அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் அரங்கில் இன்று ( 04-03-2012 ) காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காதிர் முகைதீன் கல்லூரியின் தாளாளர் டாக்டர் சகோ. S. முஹம்மது அஸ்லாம் அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கல்லூரிப் பாடத்திட்ட வளர்ச்சிக் குழுவின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர். E. ராம் கணேஷ்அவர்களும், மேலும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவல ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் எனக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியின் நிரலாக.........................................
1. இக்கல்லூரியின் அரபி பேராசிரியர் மெளலவி முஹம்மத் இத்ரீஸ் அவர்களால்“கிராத்” ஓதப்பட்டு நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது.
2. இக்கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் டாக்டர் A. முஹம்மது முகைதீன்அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
3. இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் உறுதி மொழி வாசிக்கப்பட்டது.
4. “அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள இக்கல்லூரியில், உள்ளூர் பெண்கள் இவ்வாய்ப்புகளை நன்கு பயன் படுத்திக்கொண்டு தங்களின் படிப்புகளை தொடர வேண்டும் “ என்ற வேண்டுகோளை இக்கல்லூரியின் தாளாளர்டாக்டர் சகோ. S. முஹம்மது அஸ்லாம் அவர்கள் அவர்களின் உரையில் குறிப்பிட்டார்.
5. சிறப்பு விருந்தினர் டாக்டர். E. ராம் கணேஷ் அவர்களின் உரையில் “பெறப்பட்ட கல்வியினை அவ்வாறே பயன்படுத்தாமல் மாணவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாங்கள் இருக்கும் இடத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயம் “ என்று குறிப்பிட்டார்.
6. எண்ணற்ற பட்டதாரிகளை அனுப்பிவைத்த இவ்வரங்கம் மிகவும் சிறப்பானது என்ற பெருமையை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
7. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் “பட்டங்கள்” பெறும் கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்டு பெரும் ஆனந்தம் அடைந்து மகிழ்ந்தனர்.
8. பல்வேறுப் பாடப்பிரிவுகளில் தரங்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 505 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
9. இளநிலை வரலாற்றுப் பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் K.பிரேம்குமாருக்கு சிறப்பு விருந்தினர் டாக்டர். E. ராம் கணேஷ் அவர்கள் பதக்கம் மற்றும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
10. விழா நிகழ்ச்சிகளை பொருளாதாரத்துறைப் பேராசிரியர் டாக்டர். S. P. கணபதிஅவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
11. இக்கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் S. சிக்கந்தர் பாட்சா அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே முடிவுபெற்றது.
“பட்டங்கள்” பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அதிரை வலைதள சகோதரர்கள் சார்பாக தங்களுக்கு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் "மனிதநேயம்", "சகோதரத்துவம்" ,"சமுதாய விழிப்புணர்வு"போன்றவைகளில் தாங்கள் சிறந்து விளங்குவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நல் உதவி புரிவானாக ! ஆமின் !
0 comments:
Post a Comment
கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.