.

Pages

Thursday, December 20, 2012

குப்பைத்தொட்டி !!!


 பெயர்:  குப்பைத்தொட்டி

 மாற்றுப்பெயர்: சுகாதார 'குப்பைத்தொட்டி'

 வயது: எப்ப வேனும்ண்டாலும் 'துரு'ப் பிடித்து தூக்கி வீசப்படலாம்.

 நிரந்தரமா இருக்குமிடம்: 1. ரோட்டோரம், 2. தெருவோர முச்சந்தி, 3. சாக்கடையோரம்

 வேதனைப்படுவது: மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்காமல் எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகச் சேர்த்து எங்கள் மீது கொட்டுபவர்களை நினைத்து.

 எதிரிகள்: குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகளை அல்லாமல் காலதாமதம் செய்யும் உள்ளாட்சி ஊழியர்கள்

 வருந்துவது: எங்கள் மீது மலக் கழிவுகளை கொட்டுபவர்களை நினைத்து

 சாதனை: சுற்றுப்புறத்தைச்  சுத்தப்படுத்தும் தொட்டி

 வேண்டுகோள்: மக்கள்தொகை பெருகிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கும் கூடுதல் இட ஒதுக்கீடு அளித்து பொதுமக்களுக்கு கூடுதல் சேவையை அளிக்க ஆங்காங்கே தெருவின் முக்கியப் பகுதிகளில் தொட்டிகளை அதிக எண்ணிக்கையில் வைக்க வேண்டுகிறோம். மேலும் கொசுக் கடியிலிருந்து எங்களை பாதுகாக்கும் விதமாகவும், எங்கள் மீது வீசும் துர்நாற்றத்தை போக்கும் விதமாக எங்களைச்சுற்றி 'பிளிச்சிங்' பவுடரை இட வேண்டுகிறோம்.

 கருத்து: "குப்பைகளை தொட்டியில் போடுங்கள், வெளியில் போடாதீர்கள்", "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்’’

10 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    இந்த குப்பைதொட்டி ஒவ்வொன்றாக சொல்லி விளக்கம் கூறுகிறது.

    குறிப்பாக
    "வேதனைபடுவது, எதிரிகள், வருந்துவது"
    என்று சொல்லும் குப்பைத்தொட்டியே உனக்கு எங்களைத் தெரியவில்லையா?

    நாங்கள் தானே உன்னை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளோம். ஆகவே இப்படி ஒரு வாசகத்தையும் சேர்த்துக்கொள்.

    சந்தோஷப்படுவது:- பொதுசேவை செய்யும் சமூக ஆர்வலர்களைக் கண்டு.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. //எதிரிகள்: குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகளை அல்லாமல் காலதாமதம் செய்யும் உள்ளாட்சி ஊழியர்கள்//

    குப்பை தொட்டி வழிந்தாலும் மேலும் மேலும் மேலும் எங்கள் மீது தாங்கள் கையோடு கொண்டுவந்த குப்பைகளை கொட்டுவோர்.... எப்பூடி

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி இது போன்று சமுக ஆர்வம் கொண்ட நிஜாம் காக்கா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    குப்பைதொட்டி என்பது சுகாதாரத்துக்கு தான் அதன் அவல நிலை சுத்தம் செய்வதை பெரிய பாடு.

    ReplyDelete
  4. குப்பைத் தொட்டி குமுறுவது போல இருக்கிறது.

    ReplyDelete
  5. குமுறுவது போல் இல்லை, நம்மை குட்டுவது போல் இருக்கு

    ReplyDelete
  6. குப்பைத்தொட்டியின் குமுறலை அழகாக ***BIO DATA*** தயாரித்த விதம் அருமை.

    வாழ்த்துக்கள்.

    [சமீப காலமாக பல புதுப்புது வைரஸ் நோய்கள் பரவக்காரணம் இந்தக்குப்பை தொட்டிகளை சரிவர கவனிக்காமல் சுத்தம் செய்யாததும் ஒரு காரணம்.]

    ReplyDelete
  7. செம செம விழிப்புணர்வுடன் சொல்லிய பதிவு நன்றி ..

    ReplyDelete
  8. "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்’’

    குப்பைத்தொட்டியின் குமுறல் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அன்புச்சகோதரியின் வருகைக்கும் - கருத்துக்கும்

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers