.

Pages

Wednesday, March 14, 2012

ப்ளாஸ்டிக் பை தடை நிலவரம் : ஓர் “Exclusive” ரிப்போர்ட் !


“ ஒரு பிளாஸ்டிக் பையை சராசரியாக நாம் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ” என்பது ஆய்வு அறிவிப்புகள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டும். சுகாதாரமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழல் பாதுகாப்பைப் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. அனைத்து மாற்றங்களும் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். என்ற உயரிய விழிப்புணர்வு கருத்துக்களுடன் நமதூர் பேரூராட்சி நிர்வாகத்தால் ப்ளாஸ்டிக் பை மற்றும் அதன் தொடர்புடைய மக்காத பொருட்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கு தடை செய்தும் அதை நமதூரில் நடை முறைப்படுத்தப்பட்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கவை.

இவ்வாறு நடை முறைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்புப் பற்றி நமதூர் பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்டதற்கு..............................
“ ப்ளாஸ்டிக் பைகளினால் சுகாதாரத்திற்கு பெரும் கேடு உள்ளது என்பதை நாங்கள் பேரூராட்சியின் விழிப்புணர்வு அறிவிப்பால் நன்கு விளங்கிக்கொண்டு அதைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம். இக்காலகட்டத்தில் வீட்டிலிருந்து துணிப்பைகளையும், பாத்திரங்களையும் கொண்டுவந்து ஒவ்வொரு பொருட்களையும் ஒவ்வொரு கடைகளிலும் வாங்கிச் செல்வது என்பது சிரமம். மேலும் மாற்று வழிகள் இலகுவாக இருந்தால் மட்டுமே இச்சிரமங்கள் குறையும். இவைகள் விற்பனையாளர்களின் கையில் தான் உள்ளது................. “ என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

நமதூரில் உள்ள கடைகளில் ப்ளாஸ்டிக் கேரி பைகளுக்கு மாற்றாக வந்துள்ள “பைகளை” சிறியப் பை “ஒரு” ரூபாயாகவும், பெரியப் பை “இரண்டு” ரூபாய் என விலைகளை நிர்ணயம் செய்து ஆங்காங்கே உள்ள கடைகளில் விற்பனைகள் படு ஜோராகவே நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நமதூரில் உள்ள விற்பனையாளர்கள் சிலரிடம் கருத்துக் கேட்டதற்கு.....................
“ நமதூர் பேரூராட்சி நிர்வாகத்தால் ப்ளாஸ்டிக் பை மற்றும் அதன் தொடர்புடைய மக்காத பொருட்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கு தடை செய்து இருப்பதும் எங்களுக்கு மகிழ்ச்சியே என்றும் மேலும் பொதுமக்கள் தமது வேலைகளுக்கு இலகுவாக இருப்பதாகக் கருதி ப்ளாஸ்டிக் கேரி பைகளை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கினர்... அவர்களின் தேவையைக் கருத்திற்கொண்டு நாங்களும் இவைகளை வாங்கி அளிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது........... என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதுகுறித்து நமதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரிடம் கருத்துக் கேட்டதற்கு.....................பேரூராட்சி நிர்வாகத்தின் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு செய்ததற்கு முதலில் தனது வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டுத் தொடர்கிறார்.................
ப்ளாஸ்டிக் கேரி பைகளுக்கு மாற்றாக வந்துள்ள பையின் பெயரை “Poly Non Woven Carry Bag ” என ஆங்கிலத்தில் இதைச்சொல்வார்கள். நமதூரில் அதிகமாக புழக்கத்திலுள்ள இப்பைகளின் விலை மற்றும் தரம் போன்றவைகளை ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது............. “ என தன் கருத்தை முன்வைத்தார்.

அதிரைப்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் :
அதிரைப்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம், தங்களின் நல்ல பல சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் விதமாக இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தும் விசயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் பொதுமக்களின் நல்ல ஒத்துழைப்போடு நமதூர் பேருராட்சியை தமிழகத்தின் சுகாதாரத்தில் “முதன்மை பேரூராட்சியாக” வருவதற்கு வழிவகைகளை ஏற்படுத்தி நமதூருக்கு பெருமைகளைத் தேடித்தருமாறு பேரூராட்சி நிர்வாகத்தினரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ அரசு :
சுற்றுச்சுழல் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தரமான பைகள் உற்பத்தி செய்து, அதை மிகவும் மலிவாக அளித்தால் இக்குறைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டு, சுகாதாரமான முறையில் பொருட்களை வாங்க விற்க வழியேற்படும்..................( இன்ஷா அல்லாஹ் ! )

இதைச் செய்விர்களா ?

இறைவன் நாடினால் !  தொடரும்.....................

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers