kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, January 1, 2016
ஊற்றிடுவோம் நற்பண்பைக் குருதியாய்!
வேற்றுமைகள் வேரூண்ட விதைப்புகள்
வேதனைகள் சூழ்ந்துவிடக் களைப்புகள்
மாற்றங்கள் வரவேண்டி யேக்கங்கள்
மழைபெய்தே மாய்த்துவிட மகிழ்வுகள்
போற்றவேண்டும் சென்றதையும் புத்தியில்
புத்துணர்வில் புத்தாண்டை மனதினில்
ஏற்றங்கள் எய்துவிட வரவேற்பில்
எல்லோரும் ஒன்றுபட்ட திரள்வில்
ஆற்றிடுவோம் ஆக்கங்கள் உயர்வாய்
அகிலத்தில் பாரதமும் அமைதியாய்
ஊற்றிடுவோம் நற்பண்பைக் குருதியாய்
உலகங்கள் அதிசயக்க வெற்றியாய்
கூற்றுகளில் பாசத்தை நிறைவாய்
குழைத்திடுவோம் இனியெங்கும் அறிவாய்
சீற்றங்கள் தலைதூக்காப் பொறுமையாய்
சிதைத்திடுவோம் முளையிலேயே வொற்றுமையாய்
மாற்றங்கள் மேச்சிடவே வரவேற்போம்
மாநிலத்தில் திசையெங்கும் கைகோர்ப்போம்
தோற்றங்கள் புனிதமாக திகழ்ந்திடுவோம்
தோல்கொடுக்கும் வழிகாட்டல் மதித்திடுவோம்
காற்றசையும் கவனித்தால் வொன்றாகும்
காழ்ப்புணர்வும் தோன்றாதே வென்றாகும்
ஏற்றமாக யெல்லாமே வொன்றாகும்
இனியென்ன! இவ்வாண்டில் மகிழ்வாகும்.
நபிதாஸ்
வேதனைகள் சூழ்ந்துவிடக் களைப்புகள்
மாற்றங்கள் வரவேண்டி யேக்கங்கள்
மழைபெய்தே மாய்த்துவிட மகிழ்வுகள்
போற்றவேண்டும் சென்றதையும் புத்தியில்
புத்துணர்வில் புத்தாண்டை மனதினில்
ஏற்றங்கள் எய்துவிட வரவேற்பில்
எல்லோரும் ஒன்றுபட்ட திரள்வில்
ஆற்றிடுவோம் ஆக்கங்கள் உயர்வாய்
அகிலத்தில் பாரதமும் அமைதியாய்
ஊற்றிடுவோம் நற்பண்பைக் குருதியாய்
உலகங்கள் அதிசயக்க வெற்றியாய்
கூற்றுகளில் பாசத்தை நிறைவாய்
குழைத்திடுவோம் இனியெங்கும் அறிவாய்
சீற்றங்கள் தலைதூக்காப் பொறுமையாய்
சிதைத்திடுவோம் முளையிலேயே வொற்றுமையாய்
மாற்றங்கள் மேச்சிடவே வரவேற்போம்
மாநிலத்தில் திசையெங்கும் கைகோர்ப்போம்
தோற்றங்கள் புனிதமாக திகழ்ந்திடுவோம்
தோல்கொடுக்கும் வழிகாட்டல் மதித்திடுவோம்
காற்றசையும் கவனித்தால் வொன்றாகும்
காழ்ப்புணர்வும் தோன்றாதே வென்றாகும்
ஏற்றமாக யெல்லாமே வொன்றாகும்
இனியென்ன! இவ்வாண்டில் மகிழ்வாகும்.
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
nice poem
ReplyDeletenice poem
ReplyDeleteDear, Shekana and Jamal Mohamed,
ReplyDeleteTo read your word nice, I feel ice.