.

Pages

Friday, December 21, 2012

இலவசம் முந்துங்கள் !!!


சமூகத்தில் காலம் காலமாக 'இலவசம்' என்ற பெயரில் பொதுமக்களிடயே வழங்கப்பட்டு வரும் பொருட்களால் சமுதாயத்தின் நிலைகள் மாறிக்கொண்டே வருகிறது என்றுச் சொன்னால் மிகையாகாது.

ஆம்..! பிறப்பு முதல் இறப்பு வரை எத்துணை இலவசங்கள் !

1. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செய்யும் அறிவிப்பாகிய “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவற்றையெல்லாம் இலவசமாக வழங்குவோம்” என்பதாகட்டும்...

2. தேர்தல் நடக்கும் முந்திய நள்ளிரவில் பொதுமக்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை, பரிசுப்பொருளாகட்டும்...

3. இலவசப் பொருட்கள் வழங்க “நமது தலைவர்” வருகிறார் என்ற கட் அவுட் அறிவிப்பாகட்டும்...

4. புதிய கடையின் திறப்பு விழாவின்போது கொடுக்கும் இலவசமாகட்டும்...

5. ஒரு பொருள் எடுத்தால் மற்றொன்று இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்...

6. நூறு சதவீத பொருள் வாங்கினால் கூடுதலாக இருபது சதவீதம் இலவசம் என்ற அறிவிப்பாகட்டும்...

7. பண்டிகைக்கால தள்ளுபடியாகட்டும்...

8. இன்று ஒரு நாள் மட்டும் எதை எடுத்தாலும் பாதி விலை ( ?! ) என்ற அறிவிப்பாகட்டும்...

9. ஒரு மனை வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பதாகட்டும்...

10. நூறு ரூபாய்க்கு டாப் அப் செய்தால் நூற்றுஐம்பது ரூபாய்க்கு டாக் டைம் என்பதாகட்டும்...

இப்படி இலவசங்கள் சமூகத்தில் ரொம்ப மலிவாகக் காணப்படுகிறது.

இலவசம் என்பதின் பொருள் உங்களிடம் ஒன்றை வழங்கிவிட்டு மற்றொன்றை அதாவது அவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை உங்களிடமிருந்து மறைமுகமாகப் பெறுவதே.

அரசால் தேவையானவர்களுக்கு இலவசங்கள் வழங்குவதில் தவறில்லை என்றாலும், உழைத்து பிழைக்கக்கூடிய வாய்ப்புள்ளவனுக்கும், வசதி படைத்தவனுக்கும் இலவசங்களைக் கொடுப்பது, அவனை சோம்பேறியாக்கிவிடுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய Professional Tax, Sales Tax, Central Sales Tax, Custom Duty, Income Tax, Dividend Distribution Tax, Excise Duty , Municipal & Fire Tax, Staff Professional Tax, Cash Handling Tax, Food & Entertainment Tax, Gift Tax, Wealth Tax, Stamp Duty & Registration Fee, Interest & Penalty, Road Tax, Toll Tax , Vat  & etc போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.

“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது” என்பது பலமொழி ஒரு மீனைக் கொடுத்தால் அவனுக்கு ஒரு வேலை பசியாற்றிவிடலாம். அந்த நிமிடத்திலேயே அவனை அடுத்தவர்களிடம் கையேந்தவும் பழக்கிவிடுகிறோம். இது மட்டுமல்லாமல் மீனை பரிதாபப்பட்டு கொடுப்பவனுக்கும் இதனால் வீணான செலவு. இதைத்தவிர்த்து அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் அவன் பிடிக்கும் மீனை அவன் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. நான் பிடித்த மீன் இது ! என்ற நினைவில் மகிழ்ச்சி பொங்கச் சாப்பிடுவான். இலவசமாகக் கிடைத்த மீனை சாப்பிடுவதைவீட, அவன் உழைத்து பிடித்த மீனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனி.

இன்று பயன்படுத்தப்பட வேண்டிய உழைப்பை நாளை நாம் பயன்படுத்தலாம் என்பதை தூக்கி தூர வைத்துவிட்டு அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது என்பதைக் கருத்தில் கொண்டு இறுதிவரை போராடிக் கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். நீங்கள் உழைக்கும்போது சில தோல்விகள் வரத்தான் செய்யும் தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை. எனவே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.

கடின உழைப்பே உயர்வான வெற்றிக்கு வழி !
[ இது ஒரு மீள் பதிவு ! ]
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

8 comments:

  1. தூங்குவது போல் நடிக்கும் சமூகத்தை
    ஒரு அடி போட்டு எழுப்ப முயலும் அருமையான
    விழிப்புணர்வுப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இலவசத்தால் ஒரு மனிதன் எந்த அளவுக்கு பாதிப்படைகிறான், சோம்பேறியாகி விடுகிறான் என்பதையும் அந்த இலவசம் நமக்கு இலவசம் என்ற பெயரில் நம் பணத்தையே மாற்று வழியில் கொடுப்பதையும் தெளிவாக சொல்லி இருக்கிறார் விழிப்புணர்வு பதிவு கொடுக்கும் வித்தகர் அன்புச்சகோதரர் நிஜாம் அவர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பதி்வுக்கு நன்றி்.

    இலவசமா?
    ஓ அது எனக்கு ரொம்ப பிடிக்குமே!
    எனக்கு மின்சாரமும் தண்ணீரும் இலவசமாக வேண்டும், கொடுக்கமுடியுமா?

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. மிகவும் சிறப்பான கட்டுரை, அடிச்சி தூள் கிளப்பிட்டீங்க... வாழ்த்துகள். எல்லோரும் இதை தெரிந்துக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  5. ஏம்ப்பா என்னதான் சொல்லவர்ற

    அரசு கொடுக்கிற மானியத்தை வாங்கணுமா வாங்க வேண்டாங்கிறியா

    விளம்பர நோட்டிஸ்களையே போட்டி போட்டுக்கொண்டு வாங்க முற்படும் நம்மாளுவோ இதை காது கொடுத்து கேட்பான்னுங்கிறியா? மாட்டவே மாட்டானுங்க

    போய் ஜோலியப் பாரப்பு

    ReplyDelete
  6. இலவசம் என்ற வார்த்தை இல்லையென்றால் எதையும் பார்க்கும் நிலையில் கூட இல்லாத ஒரு மனோ நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டியது அருமை... எங்கே போய் முடியுமோ தெரியவில்லை?

    ReplyDelete
  7. இலவசம் என்பது ..
    தூண்டில் இரை போல
    எல்லாம் சிக்கி கொள்ள தான் ..

    ReplyDelete
  8. இலவசம் என்ற வார்த்தை இல்லையென்றால் எதையும் பார்க்கும் நிலையில் கூட இல்லாத ஒரு மனோ நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டியது அருமை... எங்கே போய் முடியுமோ தெரியவில்லை?

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers