kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, July 12, 2012
அதிரையை வியக்க வைக்கும் உழைப்பாளிகள் !!!
ஆயுள் முழுவதும் உழைக்கும் உழைப்பாளிக்கு நன்றி செலுத்தும் வகையில் உழைப்பாளிகள் மதிக்கப் பட வேண்டும். அவர்களின் உழைப்பை நாம் பெருமையுடன் நினைவுகூற வேண்டும் !
அதிரைப்பட்டினம் – இவ்வூரில் சிறந்த உழைப்பிற்கு எடுத்துக்காட்டா விளங்கக்கூடியவர்கள் பலர் இருந்தாலும் அவர்களில் நம் நினைவில் என்றென்றும் குடியிருப்பவர், நன்கு அறிமுகமானவர், நல்ல பண்பாளர், கடின உழைப்பாளி போன்றவர்களில் சிலரை எடுத்துக்கொண்டு அவர்களைப்பற்றிய சிறுகுறிப்புடன் தொகுத்து வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவர்கள் நமக்கு நமக்கு பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கு கடின உழைப்பிற்கும், சிறந்த பண்பிற்கும் நல்லதொரு முன்னுதாரணமாக விளங்குவார்கள் என்ற நம்பிக்கையில்...
“ஆ”ரம்பம் செய்வோம்...
S.M. சுலைமான் :
குலசேகரப்பட்டினத்திலிருந்து
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு நமதூருக்கு
வந்து ஓறு சிறிய பெட்டிக்கடை வைத்து அதன் மூலம் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றவர்.
இன்னும் அதே பெட்டிக்கடை...! மார்க்க அறிஞராகவும், பேச்சாளராகவும்
இருந்துகொண்டு சேவைகள் செய்துவருவது சுலைமாக்கா அவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும். இவர் மேலத்தெருவில் வசித்து வருகிறார்.
முஹம்மது அப்துல்லா :
நடுத்தெருவைச் சேர்ந்த இவர் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றுள்ளவர். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர்...இவரின் பேச்சு நகைச்சுவை உணர்வுடன் காணப்படுவது கூடுதல் சிறப்பாகும்..... நமதூர் கடைத்தெருவில் சிறிய கடையொன்றை வைத்து அதன் மூலம் சிறுதொழிலாக அரிசி வியாபாரத்தை செய்து வருகின்றார்.
M.P. சிக்கந்தர் :
1968 முதல் இன்று வரை நாளிதழ், வாரஇதழ், மாத இதழ் போன்றவற்றை விற்பனை செய்யும் முதல் நபர் என்ற சிறப்பைப் பெறும் இவர் நமதூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். நமதூரில் இவரைத் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது இவரது நட்பு வட்டம். ஞாபக சக்தியில் சிறந்தவராக உள்ள இவர் வசிப்பது தரகர் தெருவில்.
P. அப்துல் ரெஜாக் :
“கொடுவா பிஸ்க்” என்றாலே முதலில் நம் நினைவில் வருபவர் இவர்தான். மீனை அழகாக துண்டுகள் இட்டு கூறு கட்டுவது இவரின் தனிச்சிறப்பு. தன் சிறுவயது முதலே “மீன் வியாபாரம்” செய்யும் இவர் கடின உழைப்பாளியும்கூட இன்றும் சுறு சுறுப்பாய் வேலை செய்வது என்பது இவரின் இயல்பு. கடைத்தெருவில் கடை வைத்திருக்கும் இவர் கீழத்தெருவைச் சார்ந்தவர்.
K.S.A. சாகுல் ஹமீத் :
உயரமான மனிதர்... துரு துரு பார்வை....சமூக சேவைகள்....இவரின் கூடுதலான சிறப்புகளாகும். கடற்கரைத்தெருவில் வசிக்கும் இவர் இப்பகுதியின் வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவரின் தொழிலாக உணவகம் உள்ளது.
S.M. முஹம்மது பாருக் :
முதியவரான இவர் ஹாஜா நகர் பகுதியைச் சார்ந்தவர். இவரின் தொழில் முடிதிருத்தம் செய்வது. கடற்கரைத்தெருவின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இச்சலூன் கடை மிகவும் எளிமையாகக் காட்சி அளிக்கின்றது. இவருக்கு சிறு தொழில் செய்வதற்கு சமூதாய அமைப்புகள் உதவி செய்ய முன்வர வேண்டும்.
சாகுல் ஹமீத் :
“தட்டு வண்டி” சாகுல் என்றாலே பட்டென்று அனைவரும் அறிவர். இவரின் கடின உழைப்பு, பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். சின்ன தைக்கால் தெருவைச் சார்ந்த இவர் பகுதி நேர தொழிலாக தெருத் தெருவாக “புட்டு” விற்று வருகின்றார்.
S. முஹம்மது ஹசன் :
“பட்டர் பிஸ்கட்” என்றால் முதலில் நினைவில் கொண்டு உச்சரிப்பது இவரின் பெயரைத்தான். நெசவுத்தெருவில் வசிக்கும் இவர் சொந்த தொழிலாக கடைகளுக்கு “பட்டர்” பிஸ்கட் விநியோகம் செய்துகொண்டு இருந்தவர் தற்போது நெருக்கமானவர்களுக்கு தென்னைந் தோப்புகளை பராமரிக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.பிலால் நகரில் வசிக்கும் இவர் ஏழ்மையான கடின உழைப்பாளி. நீண்ட காலமாக வடை, சம்சா, போண்டா போன்ற பலகாரங்களை தள்ளு வண்டி மூலம் விற்பனை செய்து வருகின்றார். இவற்றின் விலை மற்ற கடைகளைவீட குறைவு என்பது தனிச்சிறப்பு. கடைத்தெரு சந்திப்பு அருகே இவரின் அன்றாட வியாபாரம் செய்யும் இடமாக உள்ளது.
இறைவன் நாடினால் ! 'உழைப்பாளிகள்' இன்னும் தொடர்வார்கள்... பதிவுகளில் கம்பீரமாக
சேக்கனா M. நிஜாம்
Subscribe to:
Post Comments (Atom)
பெருமையாக இருக்கின்றது, உழைப்பாளிகளின் புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய தகவல்களும் பகிர்ந்தமைக்கு நன்றி.!!
ReplyDeleteஅன்புடன்
ஷஃபாத்
தம்பி சேக்கனா எம் . நிஜாம் அவர்களின் இன்னொரு சிறப்புக்குரிய முயற்சி. தொடர்ந்து தாருங்கள். ஆமாம் ஒரு கேள்வி ! உள்ளூரில் உங்களால் மட்டும்தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா? பாராட்டுக்கள்.
ReplyDeleteசூப்பர்... ஆகச்சிறந்த தொடர்... உழைப்பாளிகளை பற்றிய உண்மையான பதிவு... இதில் இரண்டு மூன்று பேர்களை நல்லா பரிச்சயம்... வித்தியாசமான முறையில் சிந்தித்து இந்த விஷயத்தை பதிவேற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்தி... ஹாட்ஸ் ஆஃப் சகோ.நிஜாம்...அருமை...
ReplyDeleteநம்மூர் உழைப்பாளிகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு முக்கிய தொடர், வாழ்த்துக்கள் நிஜாம். இது வரும் சந்த்தினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரனம்...
ReplyDeleteயாரும் நினைத்து பார்க்காத செய்திகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு முக்கிய தொடர், வாழ்த்துக்கள்
ReplyDeleteதம்பி நிஜாம்
காலத்தால் பல நவீன மயங்கள்
ReplyDeleteஆனாலும் அலை பாயாத
மனதிற்கு சொந்த காரர்கள்
போதும் என்ற மனமே பொன் செய்யும்
மருந்து என்பதை செயலால்
நிருபித்தவர்கள் ..ஊடத்தின் மொத்த
உருவம் தம்பி நிஜாம் ...வாழ்த்துக்கள்
அருமையான யோசனை காக்கா சேக்கனா M. நிஜாம் அவர்களுக்கு இப்படியல்லாம் எப்படி தோணுது உங்களுக்கு மட்டும் உழைப்பாளிகளுக்கு கிடைத்த ஒரு பெரிய உயர்வு. வாழ்த்துக்கள்.
ReplyDelete