kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, January 4, 2012
சகோதரிகள் கவனத்திற்கு !

தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான “ டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் “ கீழ் கர்ப்பமுற்ற சகோதரிகளுக்கு ரூ 12,000 / அரசின் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
அரசின் உதவி பெற விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி :-
அரசு மருத்துவமனை – அதிராம்பட்டினம்
அரசு ஆரம்ப சுகாதார மையம் – ராஜாமடம்
மேலும் பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் கீழ் கண்ட நோய் தடுப்பு ஊசிகளும் மேற்கண்ட மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக்கொள்ளலாம்.

குழந்தை பிறந்தவுடன் : BCG / Oral Polio / HEPB
6 வது வாரத்தில் : DPT / Oral Polio / HEPB / HIB
10 வது வாரத்தில் : DPT / Oral Polio / HIB
14 வது வாரத்தில் : DPT / Oral Polio / HEPB / HIB
9 வது மாதத்தில் : Measles
15 வது மாதத்தில் : MMR
18 வது மாதத்தில் : DPT / OPV / HIB Booster
2 வது வருடம் தொடக்கத்தில் : TYPHOID
6 வது வாரத்தில் : DPT / Oral Polio / HEPB / HIB
10 வது வாரத்தில் : DPT / Oral Polio / HIB
14 வது வாரத்தில் : DPT / Oral Polio / HEPB / HIB
9 வது மாதத்தில் : Measles
15 வது மாதத்தில் : MMR
18 வது மாதத்தில் : DPT / OPV / HIB Booster
2 வது வருடம் தொடக்கத்தில் : TYPHOID
“ பெண்டா வேலண்ட் “ தடுப்பூசி :குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்காக தமிழக அரசால் ஒரே தடுப்பு மருந்தாக “ பெண்டா வேலண்ட் “ என்ற தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்களால் போடப்படுகின்றன.
சகோதரிகளே !
அரசு மருத்துவமனைகளில் செலுத்தும் நோய் தடுப்பு ஊசிகள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்பட்டு, வீண் விரயமாகும் நம்முடைய பணமும் சேமிக்கப்படுகிறது. ஆகையால் தங்களின் குழந்தைகளுக்கு மேற்க் கண்ட நோய் தடுப்பு ஊசிகளை செலுத்த நமது ஊர் அரசு மருத்துவமனை மற்றும் நமது ஊர் அருகில் உள்ள ராஜமடத்தில் இருக்கிற அரசு ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி பயனடையுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாரம் ‘செவ்வாய் கிழமை’ தோறும் கருவுற்ற சகோதரிகளுக்கும், ‘புதன் கிழமை’ தோறும் குழந்தைகளுக்கும் நோய் தடுப்பு ஊசிகள் போடப்படுகின்றன.
இறைவன் நாடினால் ! தொடரும்......................
இறைவன் நாடினால் ! தொடரும்......................
குறிப்பு : அதிரையைச் சார்ந்த நமது சகோதர வலைதளங்களில் ஒன்றில் இப்பதிவை பதிந்ததால் “ அதிரை சகோதரிகளுக்கு மட்டும் ! “ என்று தலைப்பிட்டுள்ளேன். இவைகளை அனைத்து ஊர்களிலும் உள்ள நமது சமுதாயம் சார்ந்த சகோதரிகள் அனைவரும் பின்பற்றக்கூடியதே
Subscribe to:
Post Comments (Atom)
அதிரை சமூகத்தில் சென்றடைய
ReplyDeleteஅச்சு பதிவாகவும் விழிப்புணர்வு பக்ககங்கள்
வெளியாக வேண்டும்