.

Pages

Thursday, December 6, 2012

[ 10 ] பயண அனுபவங்கள் – சீனா


புதிதாக தயாரிக்கப்பட்ட  மாடல் ஒன்றைக் கண்டவுடன் எங்களின் சந்தைகளாகிய  Middle East & North Africa ஆகிய இரு பகுதிகளுக்குரிய ஏற்றதொரு பொருளாக இருந்ததால் இவற்றை இறக்குமதி செய்து சந்தைப்படுத்தினால் விற்பனை படு ஜோராக இருக்கும் என்று எண்ணியவுடன் உடனடியாக ஆர்டர் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. பொருளின் தரம், விநியோகக் காலம், பணம் செலுத்தும் முறையில் அவர்களின் கட்டுப்பாடுகள், எங்களுடைய எதிர்பார்ப்புகள், விலை பேரம் பேசுதல் போன்ற சாதாரண நடைமுறைகளை உறுதி செய்துவிட்டு அவர்களிடமிருந்து  Proforma Invoice  ஐ கேட்டேன்.

Proforma Invoice  என்றால் என்ன என்பது பற்றி சிறுகுறிப்பு ஒன்றை தர ஆசைப்படுகிறேன். ஒரு நிறுவனமொன்றில் விற்பனைக்காக குறிப்பிட்ட பொருள் ஒன்றை நாம் ஆர்டர் செய்யும் முன் அனைத்து விவரங்கள் அடங்கிய உத்தேச பட்டியல் ஒன்றைப் பெறுவது அவசியமானது. குறிப்பாக நாம் ஆர்டர் செய்யக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை, விலை, பேக்கிங் முறை, விநியோகக்காலம், பணம் செலுத்தும் முறை, வங்கி விவரங்கள், விநியோகக்கூடிய இடம் போன்றவற்றுடன் நமது கூடுதல் தேவைகள் என்ன என்பது பற்றியும் தெளிவாக அதில் குறிப்பிடப்பட வேண்டும். இறுதியாக நமது நிறுவனம் சார்பாக அவர்களிடமிருந்து விற்பனை ஒப்பந்தம் [ Sales Contract ] செய்யும் முன் இவை நமக்கு மிகவும் பயன் தரக்கூடியதாக அமையும்.

அவர்களிடமிருந்து விற்பனை ஒப்பந்தத்தை [ Sales Contract ] அனைத்து விவரங்களுடன் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக் கேட்டுக்கொண்டு அங்கிருந்து அடுத்தடுத்த பூத்தை நோக்கி நகர்ந்தேன்.

அப்போது வளைகுடா நாட்டின் ஒன்றிலிருந்து முதல் முறையாக வணிகச் சந்தையில் கலந்துகொள்வதற்காக வருகை புரிந்திருக்கும் எனது நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவரின் முகத்தை பார்த்தவுடன் தெரிந்து கொண்டேன் மிகவும் களைப்புடன் காணப்படுகிறார் என்று. அவரை அவ்வாறு காண்பது எனக்கு வியப்பில்லை என்றாலும் இவ்வணிகச்சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் சார்பாக இடம்பெற்றுள்ள ஏறக்குறைய 60,000 பூத்துகளைக் கொண்ட ஒவ்வொன்றிருக்கும் சென்று வருவது என்பது அவருக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பெரும் சோர்வை ஏற்படுத்தும் என்பது உண்மை.
நான் அவரிடம் கூறினேன் ஒரே நேரத்தில் ஒவ்வொரு ஹால்களுக்கும் சென்று அதிக எண்ணிக்கையான பூத்துகளுக்கு நீங்கள் செல்வதை வீட உங்களின் சந்தைக்கு ஏற்ற பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்துச் சென்றால் உங்களுக்கு ஏற்படுகிற தடுமாற்றம், வீண் அலைச்சல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளலாம் என்றும், மேலும் வணிகச்சந்தையை ஏற்று நடத்தக் கூடியவர்களால் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உதவி நிலையத்தை தொடர்பு கொண்டு நமக்கு தேவையான உதவியைக் கேட்டுப்பெறலாம் என்றேன்.

கடந்த வணிகச்சந்தையைக் காட்டிலும் இம்முறையும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு சீன உற்பத்திப் பொருட்களை தங்களின் நாடுகளில் சந்தைப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டி வருவதை காண முடிந்தது. இதற்கு உதாரணமாக நாம் அணிந்திருக்கிற அல்லது அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஏதேனும் ஒன்றாவது சீனத் தயாரிப்பாக இருக்கும்.

அந்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு சிறிய பொருளை எவ்வாறு சந்தைபடுத்தப்பட வேண்டும் என்ற நுணுக்கத்தை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்றார் போல் புதுப்புது சிந்தனையை முனைப்புடன் செயல்படுத்தி வருவார்கள். குறிப்பாக நிதி நெருக்கடி, போட்டியாளரின் விலை குறைப்பு, கச்சாப்பொருட்களின் தட்டுப்பாடு, இயந்திர கோளாறு, திடீர் விற்பனை சரிவு போன்றவற்றை எதிர் கொள்ளும் போது இவற்றை இலகுவாக சமாளிக்கும் திறனை பெற்றிருப்பார்கள். இவைகள் ஒரு காரணமாக இருப்பதனால் ஏற்றுமதி தொழிலில் போதுமான வளர்ச்சி பெற்று சீனாவின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது என்றால் மிகையல்ல.  அந்நாட்டின் தொழிற்வளர்ச்சியில் ஏற்பட்ட சிறப்பான மாற்றத்தினால் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் உலக அளவில் சீனா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழுகைக்கான நேரம் வருவதை அறிந்துகொண்ட நான் எனது நண்பரையும் கூட அழைத்துக்கொண்டு நேராக ப்ரேயர் ஹாலை நோக்கி நடந்தேன்...

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ‘பயண அனுபவங்கள்’ தொடரும்...

9 comments:

  1. சகோதரர் நிஜாமின் சீனப்பயண அனுபவம் தொடர்ந்து படித்தால் நாமும் சீனப்பயணம் தொடர வேண்டும் போல மனதில் ஆசை வளர்கிறது. இது வெறும் அவருடைய சீனப்பயணம் மட்டுமல்ல நம்மையும் இப்படி வணிகம் செய்ய தூண்டும் விழிப்புணர்வும் ஆக்கம் என்று கூட சொல்லலாம். சொந்த பயணக்கட்டுரையிலும் பிறரும் பயன்பட செய்யும் நல்ல அனுபவ ஆக்கம்...! தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நான் காங்காங் சென்றபோது சீன ஓரத்தில் மலை மேல் நின்று சீனாவை பார்த்தேன் .தங்கள் கட்டுரை படிக்கும்போது அவசியம் சீனாவை பார்க்க மனம் விரும்புகின்றது .விமான பயண சீட்டு நண்பர்கள் காங்காங் வரச் சொல்லி அழைக்கின்றார்கள் இறைவன் நாடினால் ‘சீனா செல்வோம் உங்களுடன்




    ReplyDelete
  3. Please visit

    http://nidurseasons.blogspot.in/2012/12/10.html

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    அன்பின் தம்பி சேக்கன்னா எம்.நிஜாம் அவர்களின் சீனப் பயண கட்டுரை சீனா நெடுஞ்சுவர்போல் போய்கொண்டிருக்கு. பின் வருங்காலங்களில் இதை ஒரு தொகுப்பு நூலாக வெளியிட்டாலும் நல்ல வெகுமதியை பெறும்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. நல்ல ஒரு சுற்றுலா பதிவு மிக்க நன்றி

    மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

    ReplyDelete
  6. சீனா தேசம் சென்றாகிலும்
    செறிய கல்வியை தேடு என்பது
    நபி மொழி ..தம்பி நிஜாமின்
    சீன பயணம் நல்ல அனுபவ கட்டுரை

    ReplyDelete
  7. அறியாதன் பல அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஏற்றுமதி/இறக்குமதி தொழில் முனைவோருக்கு ஒரு சிறந்த அறிந்துக்கொள்ளக்கூடிய தளமாக இதை நான் அறிகிறேன்

    ReplyDelete
  9. சீனப்பயணம் கொஞ்சம் சிரம்மம்தான் நமக்கு. ஆனால் இந்த பதிவு நாம் சீனப்பயண செய்ய தோணுது.அருமை வாழ்த்துக்கள் சேக்கனா M. நிஜாம் காக்கா அவர்களுக்கு.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers