kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, January 6, 2012
அதிரை பைத்துல்மால் ( ABM ) க்கு ஓர் வேண்டுகோள் !

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் !
ஏறக்குறைய நாற்பதாயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிற நமதூரில், நமது சமுதாயம் சார்ந்த மருத்துவ சேவைக்காக இரண்டே இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே உள்ளது. ஓன்று த.மு.மு.க – அதிரை கிளையின் பெரிய வாகனம் மற்றொன்று அதிரை பைதுல்மாலின் ஓர் சிறிய வாகனம் ( OMNI VAN ) . ஆனால் இவைகள் போதுமானவைகள் அல்ல.
மேலும் நமதூரில் இறப்புகள் ( மவுத் ) ஏற்பட்டால், இவ்வாகனங்களைக் கொண்டே தொலைதூரங்களில் வசிக்கக்கூடிய நமது சமுதாய மக்கள்களின் வீட்டில் இருந்து தங்களின் ஜனாஸாக்களை மஸ்ஜித்களுக்கு எடுத்த செல்லப் “ சந்தூக்காக “ வும் பயன்படுத்துகிறார்கள்.
ஆகவே பைத்துல்மால் சம்பந்தப்பட்ட அதன் நிர்வாகிகளே,
நமது சமுதாயம் சார்ந்த சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக தங்களால் செயல்படுத்தப்படுகிற மற்ற பொது நலனுக்காக ஒதுக்கக்கூடிய சிறிய நிதியிலிருந்து போதுமான வசதிகளுடன் கூடிய ஒரு பெரிய வாகனமாக வாங்குவதற்க்கு முயற்சி செய்யுங்கள். இது மிக்க பயனுள்ளதாக நமது சமுதாயத்தினர்க்கு அமையும்.
1. இப்பெரிய வாகனத்தைக் கொண்டு நமது சமுதாயம் சார்ந்த ஏழை எளியோர்கள் பயன்பெறும் வகையில் அவசர மருத்துவ உதவியாக இருக்குமே !
2. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவரை ஆக்ஸிஜன் சிலிண்டருடன் மற்றும் முதல் உதவி செய்யும் நர்சுடன், கூடுதலாக ஓரிரு உறவினருடன் எடுத்துச்செல்ல முடியுமே !!
3. மேலும் நமதூரைச் சேர்ந்த, தொழில் நிமித்தமாக வெளியூர்களில் வசிக்கக்கூடிய நமது சகோதரர்களின் வீட்டில் ஏற்படக்கூடிய இறப்புக்களை ( மவுத் ) நமதூருக்கு கொண்டுவர இலகுவாக இருக்குமே !!!
4. உள்ளூர் ஜனாஸாக்களை எந்த சிரமமும் இன்றி மிக கண்ணியமாக மஸ்ஜித்களுக்கு எடுத்து செல்ல உதவுமே !!!!
5. நமது சமுதாயம் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ உதவி திட்டத்தை இவ்வாகனத்தைக் கொண்டு செயல்படுத்தலாமே !!!!!
இவ்வேண்டுகோளை வைக்க காரணம், நமதூரில் இன்று காலை ஜனாஸா ஒன்றை அதிரை பைத்துல்மாலுக்கு சொந்தமான ஆம்னி வேன் என்று சொல்லக்கூடிய ஒரு சிறிய வாகனத்தில் ரொம்ப சிரமங்களுக்கிடையே ஏற்றிக்கொண்டு மஸ்ஜித் நோக்கி புறப்பட தயாராவதை தற்செயலாக மனது வேதனையுடன் பார்க்க நேரிட்டதே............!
ஜனாஸாக்களை கண்ணியமாக எடுத்து செல்வது என்பது நமது ஒவ்வொரு சகோதரர்களுக்கும் உள்ள கடமை.
அன்புடன்,
M. நிஜாமுதீன்
( 9442038961 )
M. நிஜாமுதீன்
( 9442038961 )
இறைவன் நாடினால் ! தொடரும்............!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.