புனித ரமலான் மாத நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு முறையாக அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் அரசால் மானிய விலையில் பச்சரிசியைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களின் பொறுப்புகளில் இதற்குரிய பணிகள் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகின்றன.
கடந்த வருடம் 3,801 டன்கள் பச்சரிசியை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக அரசால் நிர்ணயம் செய்துள்ள பச்சரிசியின் விலை கிலோ ஓன்றுக்கு ரூபாய் 1/- வீதம் அரசிற்கு செலுத்தப்பட வேண்டும். மேலும் பச்சரிசியை ஏற்றி வருகிற வாகனங்களுக்குரிய வாடகைத் தொகையினையும் அந்ததந்த பள்ளி நிர்வாகமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரைப்பட்டினம் ஏறக்குறைய 29 பள்ளிவாசல்கள் உள்ளன. அதில் ஓன்று அல்லது இரண்டு பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்து பள்ளிகளிலும் நோன்பு திறப்பதற்காக கஞ்சி ஏற்பாடுகளை அந்ததந்த பள்ளிகளின் நிர்வாகத்தால் திறம்பட செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி இந்த வருடமும் அரசின் மானிய விலையில் கிடைக்கும் பச்சரிசியை பயன்படுத்தும் விதமாக கடந்த முறை அனுமதி பெற்ற நமதூரைச் சார்ந்த பள்ளி வாசல்கள் மற்றும் புதிதாக அனுமதி கோரும் பள்ளிவாசல்கள் என அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள் ஒப்புதலுடன் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் கடந்த இரண்டு மாதம் முன்பாக அளிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட ஆணையின் ( ந.க எண் : 24479 / 2012 / க6 ) அட்டவணையில் நமதூரைச் சார்ந்த 13 பள்ளிவாசல்கள் மட்டுமே அதில் இடம்பெற்றிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அரசின் அட்டவணையில் இடம்பெறாத நமதூரைச் சார்ந்தப் மற்ற பள்ளிகளின் விவரங்கள் பின் வருமாறு :
1. பெரிய ஜும்ஆ பள்ளி
2. அல் பாகியத்துஸ் சாலிஹாத் பள்ளி – மேலத்தெரு
3. ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளி
4. மஸ்ஜித் நூர் – வண்டிப்பேட்டை
5. சித்திக் பள்ளி – புதுமனைத்தெரு
6. மக்தூம் பள்ளி – சால்ட் லேன்
7. முஹைதீன் ஜும்ஆ பள்ளி – தரகர் தெரு
8. கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி
9. அர் ரஹ்மான் பள்ளி – ஆதம் நகர் ( M.S.M. நகர் K.S.A. லேன் உள்ளடக்கிய பகுதி )
10. உமர் (ரலி ) பள்ளி – சுரைக்காப் பள்ளி
11. இஜாபா பள்ளி – C.M.P. லேன்
12. மஃப்ரூர் பள்ளி - C.M.P. லேன்
இதற்குரிய பொறுப்புகளை முன் நின்று கவனிக்கும் ஹழ்ரத் பிலால் ( ரலி ) நகர் மஸ்ஜித்தின் முத்தவல்லியும், AAMF மற்றும் பைத்துல்மால் நிர்வாகியும் ஆகிய சகோ. S.M.A. அஹமது கபீர் அவர்களைச் சந்தித்து விளக்கம் கோரினோம்.
தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு :
1. ரமலான் மாத நோன்பிற்கு மானிய விலையில் அரசால் வழங்கப்படும் பச்சரிசியை அதிரைபட்டினத்தில் கிடைக்கப்பெறாத மற்ற பள்ளிவாசல்களுக்கும் துரிதமாக வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
2. காலச் சூழலுக்கேற்றவாறு மானிய அரிசியை அனைத்து பள்ளிவாசலுக்கும் அதிகளவில் வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
3. காலதாமதத்துடன் வழங்குவதை தவிர்த்து புனித ரமலான் மாத நோன்பு ஆரம்பிக்கும் முன்பாகவே வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
4. அரசால் வழங்கப்படும் பச்சரிசியை அந்தந்த பள்ளிவாசல்களுக்கு அரசின் செலவில் நேரடியாக விநியோகம் செய்ய வாகனங்களை ஏற்பாடு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...................
0 comments:
Post a Comment
கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.