kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Tuesday, July 3, 2012
வாகனங்கள் : பள்ளிக் குழந்தைகளின் நண்பனா ? விரோதியா ?
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஒன்று நமது சமுதாயம் சார்ந்த காலஞ்சென்ற கொடை வள்ளல்கள் கல்வி நிறுவனங்களை நிறுவி நமதூருக்கு பெருமை தேடித்தந்தவர்கள். இந்நிறுவனங்களில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் இன்றும் பல்வேறுத்துறைகளில் உள்நாடு மற்றும் மேலை நாடுகளில் சிறந்து விளங்குகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க ஊரில் மேலும் வலுவூட்டும் விதமாக சில தனியார் ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளும் தங்களுடைய சேவையை திறம்பட செய்து ஊருக்கு பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கின்றன என்றால் மிகையாகாது.
சரி விசயத்துக்கு வருவோம், நமது குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு கல்வி கற்பதற்காக சென்று வர பயன்படுத்துவது வாகனங்களையே குறிப்பாக ஆட்டோ, ஆம்னி வேன், குட்டி யானை போன்றவற்றில் நிற்கும் நிலையிலும், டிரைவர் சீட்டின் மிக அருகிலும், பின்புற சீட்டில் உட்கார்ந்தும் மற்றும் நிற்கும் நிலையிலும், தலை, கைகளை கரம் சிரம் புரம் நீட்டிக்கொண்டு பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்து வருகின்றனர். பெரும்பாலும் எரிவாயு ( GAS ) நிரப்பட்ட வாகனங்களாவே இவை உள்ளன.
இதில் அதிக எடையுடன் கூடிய அவரவர் ஸ்கூல் பேக்குகளையும் அதில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக மாணவ, மாணவிகள் தங்கள் உடல் எடையில், 5 சதவீத அளவிற்கு தான் எடையை சுமக்க வேண்டும். ஆனால், தற்போதைய பள்ளி மாணவ, மாணவிகள் 15 சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்ட புத்தக மூட்டையை சுமக்கின்றனர்.
அதிக எடை கொண்ட புத்தக பைகளை சுமந்து செல்வதனால் கழுத்து வலி, கை, கால் வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகள் மேலும் எலும்பு வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் முதுகு கூன் விழுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
ஒரு ஆட்டோவில் அரசின் விதிப்படி நான்கு பேரும், ஆம்னி வேன்களில் எட்டு பேரும் அமர்ந்து பயணம் செய்யலாம் டிரைவர் உட்பட என்பதை காற்றில் பறக்க விட்டுவிட்ட இவர்கள், ஒரு ட்ரிப்களில் சுமார் பதினைந்து முதல் இருபது குழந்தைகளை ஏற்றிச்சென்று ஒருநாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு , மூன்று ட்ரிப்கள் அசுர வேகத்தில் பள்ளிகளை நோக்கி பயணிக்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு முன்னுதாரனமாக கடந்த கால தின நாளிதழில் கொடூர விபத்துகளைப் பற்றி வந்த செய்திகளைப் நாம் படித்து அறிந்திருப்போம். இதனால் ஏற்படும் இழப்பீடுகள் குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களையும், பள்ளி நிர்வாகத்தையும் சார்ந்துவிடும் சூழல் உருவாகிவிட வாய்ப்புகள் அதிகம்.
பெற்றோரின் கனிவான கவனத்திற்கு !
இதுபோன்ற பாதுகாப்பாற்ற வாகனங்களில் தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதி வேகத்தை தவிர்த்து, கூடுதலான குழந்தைகளை ஏற்ற வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களில் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம்.
தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு ஓர் வேண்டுகோள் !
உயர் கல்வியை பயிற்றுவித்து மாணவ, மாணவிகளை உயர்ந்த நிலைக்கு கொண்டுச்செல்லும் தங்கள் பள்ளிகளின் சேவைகள் மேன்மையானது. அதை யாராலும் மறுக்க இயலாது. அதேசமயத்தில் பள்ளிகளில் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நேரம் முடிந்தவுடன் அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேரவும் அந்த அந்த பள்ளிகளே பொறுப்பாகும். ஆகையினால் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் கூடுதலான குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வருவதை தடைசெய்து அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேர தங்கள் பள்ளிகளின் மீதுள்ள கடமை என்பதை கருத்தில்கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கு கூடுதலாக வாகனங்களை அனுபவமிக்க டிரைவர்களைக் கொண்டு இயக்குவதன் மூலம் இழப்பீடுகளை தவிர்க்கலாம் மற்றும் பெற்றோர்களின் அச்சங்கள் நீங்கி அவர்களிடம் நற்பெயரை பெற்று பள்ளியின் தரம் மேலும் உயர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் ( இன்ஷா அல்லாஹ் ! )
விபத்துக்களைத் தடுப்போம் ! குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்ப்போம் !!
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...................
Subscribe to:
Post Comments (Atom)
ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் கூடுதலான குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வருவதை தடைசெய்து அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேர தங்கள் பள்ளிகளின் மீதுள்ள கடமை என்பதை கருத்தில்கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கு கூடுதலாக வாகனங்களை அனுபவமிக்க டிரைவர்களைக் கொண்டு இயக்குவதன் மூலம் இழப்பீடுகளை தவிர்க்கலாம் . பயனுள்ள பகிர்வு உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்.
ReplyDelete