kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Sunday, November 30, 2014
முதியவனின் முணங்கல் !
எனது வாலிப காலத்தில் கடும் உழைப்பால் கை நிறைய சம்பாதித்தவன் உத்யோகத்தோடு குடும்பத்தையும் இரு கண்களாய் பாவித்தவன். நான் பெற்ற 4 குழந்தைகளையும் சமமாய் செல்லமாய் வளர்த்தவன் மனைவியின் பொருப்பில் பாதியை என் தோளில் ஏற்றிக்கொண்டவன் விடுமுறை நாட்களிள் குழந்தைகளோடு முழு நேரத்தையும் செலவிட்டவன்.
அவர்கள் கேட்ட விளையாட்டு பொம்மைகள் அத்தனையும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக்கொடுத்து அவர்கள் மகிழ்வதை கண்டு கவலைகள் மறந்து அகம் மகிழ்ந்து தன்னிலை மறந்திருக்கிறேன்.
என் மனைவி படிப்பறிவு குறைந்த கிராமத்து பெண். நான் சற்று புத்திசாலி. என் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி எனது ஆலோசனையே முடிவாய் இருக்கும். . .
நான் கோபக்காரன், ரோஷக்காரன். சில நேரங்களிள் என்னை மறந்து கோபப்படுகையில் என்னை கட்டுப்படுத்துவதிலும், மட்டுப்படுத்துவதிலும் என் மனைவி சிறந்தவள். எனக்கு ஆதவு, ஊன்றுகோல் தேவைப்பட்ட சமயமாய் பார்த்து இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டாள். அந்த ஆதரவு என் பிள்ளைகளிடத்தில் இருந்து எதிர்பார்த்தேன். எனக்கு கிடைக்கவில்லை பணமும், பாசமும் அளவிளாக் கொட்டியவனுக்கு அளவோடு கூட கிடைக்கவில்லை பிள்ளைகளிடம் இருந்து பாசம். . .
இன்று நான் என் பழைய வீட்டில். உள்ளமும் உடலும் ஊனமுற்று தனிமையாய் ( வேலைக்காரி துணையோடு ) வா(டு)ழுகின்றேன். நீரிழிவு நேயால் ஒரு கால் அகற்றப்பட்டு மனச்சோர்வுற்று நடையில்லாப் பிணம்மாய் கிடக்கிறேன். . .
என்னை பார்த்து ஆறுதல் கூறிவிட்டும், அனுதாபப்பட்டு விட்டும் செல்கின்றனர். எனக்கு அவமானமாய் இருக்கிறது. கம்பீரமாய் வாழ்ந்து தீர்க்கமான முடிவு செய்பவன் என்று பெயர் எடுத்தவன் இன்று மற்றவர்களின் அனுதாபத்திற்கு உறியவனாகிவிட்டேன். பாசத்திற்கும், ஆதரவிற்கும் பரிதவிக்கிறேன்.
காலங்கள் கடந்தன.. மனசு இருகியது.. என் உடல் நலம் விசாரிக்க வருபவர்களிடம் வியாக்யானமும், தத்துவமும் பேச ஆரம்பித்துவிடுகிறேன். .
பால்ய நண்பர் என்னை சந்திக்க வந்தார் என்னைப்பற்றி விசாரித்தவர் திடீரென அழ ஆரம்பித்துவிட்டார் ! அவரை ஆசுவாப்படுத்தி நானே எல்லாவற்றையும் மறந்து ( மறைத்து ) இருக்கிறேன் நீ ஏன் கலங்குகிறாய் என்றேன் அவனோ உன் நிலை ஊருக்கு தெரிந்து விட்டது என் நிலை வெளியில் தெரியவில்லை அவ்வளவுதான் வித்யாசம் என்றான் ( ஊருக்குள் முக்கால்வாசி பேருக்கு இந்த நிலைதானோ !? ) .
உன் பிள்ளைகளிடம் நீ கொடுத்த பணத்தையும், பாசத்தையும் திரும்ப எதிர்பார்க்காதே எதிர்பார்த்து ஏமாறுவதைவிட எதிர்பாராமல் கிடைத்தால் சந்தோஷமே எதிர்பார்த்து கிடைக்காவிடில் ஏமாற்றமும், மன உலைச்சலும்தான் என்றேன். அதற்கு அவன் அது எப்படி அவர்கள் குழந்தையாய் இருக்கும் பொழுது எப்படி பாராட்டினோம், சீராட்டினோம் இன்று அவர்களுக்கு நாம் குழந்தை போல்தானே அவர்களும் நம்மை சீராட்ட வேண்டிதுதானே என்றான்.
உண்மைதான் ! நாம் வாலிப வயதில் நம் மனம் மகிழ நம் குழந்தைகள் நமக்கு கிடைத்த விளையாட்டு பொம்மைகள் போல. அழகாய் கொழுகொழுவென்று நம் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் ரிமோட் பொம்மைகள் போல... ஆகையால் கொஞ்சி மகிழ்ந்தோம். ஆனால் நாமோ வத்தலும் தொத்தலுமாகிய கால் ஒடிந்த உறுப்பு ஊன பொம்மைகள் எப்படி நம்மை சீராட்டுவார்கள் ? கனத்த இதையத்தோடு நண்பனை தேற்றினேன்.

மு.செ.மு.சபீர் அஹமது
Subscribe to:
Post Comments (Atom)
நமக்கு எச்சரிக்கை விடும் முணங்கல் !
ReplyDeleteஅண்மைக்காலமாக அதிரை நியுஸில் இருந்து சற்றே ஓய்வெடுத்த அருமை எழுத்தாளர், அழகிய மனதிற்கு சொந்தக்காரர் ஜனாப் மு.செ.மு.சபீர் அஹமது அவர்களின் முணங்களான "முதியவனின் முணங்கல் !" உள்ளத்தை வருடியது.
ReplyDeleteசிறிது நாட்களாக உங்களது ஆக்கங்களை தளத்தில் காணாமல் முணங்கிக் கொண்டு இருந்தேன். முதியவனின் முணங்களுடன் மீண்டும் இணைந்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொய்வில்லாமல் தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
{ இந்தவாரம் என்னாச்சு எல்லாம் முணுமுணுப்பும் முணங்கள் சத்தமா கேக்குது }
Wave...Very..Very good article...
ReplyDeleteMy dear friend..Allah..protect..from...
That's sad..thing...
சமூக விழிப்புணர்வு பக்கத்தின் பார்வையாளர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)இந்த ஆக்கத்தை படித்து பொதுவாகவே பெரும்பாலும் முதியோர்களின் அனுபவம்தான் என்று ஒரு பெரிய மனிதர் என்னை வெகுவாக பாராட்டினார்கள்(கைபேசியின் வாயிலாக)மனதிற்க்கு பெருமையாய் இருந்தது! அவர்கள் முன்னால் கா.மு.கல்லூரி முதல்வர் ஜனாப் அப்துல்காதர் மச்சான் அவர்கள்
ReplyDeleteஅணு அணுவாய் இரசிக்க வைத்தவைகள் , இந்த முதியவரின் முனங்கல்கள்
ReplyDeleteநல்ல கட்டுரை
ReplyDelete