kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Tuesday, January 6, 2015
போனது !
தொ(ல்)லைக்காட்சி வந்து நம்மில்
ஒழுக்கம் போனது!
தொடர்ந்து ஓடும் திரைப்படத்தால்
வெட்கம் போனது!
பரிகசிக்கும் பாட்டு வந்து
பண்பு போனது!
மட்டையிலே கட்டையாட
படிப்பு போனது!
பணம்வந்து பாசத்தினைக்
கொண்டு போனது!
அனாச்சாரம் ஆட்டம்போட்டு
அன்பு போனது!
காதல்வந்து நம்மில்கலாச்
சாரம் போனது!
காதுபேசி வந்ததாலே
நட்பு போனது!
முகத்தை மூடாப்
பெண்கள் போக
மோசமானது!
வளைதளத்தால் வலையில்பட்டு
வாழ்க்கை போனது!
பலவழியில் சப்தம்பெருகி
மார்க்கம் போனது!
சிலகால வாழ்க்கையெல்லாம்
சீரழிந்தது!
ஒழுக்கம் போனது!
தொடர்ந்து ஓடும் திரைப்படத்தால்
வெட்கம் போனது!
பரிகசிக்கும் பாட்டு வந்து
பண்பு போனது!
மட்டையிலே கட்டையாட
படிப்பு போனது!
பணம்வந்து பாசத்தினைக்
கொண்டு போனது!
அனாச்சாரம் ஆட்டம்போட்டு
அன்பு போனது!
காதல்வந்து நம்மில்கலாச்
சாரம் போனது!
காதுபேசி வந்ததாலே
நட்பு போனது!
முகத்தை மூடாப்
பெண்கள் போக
மோசமானது!
வளைதளத்தால் வலையில்பட்டு
வாழ்க்கை போனது!
பலவழியில் சப்தம்பெருகி
மார்க்கம் போனது!
சிலகால வாழ்க்கையெல்லாம்
சீரழிந்தது!
'கவிஞர்' அதிரை தாஹா
Subscribe to:
Post Comments (Atom)
சப்தம்
ReplyDeleteஉயிற்றது
உடன் அழிகிறது
சப்தம்
அரைகுறை
ஆடல்கவர்ச்சி ஊட்டுது
சப்தம்
ஆழ் அமைதி
ஆளுமை காட்டுது.
சப்தம்
உயிருள்ளது
உலகில் நிலைக்கிறது.
வரிகள் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுருக்கமாகிப் போனாலும்
சிறப்பாய்க் கவியும் போனது
சொன்ன சொற்கள் யாவும் படித்து
உள்ளம் மலைத்துப் போனது
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபோனது என்ற தலைப்பில் சில வரிகளில் இந்த உலகத்தையே உலுக்கிய இந்த கவி வரிகள், என் மனதையும் ஒரு உலுக்கு உலுக்கியது.
இதுவரைக்கும் போனது இவ்வளவு என்றால், இன்னும் எவ்வளவோ? நினைத்துப்பார்க்க பயங்கரமாக இருக்குது.
இந்த கவி வரிகளை தந்த உங்களை வாழ்த்தி பாராட்டுகின்றேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
இதயம் சிதறி போனது
Deleteபிரிவு மட்டும் எனக்கு சொந்தமாகிப் போனது
Delete