.

Pages

Saturday, December 8, 2012

கவனம் : தங்க நகை சேமிப்புத் திட்டம் !


முதலீடுகள் பலவிதம் அதில் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு விதம் உடனடியாக பணமாக மாறக்கூடிய அதன் தன்மையினால் தங்கத்தை லிக்விட் அசெட் ( Liquid Asset ) என்று அழைக்கக் கூடியவர்களும் சமூகத்தில் இருக்கின்றார்கள்.

சரி விசயத்துக்கு வருவோம்...

தங்க முதலீட்டில் பல பெயர்களில் திட்டங்கள் வந்தபிறகும், பெண்களுக்கு நகைச் சீட்டின் மீது இருக்கும் மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. யாரும் எளிதாகப் புரிந்துகொண்டு ஈஸியாக பணத்தைக் கட்ட முடியும் என்பதால் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

தங்க நகைச் சீட்டு கட்டாத ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் தேடிக் கண்டுபிடிப்பது என்பது கடினமான வேலை. மாதச் சம்பளம் 5,000 ரூபாயோ, 50,000 ரூபாயோ அக்கம்பக்கம் இருக்கும் நகைக் கடையில் நகைச் சீட்டு போட்டு தங்கம் வாங்க நினைக்காத பெண்களே இல்லை.
நகைகள் வியாபாரம் செய்யும் நிறுவனங்களும் தன் பங்கிற்கு தங்களிடம் வருகை புரியும் வாடிக்கையாளர்கள் தங்களிடம் நகைகள் வாங்குகின்றார்களோ இல்லையோ !? முதலில் அவர்கள் வைக்கும் வேண்டுகோள் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளில் இணைந்து மாத தவணையாக பணத்தை எங்களிடம் செலுத்துங்கள் என்று மூளைச்சலவை செய்வதே.

தங்க நகைச் சீட்டு நடத்தும் நிறுவனங்கள் வைக்கும் நிபந்தனைகள் :
1. உங்களது மாத தவணையை 20 / 15 மாதங்கள் ஒவ்வொரு அங்கத்தினரும் சேலுத்த வேண்டும். பணம் செலுத்தும் போது அதற்குறிய ரசீதை பெற்றுக்கொள்ளவும்.

2. பிரதி ஆங்கில மாதம் 10-ம் தேதிக்குள் மாதத்தவணை தொகையை செலுத்தி கண்டிப்பாக பதிவேட்டை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

3. பிரதி ஆங்கில மாதம் 15-ம் தேதி மாலை 4.00 மணியளவில் எங்களது கடையில் தங்க நகை சிறுசேமிப்பு அதிர்ஷ்டசாலி தேர்வு நடைபெறும். பரிசு விழுந்தவர்கள் பரிசு தொகைக்கு உண்டான நகைகளை பெற்றுக்கொள்ளலாம். மேற்கொண்டு தவணைகள் கட்ட வேண்டிய தேவையில்லை.

4. மாதத்தவணை தவறாது 20 / 15 மாதங்கள் தொடர்ந்து செலுத்திவருபவர்கள், 20 / 15 மாதங்கள் முடிந்ததும் போனஸ் தொகையை சேர்த்து அன்றைய விலைக்கேற்ப தங்க நகைகள் பெற்றுக்கொள்ளவும்.

5. பரிசு விழாதவர்களுக்கு மட்டும் போனஸ் தொகை உண்டு, விற்பனை வரி கிடையாது. வரியை கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்.

6. மாதத்தவணை தவறி செலுத்துபவர்கள் தங்களின் போனஸ் தொகயை இழக்க நேரிடும்.

7. மாதத்தவணை தொடர்ந்து கட்டமுடியாமல் நடுவில் நிறுத்தி விடும் அங்கத்தினர்கள் 20 /15 மாதத்தவணை முடிந்த பின்பு அன்பளிப்பு சாமான் கிரயத்தை செலுத்திவிட்டு கட்டியுள்ள தொகைக்கு நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

8. எக்காரணத்தை முன்னிட்டும் ரொக்கம் திருப்பி தரப்படமாட்டாது.

9. மாதத்தவணை தொடர்ந்து செலுத்தி வரும் அங்கத்தினர்களால் 20 / 15 மாதம் முடியும் முன்பு நகைகள் வாங்க விரும்பினால் செலுத்திய தொகை போக பாக்கி மாதங்களின் தவணை தொகையையும் அன்பளிப்பு சாமான் கிரயம் ரூ 500/- ஐயும் செலுத்திவிட்டு தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

10. முத்திரை பவுன், தங்க கட்டிகள் மேற்படி சேமிப்பிற்கு தரப்பட மாட்டாது.

11. ஒவ்வொரு மாதமும் செலுத்தும் தவணைத் தொகை ரசீதுகளையும் இந்த பதிவு புத்தகத்தையும் தங்க நகைகள் வாங்கும் வரையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

12. இந்த பதிவு புத்தகத்தை தவறவிட்டு விட்டால் அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

13. பிரதி மாதம் செலுத்தும் தொகைக்கு வெளியூர் செக்குகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

என இது போன்ற நிபந்தனைகளுடன்...

மாதம் 500 ரூபாய் வீதம் பணம் கட்டினால், பதினைந்தாவது மாதத்தில் நாம் 7,500  ரூபாய் கட்டியிருப்போம். இதற்கு போனஸாக ஐநூறு ரூபாய் சேர்த்து 8,000 ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக 200 ரூபாய் மதிப்புள்ள கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருள் அல்லது அந்த தொகைக்கும் சேர்த்து நகையாக வாங்கிக் கொள்ளலாம். இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுக்க இருக்கும் சிறிய, பெரிய நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. இதன் மூலம் நம்மிடம் ஒவ்வொரு மாதமும் வசூல் செய்யப்படும் தொகையை பிற தொழில்களில் அவர்களால் முதலீடு செய்யபட்டு கொழுத்த இலாபம் சம்பாதிக்கப்படுகின்றன என்பது பலரின் கருத்துகளாக இருக்கின்றன.

சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இது போன்ற தங்க நகைச் சேமிப்புத் திட்டத்தில் தாங்கள் இணைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. "அதிக லாபம்" என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர்கள்.

3. "உடனே முதலீடு செய்யுங்கள்...இன்றே கடைசி !" என்றெல்லாம் உங்களை அவசரப்படுத்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சியப்படுத்துங்கள்.

4. மற்றவர்கள் இணைகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

5. கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருட்கள் கிடைக்கும் என்பதற்காகவெல்லாம் இதில் இணையாதிர்கள்.

6. பிரபல நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரப்படுத்தும் இது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களில் இணைவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

7. எங்கள் நிறுவனங்கள் சார்பாக திருமண மண்டபங்களில் நடைபெறும் "ஒரு செமினாருக்கு வாங்க", "சாப்பாடு ஃப்ரீ..." டிபன் ஃப்ரீ” என்றெல்லாம் அழைப்பு வந்தால் போகாதீர்கள்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

குறிப்பு : சமீபத்தில் இது போன்ற நிறுவனங்களால் பணம் வசூல் செய்வதற்காக நியமிக்கப்படும் வெளிமாநில நபர்களால் எற்பட்ட பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு நம்முடைய சமூகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு பதியப்பட்டுள்ளது.

13 comments:

 1. விழிப்புணர்வு பக்கங்கள் ..

  பாதுகாக்க படவேண்டிய பக்கங்கள்

  புத்தகமாக வெளியிட்டு நம் மகளிருக்கு

  சென்றடைய வேண்டும் ..நல்ல பல கருத்துக்களை

  அள்ளி தரும் தம்பி நிஜாம் வாழ்வில்

  செல்வம் பருக து ஆ செய்கிறேன்

  ReplyDelete
 2. இதுக்குமேல் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் வேண்டுமா?, இதை நோட்டீஸாக அச்சடிச்சு வீடு வீடாக உபயோகிக்க வேண்டும். ஆனால்......... நீ என்ன சொல்லுவது அப்படி தட்டிக்கழிக்கும் தாய்மார்கள்தான் அதிகம் இருக்காங்க.. அல்லாஹ் காப்பாத்தனும்...

  ReplyDelete
 3. ஏமாருபவர்கள் இருக்கும்வரை எமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் நம் பணத்திற்க்கு நாம்தானே பாதுகாவல் பேராசை பெருனஸ்டமல்லவா?

  ReplyDelete
 4. ******************************************************************************************************************************
  மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)October 5, 2012 9:30 AM

  ஏமாருபவர்கள் இருக்கும்வரை எமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் நம் பணத்திற்க்கு நாம்தானே பாதுகாவல் பேராசை பெருனஸ்டமல்லவா?
  **************************************************************************************************************************

  K.M.A. JAMAL MOHAMED.
  Consumer & Human Rights.
  Head Office Palayankottai. TN.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
  **************************************************************************************************************************

  ReplyDelete
 5. விழிப்புணர்வு பக்கங்கள்...
  ..இதுக்குமேல் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் வேண்டுமா..நல்ல பல கருத்துக்களை
  அள்ளி தரும் காக்கா நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அனைவருக்கும் பயனுள்ள பதிவு
  பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நல்லா எழுதுங்க தம்பி, சிறுசேமிப்பு திட்டம்னு எவ்வளவு திட்டம் வந்திருக்கு. எல்லா பொம்பளைங்களும் இப்படித்தான். சொல்லும்போது தலையை ஆட்டிக்கிட்டு ஆமா இது தேவையான்னு சொல்லுவாங்க. கடைப்பக்கம் போயிட்டா அப்புறம் பாருங்க அவங்க வேளையை. தெருமுனை பிரசாரம் செய்தாலும் நல்லதுதான்.

  ReplyDelete
 8. பதிவுக்கு நன்றி.

  இது ஒரு கவர்சிகரமான மோசடி தொழில் என்று எத்தனை பேர்களுக்கு தெரியும், நம்மவர்களில் அநேகம் இதைப்பற்றி தெரிந்தும் தெரியாதது போல் இருப்பதுதான் வருத்தமாக இருக்கின்றது.

  விழிப்புணர்வு, விழிப்புணர்வு என்று நான்கு பக்கத்திலும் ஆளுக்கொருத்தர் குரல் கொடுத்து கத்துகிறார்களே, யாருக்காகவாவது விழிப்புணர்வைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வமாவது வந்ததுண்டா?

  அன்பான சகோதர பெருமக்களே, இதுவே காலம், நாம் எல்லா விஷயத்திலும் விழிப்புணர்வு அடைவதற்கு, இனியும் காலம் தள்ளினால் அதனால் வரும் விபரீதங்களுக்கு யார் பொருப்பு?

  (1980) 30 வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் கூட்டு குடித்தனமாக ஒருமனப்பட்டு வாழ்ந்து வந்தார்கள், அடுத்த வீடு, பக்கத்து வீடு, எதிர்வீடு இப்படி பழகி வாழ்ந்து இருக்கிறார்கள், பெரியவர்கள் சிறியவர்கள் நட்பு வளர்ந்து இருந்தது, கலந்து ஆலோசிக்கும் தன்மை இருந்தது, யாராவது ஒரு பெரியவர் எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருந்தது, அப்போதெல்லாம் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்திறவில்லை.

  (2012) இன்று எப்படி இருக்குது?
  சிந்தித்து பார்க்க நேரம் இல்லை.

  காலம் மாறலாம், நவீனங்கள் புதுசு புதுசாக உண்டாகலாம், இன்னும் வேறு எதுவெல்லாம் காலத்திற்கு ஏற்றார் போல் மாறலாம்,ஆனால் அந்த 24 மணிநேரங்கள் மட்டும் மாறவில்லை அன்பான சகோதர பெருமக்களே. அந்த 24 மணிநேரங்கள் நம் வாழ்க்கையின் தரத்தை குறிக்கின்றது.

  வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 9. பயனுள்ள விழிப்புணர்வு பதிவு

  ReplyDelete
 10. அனைவருக்கும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு

  ***ஆளுக்கொருத்தர் குரல் கொடுத்து கத்துகிறார்களே, யாருக்காகவாவது விழிப்புணர்வைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வமாவது வந்ததுண்டா?***

  ReplyDelete
 11. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கடைசிக் “குறிப்பு” தான் மிகவும் முக்கியமானதாகும்.இதனையே அதிரைக்காரன் அவர்களும் கருத்துரைக்கிறார்கள். நானும் வழிமொழிகிறேன். மயிலாடுதுறைக்குப் பக்கம் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையான ஊரில் இப்படி நகைக் கடையில் வைத்த தொடர்பினால்(அவர்களிடம் கைப்பேசி இலக்கம் அறியத் தருவதால்) மிகப் பெரும் சீரழிவை நம் சமுதாயக் கண்மணிகள் பெற்றதை இன்று நினைத்தாலும் உள்ளம் வேதனையில் வாடுகின்றது. எனவே, நம் சமுதாயக் கண்மணிகள் “வைரம்” போல் பாதுக்காக்கப்பட வேண்டியவர்கள்; வீணாக அவர்களாகவே இப்படிப்பட்ட சிக்கலில் -வலையில் வீழ்ந்திடா வண்ணம் விழிப்புணர்வை உண்டாக்கும் ஆக்கம் படைத்த விழிப்புணர்வு வித்தகர்க்கு என் வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. //மற்றவர்கள் இணைகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம்.//

  மிகச்சிறந்த விழிப்புணர்வு பதிவு

  மற்றவர்கள் இணைகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

  ReplyDelete
 13. http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers