயோகித்திருப்பதோடு இக் கலையை எதிர்கால சந்ததியினருக்கும் பேணி வழங்கும் பொறுப்பு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் பரந்திருக்கும் கலாசார நிலையங்கள் மூலம் அழியாமற் போகாமல் அரச அனுசரணையின் கீழ் உரிய கருத்திட்டங்களை செயற்முறைப் படுத்தப்பட்டுள்ளது.
Deleteபோலிகள் நிறைந்த வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை முகமூடிகள்??? துக்கத்தை மறைத்து சிரிப்பதுபோல.. சிரிப்பை அடக்கி துக்கப்படுவது போல.. பொறாமையை உள்வைத்த பாராட்டுக்கள் போல, அவமானங்களை தன்வைத்த வாழ்த்துக்கள் போல, துரோகம் உள்ளடக்கிய நட்பைப் போல.. நட்பெனும் பெயரில் காதல் போல.. காதல் பொய்யில் எழும் காமம் போல.. உண்மையை மறைக்க முனையும் பொய்களைப் போல.. இன்னும் இன்னும் எவ்வளவோ..
Deleteஅன்றாட வாழ்வின் இம்முகமூடிகளைக் களைந்துவிடின், நொடிளுக்கான நகர்தல்கள் பரிதாபத்திற்குரியதே.. ஆயினும், நம்மை நாமாகக் காட்ட நமக்குத் துணிவில்லையென்பதே இம்மூடிகளுக்கான ஆதாரம். எச்சூழலையும், இயல்பென ஏற்றுக்கொள்ளவும், யதார்த்தமாய்ப் பகிர்ந்துகொள்ளவும் எவருக்கும் மனமிருப்பதில்லை இந்நாட்களில். உண்மை முகம் மறைக்கும் போலியாய், எல்லோருக்கும் தேவைப்படுகிறது ஏதாவதொரு வேஷங்கள்.
அர்த்தமற்ற இந்நடிப்புகளில் மறைந்து மறந்துபோய்க்கொண்டிருக்கிறது நமக்கான இயல்புகள். சட்டென உணர்வுகளை வெளிப்படுத்தி, பின் யதார்த்தத்திற்குத் திரும்பி, விளைவுகளை ஏற்றுக்கொண்டு, உண்மையாய் இருக்க எவரொருவரும் தயாராய் இருப்பதில்லை எப்போதும்.
வருங்காலம் இனிமையாய் இருக்குமென்ற இருமாப்பில், நிகழ்காலத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்..
எவரையும் பாதிக்காதமைக்கு வந்துபோகட்டுமென பாசாங்கிட்டாலும், எப்போதும் அடுத்தவருக்காய் வாழ்வதற்கே என உருமாறிப்போகிறது, பாழாய்ப்போன நம் வாழ்க்கை.
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் உலகின் பழமையான முகமூடிகள் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் உலகில் நாகரீகம் தொடங்கிய ஆதிகாலத்திய முகமூடிகள் இடம் பெற்றுள்ளன. 9000 வருடங்கள் கொண்ட இந்தக் கல் முகமூடிகள் இறந்த முன்னோர்களின் ஆவியை ஒத்திருக்கும் விதத்தில் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. இந்த முகமூடிகளில் கண்களுக்கான ஓட்டைகள், சிறிய மூக்கு மற்றும் பற்களின்
Deleteஅமைப்பு ஆகியவை தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜெருசலத்திலிருந்து 20 மைல் சுற்றளவிற்குள்ளேயே இந்த முகமூடிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பகுதியே யூத மலைகள் நிரம்பிய யூத பாலைவனப்பகுதியாக அந்நாளில் இருந்துள்ளது என்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் ஜேம்ஸ் ஸ்னிடர் குறிப்பிடுகின்றார். மட்பாண்ட காலத்திற்கும் முந்தைய கற்காலத்தில் இந்த முகமூடிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறும் கண்காட்சி மேற்பார்வையாளர் டெப்பி ஹெர்ஷ்மேன், நாகரீகத்தின் முதல் படைப்பாளிகள் காலத்தைச் சேர்ந்தவை இவை என்றும் குறிப்பிட்டார்.
ஆதிகாலத்திய இனவாத சடங்குகளின் சில அரிய காட்சிகளாகக் கூட இந்த முகமூடிகள் இருக்கக்கூடும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். மனிதன் காட்டுவாசி வாழ்க்கையைக் கைவிட்டு விவசாயம் போன்ற தொழில்களைத் தொடங்குவதற்கான ஒரு திருப்புமுனையாக இந்த படைப்புகள் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தும் அவர்களிடத்தில் நிலவுகின்றது.
தகவல் களஞ்சியம் அன்பர் கோ.மு.அ. ஜமால் முஹம்மது தங்களுக்கு நன்றிகள் பல.
Deleteதாங்கள் எழுத்தில் உள்ள
//எத்தனை எத்தனை முகமூடிகள்??? துக்கத்தை மறைத்து சிரிப்பதுபோல.. சிரிப்பை அடக்கி துக்கப்படுவது போல.. பொறாமையை உள்வைத்த பாராட்டுக்கள் போல, அவமானங்களை தன்வைத்த வாழ்த்துக்கள் போல, துரோகம் உள்ளடக்கிய நட்பைப் போல.. நட்பெனும் பெயரில் காதல் போல.. காதல் பொய்யில் எழும் காமம் போல.. உண்மையை மறைக்க முனையும் பொய்களைப் போல.. இன்னும் இன்னும் எவ்வளவோ..// போல்
அரசியல் பெரும் செலவான இந்த நடைமுறை தேர்வுமுறையில் பண வல்லவர்கள் இந்த அரசியலார் முகமூடியில் ஆட்சி செய்கின்றனர்.