kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, June 11, 2012
இன்னிக்கு காலையிலே வெருங்குடலோடு வந்துட்டோம்ல....!
இப்ப நிறைய பேர் காலையில
எழுந்து பல் விளக்கி, மூஞ்சே கழுவி “டீ” யை
குடிச்சிட்டு “பஜ்ர்” தொழுவுறாங்களோ ! இல்லையோ பிளாக்கிலே பதிவே போடாம....பதிவே படிக்காம...
கமெண்டே அடிக்காமே... விட்றதே இல்ல. ஏன்னா அந்தளவுக்கு "பிளாக்மேனியா" நம்மிடம் பரவிக்கிடக்கு..
இதுவும் ஒரு விதத்தில் நம் டயரி போன்றதுதான்....... டயரியை நாம் மட்டுமே படிக்க முடிகிறது....... எழுதிய பதிவுகளை பொதுவில் வைப்பதால் எல்லோராலும் படிக்க முடிகிறது......
இதில் இதைத்தான் எழுதனும் இதெல்லாம் எழுதக்கூடாதுன்னு சட்ட திட்டமெல்லாம் கிடையாது யாரைப்பற்றியும், எதைப்பற்றியும்,
பின்னாடி நடக்கிறதப்பத்தி “திங்” ( ? ! ) பண்ணாமே எழுதலாம், கருத்தைப் பதியலாம்.
1.
நீங்க காலையிலே
எழும்பி பாத்ரூம் போறதுலயிருந்து, நைட்டு கொறட்டவிட்டு தூங்குற வரைக்கும் நடக்கும்
காரியமாகட்டும்..........
2.
படபடக்கும்
செய்தியாகட்டும்......பரபரப்பு சம்பவமாகட்டும்...........சிந்தனையை தூண்டும்
தகவலாகட்டும்.........
3.
அன்றாட நடக்கிற பொது
நிகழ்ச்சிகளாகட்டும், அறிவிப்புகளாகட்டும், உதவிகள் கோருதலாகட்டும்............
4. சமுதாயம், அரசியல், மார்க்கம்,
கல்வி, மொழி, விளையாட்டு, உடல்நலம், அனுபவங்கள், ஆய்வுகள், வரலாறு போன்ற பயனுள்ள கட்டுரைகளாகட்டும்............
5.
அழகிய புகைப் படங்களாகட்டும்,
காணொளியாகட்டும், கவிதையாகட்டும், கடிதங்களாகட்டும்.................
இதெல்லாம் படிப்பதற்கென்று , பார்ப்பதற்கென்று, பிரிண்ட் எடுப்பதற்கென்று மிகப்பெரிய வாசகர் கூட்டம் இருக்குதென்று சொன்னால் மிகையாகாது.
இண்டர்நெட் எல்லோருக்கும்
பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் "அடுத்தக் கட்டம்" என்று சொன்னால்
மிகையாகாது அந்தளவிற்கு நிமிடத்தில் எண்ணற்ற பக்கங்கள் கொண்ட தகவல்கள் அப்லோடு
செய்யப்படுகின்றன. மாணவ, மாணவிகள் இணையதளத்தை பயன்படுத்தும்
போது அதில் பயனுள்ள பகுதிகளை மட்டுமே பார்க்க பழகிக்கொண்டால்
சாதிக்க நிறையவே இருக்கிறது” என்பது
குறிப்பிடத்தக்கது. இவற்றை பயனுள்ள வகையில் நம்முடைய நேரத்தையும், சிந்தனையையும்
செலவிட்டு நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் விழிப்படைய சிறிதளவு உறுதுணையாய் இருப்போமே (
இன்ஷா அல்லாஹ் ! )
சேக்கனா M. நிஜாம்
இறைவன்
நாடினால் ! தொடரும்...................
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.