kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Saturday, June 9, 2012
பொறியியல் படிப்புக்கு நன்கொடையா ? எடுங்க போனை....புகார் செய்ய...!
பொறியியல் படிப்புகளில் சேர நன்கொடை வசூலிப்பது குறித்து புகார் செய்ய தமிழகம் முழுவதும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழுவில் புகார் அளிப்பதுடன் மாவட்ட அளவிலும் புகார் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கட்டணம் :
1. அண்ணா பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் கல்விக் கட்டணம் ரூ 7,500 /-
2. அரசு உதவிபெரும் பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் ரூ 8,500/-
3. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியம் குழு நிர்ணயித்துள்ளது.
இதன்படி,
a. தரச்சான்று பெற்ற பாடப்பிரிவுக்கு கல்விக்கட்டணம் ரூ 40,000/-
b. தரச்சான்று பெறாத பாடப்பிரிவுக்கு கல்விக்கட்டணம் ரூ 32,500/-
எச்சரிக்கை :
சுயநிதிக் கல்லூரிகள், நீதிபதி நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கவோ, நன்கொடை வசூலிக்கவோ கூடாது. மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும். கல்லூரியின் பல்கலைக்கழக அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அனைத்து சுயநிதிக் கல்லூரிகளுக்கும் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகாரம் ரத்து :
அரசின் எச்சரிக்கையை மீறி செயல்படும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கவும், புகார்களின் மீது கல்லூரிகளில் சோதனை செய்யவும் ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு சட்டப்படி அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம், நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது ஆய்வுக் குழுவில் மட்டுமே புகார் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. மாநிலம் முழுவதும் புகார் செய்யலாம். புகார் செய்ய கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறை இந்த ஆண்டும் பின்பற்றப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் வசதி :
இதன்படி, நன்கொடை கேட்கும் கல்லூரிகள் மீது தமிழகம் முழுவதும் புகார் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களில் மாணவர்கள், பெற்றோர்கள் புகார் அளிக்கலாம்…..
1. சென்னை / திருவள்ளூர் / காஞ்சிபுரம் :TEL : 044-22351018 FAX : 044-22201514
2. ஈரோடு / கரூர் / கோவை / நீலகிரி / திண்டுக்கல் : TEL : 0422-2432221/436 FAX : 0422-2455230
3. சேலம் / நாமக்கல் / கடலூர் / பெரம்பலூர் / அரியலூர் : TEL : 0427-2346157 FAX : 0427-2346458
4. திருச்சி / தஞ்சாவூர் / திருவாரூர் / புதுக்கோட்டை / மதுரை / சிவகங்கை / நாகப்பட்டினம் / காரைக்குடி : TEL : 04565-224535/225349 FAX : 04565-224528
5. திருநெல்வேலி / விருதுநகர் / தூத்துக்குடி / கன்னியாக்குமரி / ராமநாதபுரம் / தேனீ / திருநெல்வேலி : TEL : 0462-2552448/50 FAX : 0462-2554012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.