.

Pages

Saturday, December 13, 2014

நேரம் !

நொடிக்கு நொடி
கவனம்! படி!
நேற்றை என்பது
உடைந்த பானை
நாளை என்பது
மதில்மேல் பூனை
இன்று என்பது
உன்கை வீணை!

திரட்டிய செல்வம்
கரைந்து போனது
கட்டிய மாளிகை
விட்டுப் போனது
உழைத்தான்
மீண்டது பொருள்
நிமிர்ந்தது மாளிகை!

இழந்ததைப் பெறலாம்
பணத்தின் செறிவால்
பறந்துபோன
காலத்தைப்
பற்றிக் கொணர்வானா?

மறைந்த நேரம்
மரணமானது
உயிர்ப்பித்து ஒருபோதும்
எழுப்பவே முடியாது!
நேற்றைய தினம்
இன்றைய தினத்தைத்
தின்னாமல் இருக்கட்டும்!

தாயின் கருப்பையில்
இருந்த காலம் -
மாறி மண்ணில்
பிறந்து விட்டால்,
மீண்டும்
செல்வதுண்டா?
மண்ணறைக்குள்
சென்று விட்டால்
மீண்டும் வருவதுண்டா?
எல்லாம் காலம் நடத்தும்
ஜாலம்!

உழைப்பவனுக்கு
நேரம் போதாது
ஊதாரிக்கோ
நேரம் போகாது! -நீ
உழைப்பவனா?
ஊதாரியா?

"காலம் சென்றுவிட்டால்
வார்த்தை வெளிப்பட்டால்
அம்பை எய்துவிட்டால்
மீளுமா? "- இது
நபிகளாரின் கேள்விமா!

ஒரு நிமிடம் சிந்தி
எடுத்து வைக்கும் அடி
எங்கே போகிறது?
குடிக்கவா? குப்புறக்
கிடக்கவா?
சூதாடவா? வாதாடவா?
நேரம் உனக்குச்
சரி இல்லை!

சுறு சுறுப்பைக்
கிள்ளிப் போடாதே!
நல்ல வேலையைத்
தள்ளிப் போடாதே!
ஆயுள் போகுமே
நேரம் போக!போக!

அரட்டையை விரட்டு!
ஆகா
நட்பைப் புரட்டு!
நேரமே உயிர்!
நேர்பட வாழ்!
கூர்பட சிந்தி!

காலம் யாருக்காகவும்
காத்திருக்காது!
"காலத்தின் மீது சத்தியமாக "
காத்திருக்காது
காலம்!

காலம் பொன்னானது!
கடமை கண்ணானது!
'கவிஞர்' அதிரை தாஹா

5 comments:

  1. நேரத்தின் அருமை பெருமை !

    ReplyDelete
  2. காலம் பொன்னானது!
    கடமை கண்ணானது!
    கவிதை தேண்ணாது.

    ReplyDelete
  3. வரிக்கு வரி
    வார்த்த வார்த்தை
    சரிக்குச் சரியாய்
    சட்டெனப் பொருள்
    உரித்துக் காட்டும்
    உயர்ந்தக் கருத்துக்கள்
    நெறியுடன் வாழ
    நேர்மை நிறைவுகள்

    நேரம் தந்த
    நேர்த்தி அறிவு
    வாரம் இதுபோல்
    வருவதும் சுகமே
    பார்த்துப் படித்து
    பரவசம் கொண்டோம்
    சேர்த்து வாழ்வில்
    சீர்மைக் கொள்வோம்

    ஊத்தைப் போக்கும்
    உணர்வுடன் படிக்கப்
    பூத்துக் குலுங்கும்
    புதுமை நெறிகள்
    மூத்தக் கவிஞர்
    முதிர்ந்த வழியில்
    காத்த நாங்கள்
    கற்போம் கல்வி.

    ReplyDelete
  4. //காலம் யாருக்காகவும்
    காத்திருக்காது!
    "காலத்தின் மீது சத்தியமாக "
    காத்திருக்காது
    காலம்!//அருட்கவி அவர்களின் அசத்தல் வரிகள்!

    ReplyDelete
  5. நேரம் பொன்போன்றது
    நேர்மை கண்போன்றது
    காலம் கடந்தோடிடும்
    கனவும் கரைந்தோடிடும்
    மீதம் குறைவாகிடும்
    மீளும் நேரமும் நெருங்கி வர
    மீளா மரணம் வந்து சேரும்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers