.

Pages

Tuesday, August 21, 2012

எப்புடி இருந்த நீ !? ஏன் இப்புடி ஆயிட்டே !?

எப்புடி இருந்த நா.....!

அதிரைப்பட்டினம் “செடியன்” குளம் என்றாலே இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் சற்றேன்று நினைவு கொள்ளுமளவு ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அந்தளவிற்கு நமதூரைச் சேர்ந்த ஏராளமான சகோதர சகோதரிகள் ஒருமுறையாவது இக்குளத்தில் நீராடி மகிழ்ந்துருப்பார்கள். 

ஏறக்குறைய 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் உள்ள இக்குளம் மிகவும் பழமைவாய்ந்த அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மிகவும் பயன்பட்டு ஊருக்கே பெருமைச் சேர்த்ததென்றால் மிகையாகாது. குச்சி மிட்டாய் சாப்பிடும் குழந்தைகள் முதல் நடுநிசி வேளையில் குளித்து மகிழும் தோனாக் கானா வரை பயனடைந்தோர் ஏராளம் !
இப்புடி ஆயிட்டேன்....!!
இதன் நிலையைப் படத்தில் காணுங்கள்.....அந்தோ பரிதாபம்...! பரப்பரப்பாக எந்நேரமும் சலசலப்புடன் காணப்படும் இக்குளம் இன்றோ வெறிச்சோடிக் காணப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் மாத்திரம் அதாவது அடிக்கடி பாத்ரூம் போகும் ஆசாமிகளும், நுரை வர வர நல்ல “சோப்பு” போடும் நபர்களும் புழங்கக்கூடிய இடமாக மாறிவிட்டன.

உரிய நேரத்தில் இதன் மீது பார்வை படாத அந்த “மழை” ஒரு காரணமாக இருக்குமோ !? என்னவோ !?

2 comments:

  1. எப்புடி இருந்த நீ !? ஏன் இப்புடி ஆயிட்டே என்று சொல்லும் அளவுக்கு நமதூர் பழமேய் வாய்ந்த செடியன் குளம் இப்படி இருக்க காரணம் நமது ஊர் மக்கள் தான் எல்லோர் வீட்டிலும் போர் போட்டு தண்ணீர் எடுத்து அதில் குளிக்கிறார்கள் ஆதலால் எந்த குளத்தை பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை.பராமரிக்க ஆல் இல்லை.

    ReplyDelete
  2. மீண்டும் செடியனில் குளிக்க ஆசையாய் உள்ளது

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers