.

Pages

Wednesday, July 8, 2015

[ 6 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

அன்றாட நிகழ்வுகள் நம் கண் முன்னே கடந்து செல்கின்றன. ஆனால் நம் மனதில் நெருடும் நிகழ்வுகள். நம் நினைவுகளை விட்டு விலகுவதில்லை. கடந்த ஒருவாரமாக வாட்ஸப்பில் வந்த ஒரு விடியோ பதிவு "ஒரு சிறுவனை, அதுவும் மூன்றோ அல்லது நான்கு வயது நிரம்பிய சிறுவனை மது அருந்த வைத்து வேடிக்கை பார்த்த விடியோ காட்சி பெறும் சர்ச்சயை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு பெரும்பான்மையான மக்களிடம் போய் சேர்ந்ததை அறிந்த இளைஞர்கள் மீண்டும் வேறு சிறுவனை வைத்து மது அருந்த வைத்து அதனை படம்பிடித்து முகநூலில் போட்டுள்ளனர். இதுபோன்ற பதிவுகளை நாம் அங்கீகரிக்க கூடாது. சிலர் இதனை எதிர்ப்பதாக கூறி மீண்டும் பதிவு செய்கின்றனர் அதனை கூட செய்யாதீர்கள்.

மன நிறைவை தந்த முகநூல் பதிவு: தமிழகத்தில் இந்து-முஸ்லிம் உறவு பண்டை காலம் தொட்டு உறவு முறை கூறி அழைத்து வந்த பழக்க வழக்கத்தை பற்றிய விரிவான பதிவை பதிந்து இருந்தார்கள். இன்றைய காலத்திற்கு ஏற்ற பதிவாய்  என் மனதிற்குபட்டது.

இன்றைய காலத்தில் மதச்சாயம் பூசி அரசியல் செய்யும் சூழலில் பொதுவான அரசியலில் மக்கள் ஒன்று சேர வேண்டும். மத நம்பிக்கைக்கு யார் ஆள்வது என்பதற்கும் முடுச்சு போடுவதால் பல மோதல்கள் பல்லாயிரக்கணக்கான
உயிர் சேதங்கள் தவிர்க்க, கொள்கை, நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் நம் நாட்டில் மோதல்கள் தொடர்வதை நிறுத்த பழைய காலத்தில், உறவுமுறை கூறி  வாழும்  முறை மீண்டும்  வழக்கத்தில் வர வேண்டும்.

ஒருமுறை கவிஞர் வாலியும், கவிஞர் கண்ணதாசனும் சந்தித்து கொண்டார்களாம் ( சாதரணமாகவே ஒரு கவிஞன் மற்றொரு கவிஞனின் படிப்பினை பாராட்ட மாட்டான். தனக்கென ஒரு இடம் அதில் தான் மட்டுமே சக்கரவர்த்தி என்ற எண்ணம் இருக்கும் ) கவிஞர் கண்ணதாசன் அவர்கள், கவிஞர் வாலி அவர்களை பார்த்து எனக்கு நிகராய் நீ கவிதை எழுதுகிறாய். உனது கவி, என் மறைவிற்கு பின் இரங்கற்பாவாக அமைய வேண்டும் என்றாராம். கண்ணதாசன் அவர்கள் கூறியபடியே சில மாதங்கள் கழித்து மறைந்து விட்டார். இரங்கல் கூட்டம் நடந்தது. வாலி மேடை ஏறினார். இரண்டே வரியில் தனது கவியை முடித்துக்கொண்டார்.

"காலன் படிக்கத்தெரியாதவன். நல்ல கவிதை புத்தகத்தை கிழித்து விட்டான்" என்று கூறி மேடையை விட்டு இறங்கி விட்டாராம் கவிஞர் வாலி.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

* முகப்பில் உள்ள படம் மணிமேகலை பதிப்பகம், கற்கண்டு வார இதழ் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்களின் மகனுடன் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சந்தித்த போது எடுத்த படம்.

2 comments:

 1. "காலன் படிக்கத்தெரியாதவன். நல்ல கவிதை புத்தகத்தை கிழித்து விட்டான்" //

  புத்தகம் பிறர் படிப்பதற்கே என்பதும் அதில் உள்ளதோ.

  ReplyDelete
 2. ஆம் ...
  புத்தகம் எடுத்து செல்லும் அறிவாளி
  புத்தகம் சொல்லும்போது படிப்பவம் பேசாது ஊமையாய் கண்ணால் ஈர்ப்பதால்
  ஐம்புலன்களில் நான்கை அடக்கி அறிவு ஜீவியாய் ஆகிறான்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers