.

Pages

Thursday, August 28, 2014

[ 10 ] மகவே கேள் : தருணம் !

மகவே கேள் : தருணம் ! 
சில புத்திசாலிகள் வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்கள். தக்க தருணம் வரும்போது அந்த வாய்ப்பை பயன் படுத்தி வாழ்க்கையை வெற்றியின்பால் வழி  நடத்தி செல்வார்கள். சிலருக்கு பலவாய்ப்புகள் அவர்கள் காலடியில் கொட்டி கிடக்கும் ஆனால் அதை பயன் படுத்த தெரியாமல் .நழுவ விட்டு விடுவார்கள். இதுவே இந்த பதிவில் எழுத விரும்புகிறேன் .

* இளம்வயதில் தாய் தந்தை ..சகோதர பாசம் கிடைப்பதில் கவனம்
செலுத்து.அந்த வாய்ப்பை நழுவ விடாதே .

* படிக்கும் பருவத்தில் நல்ல கல்வி பெறுவதில் கவனம் செலுத்துதல் .

* உனக்குள் ஒழிந்திருக்கும் திறமை என்ன என்பதை அறிந்து .அந்த திறமையை  வளர்த்துக்கொள் .அது உன் எதிர்கால வாழ்வில் ஒளி ஏற்ற வல்லதாக இருப்பின் அதனை ஈர்த்துகொள்.

* இவை அல்லாது நீ பயணிக்கும் வாழ்வில் சந்திக்கும் நபர் மூலம்
ஏற்படும் நட்பினால் கிடைக்கும் வாய்ப்பு  அதனையும் நழுவ விட்டு
விடாதே . 

* ஏதாவது ஒன்றின் மேல் ஆசை படு .வாய்ப்பு உன்னை தேடி வரும் .

ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த ஒருவர் சிறு வயது முதல்
தனது வாழ்நாள் லட்சியம் என்று ஒரு குறிக்கோள் வைத்திருந்தார்
வழக்குரைஞராக வரவேண்டும் என்ற எண்ணம் .அதற்க்கான வாய்ப்பு
வந்தது .மிக இலகுவாக அக்கல்லூரியில் சேர்ந்து பயின்று தனது
வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றி கொண்டார் .

கவிஞர் வாலி அவர்கள் திருச்சி வானொலி நிலையத்தில் .நிகழ்ச்சி
தயாரிப்பளாக இருந்தார் .அவருக்கு கவிதை எழுதும் திறமை இருந்தது வாய்ப்பு வந்தது .தருணத்தை வீணாக்காமல் சென்னை வந்து லட்சியத்தினை நிறைவேற்றி வாழ்வில் வெற்றி கண்டார் .

மறைந்த இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் சிறந்த படைப்பாளி
பாரதிராஜா அவர்களின் படத்தை பாராட்டி ஒரு கடிதம் எழுதினார்
ஒவ்வொரு காட்சியையும் விளக்கி பாராட்டிய விதம் பாரதி ராஜா
அவர்களுக்கு பிடித்து போகவே தனக்கு உதவியாளனாக அழைத்தார்
வாய்ப்பை பயன் படுத்தி .தக்க தருணத்தில் புகழ் ஈட்டிகொண்டார் .

எத்தனையோ பேர் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டு .நான்
அப்படி இருக்க வேண்டிய ஆள் இப்படி ஆகி விட்டேன் .

நேரடியாக பார்த்த நபர் அதிராம்பட்டினத்தில் சாதாரன நபராக காட்சி
அளித்தார் .நீதி கட்சி உடைந்த போது அறிஞர் அண்ணா  அவர்கள்
தனது கட்சி  தி.மு.க வில் முக்கிய பொறுப்பு வகிக்க அழைத்தார் .அந்த தருணத்தை பயன் படுத்த தவறியதால் அவர் அரசியல் வாழ்வு சூன்ய மாகி போனது .

தருணத்தை பயன் படுத்துவது எப்படி ..என்பதை அறிந்து கொண்டீர்களா ...?
அடுத்த தலைப்போடு  மீண்டும் சந்திக்கிறேன்.
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

3 comments:

 1. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பெடுத்து அதற்க்கான விளக்கங்களை ஆதாரத்துடன் பதிந்து வருகிறீர்கள்.

  தொடர்ந்து பதிந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்துங்கள்.

  ReplyDelete
 2. //ஏதாவது ஒன்றின் மேல் ஆசை படு .வாய்ப்பு உன்னை தேடி வரும் .//

  ஆசை ஏற்பட்டால்தான் அசைவு உண்டாகும். அசைவு உண்டானால் செயல்கள் பிறக்கும். செயலில் நம்பிக்கையைப் பொறுத்து ஆசைகள் நிறைவேறும்.

  ReplyDelete
 3. வரும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்தல் சிறந்தது.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers