kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Sunday, February 22, 2015
விலை போகா மனிதன் !
என் எழுதுகோலூக்கும் விரலுக்கும்
இருக்கும்
நெருக்கம்போல நண்பர்கள்
இருந்தால்
உலகத்தில் ஏது கலாட்டா!
ஆன்மாவின் ஆழத்திலிருந்து
குரல்!
கேட்காமல் இருக்க முடியவில்லை!
ஆன்மீகத்தில் ஆழம் கண்ட
ஒரு
மன்னர்!
அந்தி வானத்தின் செந்நிறம்போல
மதகுரு!
சீடர்கள் மாலைபோல்
சுற்றி நின்றனர்!
வழியில் எண்ணப்
படமெடுப்பு!
கிளைவிட்டு விழுந்த கனிபோலும்
ரதம்விட்டுக்
கீழே இறங்கினார் -அந்த
மன்னர்!
குருபாதம் பணிந்து நின்றார்!
மந்திரிக்கு சிந்தனை
முந்திரிக் கொட்டையானது
மன்னரின் செயல் -
அவர்
மூளையை அதிரச்செய்தது!
மந்திரி :
"சாதாரண சாமியார் தானே
அவர்காலில் வீழ்ந்தது
எனக்கு
ஆரா ரணமாகி விட்டது! "
மதிமன்னர் :
"மந்திரி! பெருமீன் ஒன்றும்,
கலைமான் தலையும்,
மனிதத் தலையும்
கொண்டு வா! " என்றார்.
மீறமுடியுமா? மன்னர்
கட்டளை!
இரண்டு நாட்களில் மூன்றோடும்
வந்தார்
மன்னர் முன்னர்!
"தாமதம் ஏன்? "
மனிதத்தலையைச் -சுடு
காட்டிலிருந்து பெறுவதில்..... !
"மூன்றையும் சந்தையிலே
விற்று வந்து
சரியாகச் சொல்! " என்றார் மன்னர்.
மந்திரிக்கு
கடலில் மூழ்கி எழுந்ததுபோல
உணர்வு -
சந்தையிலே,
மீன் நல்ல விலைக்குப்
போனது.
அலங்காரப் பொருளாய்
மானின் தலையும்
விற்றது!
மனிதத்தலைக்கு
விலை போகவில்லை
பார்த்தோர்க்கு பயம்
போகவில்லை!
"மன்னா! மனிதத் தலைமட்டும்
விலை போகவில்லை? "
"செல் மீளா?
இலவசமாகக் கொடு "
என்றார் மன்னர்!
என்ன இது!
நொந்த நெஞ்சோடு
போனார் மந்திரி!
இலவசம் என்றாலே ஈயாய்
மொய்க்கும் மக்கள்
தலையை 'இலவசம்! '
என்றதும் தலைதெறிக்க
ஓடினார்கள்!
நடப்பு மன்னனிடம்
நவிலப் பட்டது!
மன்னர் சொன்னார் :
"மந்திரி!
உடலில் உயிர்ரோ ஒட்டி
இருந்தால் தான்
மதிப்பு மனிதனுக்கு!
மீனும் விலையானது
மானும் விலைபோனது
மனித மண்டை
பயமானது!
உயிரோடு அவன்
உலவிய காலத்தில் -அவன்
அடித்த நடனம்! ஆடிய ஆட்டம்
அகங்காரப் பார்வை
செத்தபின்பு என்ன
ஆனது சிந்தியும்!
ஞானிகள் வாழ்ந்தபோதும்
செத்தாராய் வாழ்ந்தார்கள்
எதுவும் சொந்தமில்லை
என்றனர்!
தன்னை உணர்ந்தனர் -தன்
இறைவனை அறிந்தனர்!
அதனால்
அந்தச் சாமியாரைப்
பணிந்தேன்!" என்றார்
மன்னர்!
இருக்கும்
நெருக்கம்போல நண்பர்கள்
இருந்தால்
உலகத்தில் ஏது கலாட்டா!
ஆன்மாவின் ஆழத்திலிருந்து
குரல்!
கேட்காமல் இருக்க முடியவில்லை!
ஆன்மீகத்தில் ஆழம் கண்ட
ஒரு
மன்னர்!
அந்தி வானத்தின் செந்நிறம்போல
மதகுரு!
சீடர்கள் மாலைபோல்
சுற்றி நின்றனர்!
வழியில் எண்ணப்
படமெடுப்பு!
கிளைவிட்டு விழுந்த கனிபோலும்
ரதம்விட்டுக்
கீழே இறங்கினார் -அந்த
மன்னர்!
குருபாதம் பணிந்து நின்றார்!
மந்திரிக்கு சிந்தனை
முந்திரிக் கொட்டையானது
மன்னரின் செயல் -
அவர்
மூளையை அதிரச்செய்தது!
மந்திரி :
"சாதாரண சாமியார் தானே
அவர்காலில் வீழ்ந்தது
எனக்கு
ஆரா ரணமாகி விட்டது! "
மதிமன்னர் :
"மந்திரி! பெருமீன் ஒன்றும்,
கலைமான் தலையும்,
மனிதத் தலையும்
கொண்டு வா! " என்றார்.
மீறமுடியுமா? மன்னர்
கட்டளை!
இரண்டு நாட்களில் மூன்றோடும்
வந்தார்
மன்னர் முன்னர்!
"தாமதம் ஏன்? "
மனிதத்தலையைச் -சுடு
காட்டிலிருந்து பெறுவதில்..... !
"மூன்றையும் சந்தையிலே
விற்று வந்து
சரியாகச் சொல்! " என்றார் மன்னர்.
மந்திரிக்கு
கடலில் மூழ்கி எழுந்ததுபோல
உணர்வு -
சந்தையிலே,
மீன் நல்ல விலைக்குப்
போனது.
அலங்காரப் பொருளாய்
மானின் தலையும்
விற்றது!
மனிதத்தலைக்கு
விலை போகவில்லை
பார்த்தோர்க்கு பயம்
போகவில்லை!
"மன்னா! மனிதத் தலைமட்டும்
விலை போகவில்லை? "
"செல் மீளா?
இலவசமாகக் கொடு "
என்றார் மன்னர்!
என்ன இது!
நொந்த நெஞ்சோடு
போனார் மந்திரி!
இலவசம் என்றாலே ஈயாய்
மொய்க்கும் மக்கள்
தலையை 'இலவசம்! '
என்றதும் தலைதெறிக்க
ஓடினார்கள்!
நடப்பு மன்னனிடம்
நவிலப் பட்டது!
மன்னர் சொன்னார் :
"மந்திரி!
உடலில் உயிர்ரோ ஒட்டி
இருந்தால் தான்
மதிப்பு மனிதனுக்கு!
மீனும் விலையானது
மானும் விலைபோனது
மனித மண்டை
பயமானது!
உயிரோடு அவன்
உலவிய காலத்தில் -அவன்
அடித்த நடனம்! ஆடிய ஆட்டம்
அகங்காரப் பார்வை
செத்தபின்பு என்ன
ஆனது சிந்தியும்!
ஞானிகள் வாழ்ந்தபோதும்
செத்தாராய் வாழ்ந்தார்கள்
எதுவும் சொந்தமில்லை
என்றனர்!
தன்னை உணர்ந்தனர் -தன்
இறைவனை அறிந்தனர்!
அதனால்
அந்தச் சாமியாரைப்
பணிந்தேன்!" என்றார்
மன்னர்!
'கவிஞர்' அதிரை தாஹா
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்றைய காலத்தில் ..
ReplyDeleteவிலை போகும் மனிதர்களின் நிலை காண்கிறோம் ..
ஆனால் அவர் தம் உயிர் போன பின் ..உடல் ஒன்றுக்கும்
ஆகாத ஒன்று என பொருள் பட கவி கூறி யுள்ளீர்கள் ..
குணங்குடி மஸ்தான் அவர்களின் கவி எனக்கு ஞாபகம்
வந்தது ...
ஊத்த ச் காடலமடி ..
உப்பில்லா பாண்டமடி ..
எனத்துவங்கும் கவி மனதில் தோன்றி மறைந்தது ..
உயிருள்ள போதே ...அன்பாய்..பண்பாய் ..கருணையாய்..
மனிதாபிமானியாய்..நடந்துகொள்வோம்
//கிளைவிட்டு விழுந்த கனிபோலும்
ReplyDeleteரதம்விட்டுக்
கீழே இறங்கினார் -அந்த
மன்னர்!//
மன்னரின் பணிவின் வேகத்தை என்னே அழகாக படம்பிடித்து நம் கண்களுக்கு காட்டியுள்ளார் ! அருட்கவி அவர்கள்.
*****
மந்திரிக்கு சிந்தனை
முந்திரிக் கொட்டையானது//
பகுத்தறிவு மட்டும் தெளிவைக்காட்டது என்பதின் உள்ளார்த்தாம். ஆகா ! என்ன வார்த்தைகள் !
*****
ஞானிகள் வாழ்ந்தபோதும்
செத்தாராய் வாழ்ந்தார்கள்
எதுவும் சொந்தமில்லை
என்றனர்!
தன்னை உணர்ந்தனர் -தன்
இறைவனை அறிந்தனர்!//
"இறப்பிற்கு முன் இறந்துவிடு" என்ற உயர் உண்மையை "
'செத்தாராய் வாழ்ந்தார்கள்' என்று தகுந்த இடத்தில் புகுத்தியது அருமை !
"தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறிவான்" என்ற உயர் மொழியை இவ்விடத்தில் நினைவூட்டியது மகாச் சிறப்பு !
சிந்திப்போருக்கு நல் விருந்து என்றால் மிகையாகா ! சந்தோசம். என் போன்றான் பின்னூட்டமிட இவர்கள் போன்றோர் எழுதுவது வாழும்கால வாய்ப்புகள்.
ஒண்ணுமே புரியல
ReplyDeleteஅருட்கவி புதுக்கவியிலும் அருமை; என்பதே எங்களுக்குப் பெருமை
ReplyDelete