.

Pages

Friday, December 5, 2014

பற்று !

பற்றுவை பெற்ற தாயிடம்
பிறந்த நாட்டிடம்!
உறுபொருள் கொடாமல்
உதவி புரிந்தவை!

தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை!

தொப்புள் கொடியே
கொடுத்தது உணவு
தொட்டில் பிள்ளை
பால்தரும் அன்னை
தேசக்கொடியே
வேர்; நம் எல்லை!

உடலை மட்டும் பேணா,
ஊரையும் பேணுக!
இழுக்கும் மூச்சுக்காற்றாம்
உறவுகள்
காத்து நிற்பதால்
கடவுளின் அருள் சூளும்!

மதங்கள் எல்லாம்
"மதம் " உண்டாக்கும்
தேசநேசமே
மனிதம் சேர்க்கும்!

நாதத்தில் சிறந்தது
தேசிய கீதம்
கண்ணியம் செய்!

இன்னொருப் பகுதியில்
இடர்துயர் என்றால்,
உன்னது உயிரோ
உசும்பிட வேண்டும்!

வீட்டுக் கொரு
மரம் நடு
இதயங்களில்
நாட்டுப் பற்றை
நாட்டி வளர்!

மழை மண்ணுக்கு
மனித நேயம்
வாழ்வுக்கு!

வாதத்தில் வீழ்ந்தவரை
வாரி அணைக்கலாம்,
தீவிர -
வாதத்தில் வீழ்ந்தவரை
வீழ்த்தி சாய்க்கலாம்!
'கவிஞர்' அதிரை தாஹா

4 comments:

  1. பற்றை வளர்க்கும் கவிதை !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பற்றைத் தலைப்பிட்டு
    பயனுள்ள பல பற்றுக்கள்
    நித்தமும் பேணிடனும்
    நிம்மதியுடன் வாழ்ந்திடனும்

    ReplyDelete
  3. தாயிடம் பற்று
    தந்தையிடம் பற்று
    ஆயினும் பற்று
    அன்புநாட்டின் பற்று
    அனைத்தையும் ஏற்று
    அகம்நிறைப் பெற்று
    நினைப்பிலே கொண்டு
    நேசமாய் இன்று
    படிப்பினைக் கொண்டேன்
    பாசம் கொண்டேன்
    அடிகடி உங்கள்
    ஆக்கங்களுக்கே நாங்கள்

    ReplyDelete
  4. மொழிப் பற்று, நாட்டுப் பற்று, மார்க்கப் பற்று இம்மூன்றுக்கும் ஒரே தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தான் என்பதை 04.12.14 அன்று அபுதாபியில் வெளியிடப்பட்ட ஆவணப் படத்தில் அறிந்து அழுதேன். தங்களின் இந்தப் பற்றுப் பற்றிய கவிதையைப் படித்ததும் மேலும் பற்று கொண்டேன், மொழியின் மீதும், நாட்டின் மீதும், மார்க்கத்தின் மீதும். உள்ளத்தைத் தூண்டிய உரமிக்கக் கவிதை படைத்த அருட்கவி அவர்களுக்கு உளம் நிறைவான நன்றிகள். ஜஸாக்கல்லஹ் கைரன்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers