.

Pages

Sunday, March 4, 2012

அதிரை மின்சார வாரியம் : இதைச்செய்வீர்களா... ?




நமதூரில் தினமும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை குறையாமல் அறிவிக்கப்படாத மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
அதாவது...................................
காலை : 6.00  to 9.00
மதியம் : 12.00 to 3.00
இரவு :   8.00 to 9.00
இரவு :   10.00 to 11.00
இரவு :   2.00 to 3.00

போன்ற நேரங்களில், இதனால் அரசு பொதுத்தேர்வுகள் எழுதத் தயாராகும் மாணவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, குழந்தைகளுக்கு, வயோதியர்களுக்கு, தொழிற் நிறுவனங்களுக்கு, வணிகர்களுக்கு, கல்லூரி, பள்ளிகள், மஸ்ஜித்கள், மதரஸாக்கள் போன்றவைகளுக்கு பாதிப்புகள் என ஒருபுறமிருக்க.................




அதிரைப்பட்டினம் மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றான ஹஜ்ரத் பிலால் நகரும் ஓன்று. ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு மக்கள்கள் வசிக்கக்கூடிய இப்பகுதியில் பெரும்பாலும் ஏழை எளியோர்கள்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


குடியிருப்புகளின் மேலே உயர் மின் அழுத்த கம்பிகள் ( HD LINES ) செல்வதால் பல்வேறு இழப்புகளைச் இப்பகுதியினர் சந்தித்துள்ளனர்.

குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஒருவன் உயிரைப் பறிகொடுத்துள்ளான்.



இப்படி மேன்மேலும் தொடரும் இழப்புகள் தடுக்கப்பட வேண்டும். அதற்காக அதிரை மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளுக்காக ( ? ) மாதம் ஒரு முறை காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை மின் இணைப்பை துண்டிக்கும் நாட்களில் துரித நடவடிக்கையாக உயர் மின் அழுத்தக் கம்பிகளை HD LINES ) குடியிருப்பு பகுதியிலிருந்து அகற்றி பாதிப்பில்லாத மாற்று வழியில் அமைத்து இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றி ”நாங்களும் பொதுமக்களின் நல்ல சேவகர்கள்“ தான் என நிருபிக்க இது ஒரு வாய்ப்பாகும். 

இதைச்செய்வீர்களா..........?

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers