“தண்ணிர் சிக்கனம் தன்னலமற்ற சேவையாகும்”
இன்று மார்ச் 22 “ உலக தண்ணீர் தினம் ” கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நான்கில் மூன்று பங்கு நீரைக்கொண்டுள்ள இவ்உலகப் பரப்பளவில் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக உள்ள இத்தண்ணீரைக் இன்று நம்மில் அநாவசியமாக செலவழிப்பது வேதனையளிக்கக் கூடியதாகவே உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் நமதூர் மட்டுமல்ல பல ஊர்களிலும் ஏன் பல்வேறு நாடுகளிலும் கூட தண்ணீர் பற்றாக் குறையாகவே உள்ளது. எதிர்காலத்தில் இத்தண்ணீருக்காக உலக யுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பது வல்லுனர்களின் கருத்து.
“மழைநீர் சேமிப்பு மனிதர்களுக்கு பாதுகாப்பாகும்”
அல்லாஹ் நமக்களித்த அருட்கொடை “மழை” இம்மழை நீரைச் சேமிப்பதன் மூலம், நிலத்தடி நீர்வளத்தை பெருக்க இயலும்.
இத்தண்ணீருக்காக, எங்கோயோ ஒரு சகோதரன் வறண்ட தொண்டையோடு, உலர்ந்த நாக்கோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை நம்மிடம் வரட்டும்....................
இன்று நாம்................................. தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நமது பங்களிப்பாக அதைச் சேமித்து நாளை நமது சந்ததியினர் பயன்பெறும் வகையில் வழிவகுத்துக் கொடுப்போம் ( இன்ஷா அல்லாஹ் ! )
இறைவன் நாடினால் ! தொடரும்......................
0 comments:
Post a Comment
கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.