.

Pages

Monday, March 23, 2015

[ 3 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

ஊடக பார்வை:
இந்தியாவின் கலாசாரம், வாழ்வியல் முறையில் திருமண வாழ்க்கை
என்பது உலக அளவில் போற்றப்பட கூடிய ஒன்று. இந்து சமய முறையில்
திருமண வாழ்க்கையை துவக்க தாலி கட்டும் முறை காலாகாலமாக
நடைமுறையில் உள்ளது. அப்படிபட்ட ஒரு முறையை இது தேவையா
பெண்களுக்கு தாலி அவசியமா என்ற தலைப்பில் பல தொலைக்காட்சி
நிறுவனங்கள் நிகழ்ச்சி நடத்துகின்றன. இது தேவையற்ற நிகழ்ச்சி. மக்கள் மனதை புண்படுத்தும் நிகழ்ச்சி

ஊடகத்தின் ஒரு பகுதியான சினிமா நூறு வருடங்களாக காதலை மைய்யமாக வைத்து தனது கருத்தை சொன்னது. அது இந்திய கலாச்சாரத்தினை அசைக்க கூட முடியவில்லை. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தின் வாயிலாக திருமண வைபவங்களை கொச்சை படுத்தும் விதமாக தாலி தேவை இல்லை என்ற ஒரு கருத்தை மையமாக வைத்து விவாதம்
செய்வது என்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று.

* ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் போடும் பெண்ணுக்கு தாலி இடையூராக இருக்கலாம்.
* அன்றாட வாழ்வில் கணவனை நேசிக்கும் பெண்ணுக்கு தாலி ஒரு போதும்
இடையூறாக இருப்பதில்லை.
* பெண் விடுதலை என்ற பெயரில் ஊடகம் செய்யும் சேட்டை.

நான் ஒரு இஸ்லாமியனாக நடுநிலையான பார்வையாளனாக சொல்கிறேன்.
இந்திய கலாசாரத்தின் ஆணிவேரை அசைக்கும் முயற்சி. அதிர்ச்சிகரமான, மோசமான நிகழ்வொன்றை பதிய விரும்புகிறேன்.

சேலம் அருகே ஜவ்வருசி தொழிற்சாலையில் வேலை பார்த்து விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த கணவன் மனைவி ஊருக்கு வெளியே ஆள் அரவமற்ற சூழல் திடீரென்று ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து கணவனை சரமாரியாக தாக்கி, கணவனை நிலைகுலைய செய்து விட்டு அவர் மனைவியை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடி விடுகிறது.

இந்த செயல் மிருகத்தனமான, காட்டு மிராண்டித்தனமான செயலைகண்டித்து பல மகளிர் இயக்கங்கள் ஆர்பாட்டம் நடத்தின. சில பெண்கள் ஊடகம் வாயிலாக பேட்டி கொடுக்கிறார்கள். அதிக பட்ச தண்டனையாக தூக்கிலிட வேண்டும் என்று ஆம் சரியான கருத்து. இது சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ளது. அதை மட்டும் ஏன் காட்டுமிராண்டிதனமான செயல் என்று சிலர் கூறுகின்றனர். ஒன்றும் புரியவில்லை.

வழக்கம்போல நான் ரசித்த ஒன்றை கூறி இவ்வார பதிவை முடிக்கிறேன்.
சிறிய ஹைக்கூ கவிதை:

சிறு குழந்தை...
பொக்கை வாயில்
அம்மா என்றது ..
பாசமாய் இருந்தது ...

பொக்கை வாய் ..
கிழவன் அம்மா என்றார்
பாவமாய் இருந்தது ..

மீண்டும் சிந்திப்போம் ...சந்திப்போம்.
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

8 comments:

 1. ஆரம்ப காலங்களில் பெண்ணிய கருத்துக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவன் நான். ஆனால் சமீப காலங்களில் பெண்ணியம் என்பதே ஒரு அலர்ஜி போல் ஆகிவிட்டது.

  ஆண் செய்யும் எல்லா தவறுகளையும் பெண்ணும் செய்ய வேண்டும் அதுதான் பெண் சுதந்திரம் என்பது போல் போதிக்கப் படுகிறது.

  பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சிதைத்துவிட்டால் சுலபமாக பெண்களை மேற்கத்திய கலாச்சாரத்துக்கு கொண்டு போய்விட முடியும். அப்போதுதான் பப், கேஎப்சி போன்ற பல வெளிநாட்டு வணிக மையங்களுக்கு சாதாரண குடும்ப பெண்களையும் கொண்டு வர முடியும்.

  பெண்ணியவாதிகள் கலாச்சாரத்தை சிதைப்பதற்கு பின்னணியில் வெளிநாடுகளின் சதி இருக்கிறதோ என்று என்ன வைக்கிறது.

  சிந்திக்க வேண்டிய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. s.p,செந்தில் குமார் அவர்களே ..
   தங்களின் மேலான கருத்திற்கு நன்றி ..
   பெண் போற்ற பட தக்க மரியாதைக்குரியவர்கள்
   மதிக்க படத்தக்க ஒருவரின் நிலை நிச்சயம் கட்டுப்பாட்டுக்களுடன்
   இருக்க வேண்டும் ..அது தான் நியதி சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாட்டை இழப்பது எந்த வகையிலும் நியாய மில்லை

   Delete
 2. லக்கும் தீனுக்கும் வளியத்தீன் அவரவர் மார்க்கம் அவரவருக்கு என்பதை அல்லாஹ்வே ரசூல்(ஸல்)அவர்களுக்கு வளியுரித்ததபின் விவாதம் நமக்கு தேவையற்றதே நல்ல கருத்தை சொன்னீர் நன்பரே

  ReplyDelete
  Replies
  1. ஆன்மீகமாக இருந்தாலும் சரி ..கலாச்சாரமாக இருந்தாலும் சரி ..
   அதனை சரி செய்யும் தீர்க்க தருசிகள் இனி வரப்போவது இல்லை .
   கலாச்சாரத்தை சீண்டுவது மக்கள் மனதை புண் படுத்தும் என்பதை ..
   இன்றைய ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை ...எப்படியாவது பலரின்
   கவனம் தனது பக்கம் திரும்ப வேண்டும் என நினைக்கும் சினிமா கார்கள்
   ஊடகவியலார்கள் என்று திருந்துவார்களோ ..?

   இறை வணக்கம் ....வழிபாடு பற்றி குர்ஆனில் கூறப்பட்ட ...அவர்கள் வழி
   அவர்களுக்கு நமது வழி நமக்கு என்ற வசனம் இன்றைய கால கட்டத்திற்கு
   சால சிறந்து ...

   குர்ஆனில் பிற மத கடவுள்களை நிந்திக்க வேண்டாம் ..என்று கூறப்பாட்டுள்ளது ...

   Delete
 3. தாலிப் பெண்களுக்கு வேலி என்பார்கள். வேலி அழிக்கப்பட்டால் பெண் இனத்திற்கு மட்டும் அல்ல மனிதகுலத்திற்கே கெடுதல்.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ...
   கண்ணியமான தோற்றம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்
   அணிகலன்கள் ..உடைகள் உண்டு .
   தாலி என்பது மங்கலமான தோற்றத்தின் அடிப்படையாக கருதப்படும்
   அணிகலன் ....அதனை விமர்சிப்பது அவர்களின் உணர்வை பாதிக்கும்
   என்பதை அறியாத சிலர் செய்யும் சேட்டைக்கு யாரும் துணை போக கூடாது ..அறிஞர் நபிதாஸ் அவர்களின் கருத்திற்கு நன்றி

   Delete
 4. ஒவ்வொருமதத்தினருக்கும் நடைமுறையில் அவரவர்களுக்கென்று ஒரு பழக்கவழக்கம் இருக்கிறது.அது அவரவர்களின் நம்பிக்கை. அதை பிறர் விமரிசிப்பதால்தான் பிரச்சனையே உருவாகிறது. அதனால் இத்தகைய விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்துக்கொள்வதே நலம்பயக்கும்.

  ReplyDelete
 5. ஒவ்வொருமதத்தினருக்கும் நடைமுறையில் அவரவர்களுக்கென்று ஒரு பழக்கவழக்கம் இருக்கிறது.அது அவரவர்களின் நம்பிக்கை. அதை பிறர் விமரிசிப்பதால்தான் பிரச்சனையே உருவாகிறது. அதனால் இத்தகைய விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்துக்கொள்வதே நலம்பயக்கும்//

  நாம் யாரையும் ..எந்த மதத்தையும் குறைகூறவில்லை ..
  மாறாக குறை கூறும் மீடியாக்களை சாடியே எழுதியுள்ளோம் ...
  எழுத்துலகம் அறிவுசார் உலகம் அன்பையே போதிப்போம் ..
  கலாச்சாரம்..அவரவர் உரிமை அதனை விவாத பொருளாக எடுத்து ..அதற்கென
  எதிர் தரப்பு வாதிகளை பேச வைப்பதே இன்றைய தொலைகாட்சி நிறுவனங்களின்
  வேலையாக போய் விட்டது ...அதனை நன்கு உணர வேண்டும் நாம் ,,,

  கருத்திற்கு நன்றி அதிரை மெய்சா அவர்களே

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers