.

Pages

Monday, December 24, 2012

'ப்பூ'... திமிரப்பாரு !


'தராசு' நமக்கு நன்கு அறிமுகமான ஒரு கருவி. ஒரு பொருளின் எடை அளவை சரியாக எடை போடுவதற்காக பயன்படுத்தப்படும் ஓன்று. அது ஒரு இயந்திரம் அதற்கு விருப்பு / வெறுப்பு எல்லாம் கிடையாது. தெரிந்தவர் / தெரியாதவர் என்ற பாகுபாடில்லை. கைபிள்ளையாக இருந்து கொண்டு தன் கடமையைச் செய்து உண்மையான விசுவாசத்தை தன் எஜமானிக்குக் காட்டும்.

சரி விசயத்துக்கு வருவோம்...

பலசரக்கு, காய்கறி, பழக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் போன்றவற்றில் எடை மோசடி ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடையைப் பத்தி விரிவா எவ்வளவு வேணும்டாலும் எழுதி ஒரு புத்தகமே வெளியிடலாம்... அந்தளவு விஷயம் இருக்கும்.....அனைத்து ரேஷன் கடைகளிலும் 'எலட்க்ரானிக் தராசு' மூலமாகத்தான் பொருளை எடை போட்டு கொடுக்கணும்டு நம்ம அரசு அறிவித்தும் அரசு வழங்கிய எலட்க்ரானிக் தராசை அப்படியே ஓரமா ஒதுக்கி வைச்சிட்டு சில கடைகளில் வில் தராசு மூலமா எடை போடுறாய்ங்களாம் !? ஏன் இப்புடின்னு கேட்டா ? கரண்ட் இல்லிங்கன்னு பதில் !? அதிலேயும் இருபது கிலோ அரிசி வாங்கினா பதினெட்டே முக்கால் தான் இருக்காம். இரண்டு கிலோ சீனி வாங்கினால் ஒன்னேமுக்கால் சொச்சம் தான் இருக்காம். சரி மிரட்டும் மின் வெட்டிலிருந்து அவ்வப்போது தலைகாட்டும் மின்சாரத்தை பயன்படுத்தி எலெக்ட்ரானிக் தராசின் மூலம் அவசர அவசரமா எடை போட்டாலும் இதே பிராப்ளமாம் !

அடுத்து 'கூம்பு குடுவை' பெயரே வித்தியாசமா இருக்குல்ல... இத வச்சிதான் மண்ணெண்னையை அளக்கிறாய்ங்க...அப்படியே மல்லாக்க படுத்துட்டு குடுவையை நிமிர்த்தி கவுத்திப் பார்த்தா அதில் உலகம் தெரியுமளவுக்கு ஓட்டை ! அதிலே நுரையை பொங்க  பொங்க வரவழைத்து அவசர அவசரமா அளந்து கொடுக்கிறாய்ங்களாம்... அஞ்சு லிட்டர் வாங்கினா கேனிலே நாலேகால் லிட்டரு காட்டுதாம்...!? ரெய்டு வரும் ஆபி'ஜ'ரும் கண்டுகிறதுல்லையாம் அவிய்ங்களும் தன் பங்குக்கு கலெக்க்ஷனை கம்முண்டு வாங்கிட்டு பொத்திகிட்டு போறாய்ங்களாம். நாட்லே விவரம் தெரிஞ்சவங்க ரேஷன் கடைக்காரன்கிட்ட 'என்னப்பா எடை குறையுதே'ன்னு முன்னாடி நிண்டு தில்லா கேட்டா... வரிஞ்சி கட்டிகிட்டு சண்டைக்கு வர்றாய்ங்களாம்.

கட்டுக்கடங்காத கூட்டத்தில்,

கால் கடு கடுக்க...
வேகாத வெயிலில்...
வேர்த்து விறு விறுக்க...
நாக்கு வறண்டு...
வரிசையில் நிண்டு...
கார்டைக் காட்டி...
காசை நீட்டி...
சீட்டே வாங்கி...
பையை நீட்டி...
சரியா பொருளக் கேட்டா...

'ப்பூ'... திமிரப்பாரு !

அப்புடியும் 'நமக்கேன் வம்பு'ன்னு சைலண்டா விலகி வேறு கடைக்கு சென்றாலும் அங்கேயும் இந்த முள்ளு ஆ(ட்)டிக்கிட்டு தன் “ஜொ”ள்ளை தொடருதுப்பா.

தான் ஆடாட்டியும் தன் தசை ஆடும்பாய்ங்கலே அது போல தராசில் "முள்ளு' மட்டும் ஆடுதாம் !? கூம்புக் குடுவையிலே நுரை மட்டும் பொங்குதாம் !? காசு கொடுத்தும் 'கனம்' இல்லையாம் !? எடை குறையுதாம்ப்பா...!

என்ன கொடுமைடா இது !?
[ இது ஒரு மீள் பதிவு ] 
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் தொடரும்....

6 comments:

  1. இது காலம் காலமா தொண்டு தொட்டு இதே நிலமைதான் நிலவுது... இப்படி அநியாயத்து ஊர அடிச்சி உலையிலே போடுறாய்ங்களே, கொடுமதான்

    ReplyDelete
  2. ஸுஐபு நபி காலத்தில்
    எடை மோசடிக்காக
    அந்த சமுதாயமே அளிக்கப்பட்டது
    இந்த காலத்தில் மோசடி "நியாய விலைகடை "
    என்ற பெயரில் நடப்பதுதான் கொடுமை

    ReplyDelete
  3. புதிய ஆக்கம் அருமை தெளிவு.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    உலக வரைபடத்தில் நம் பாரதநாடு பார்ப்பதற்கு மிகவும் அழகுவாய்ந்த இலட்சனமாக இருக்கும், ஆஸ்திரேலியாவை பார்த்தால் ஒரு பன்னி செத்து கிடப்பதுபோல் தெரியும், ஆப்பிரிகாவை பார்தால் ஒரு கால் ஒடிந்த எடுமை மாடு போல் தெரியும்.

    மற்ற நாடுகளிளெல்லாம் அநீயாயம், அக்கிறமங்கள் நடந்தாலும், நம் பாரத நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் பலவகையான அநீயாயங்களும் அக்கிறமங்களும் நடந்த வண்ணம் இருக்குது. இதுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க எத்தனையோ சமுக அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வந்தாலும், சமுக அமைப்பைக் காட்டிலும் பெரிய அமைப்பு எது தெரியுமா? அதுதான் மக்கள் அமைப்பு. ஆம், அந்த மக்கள் அமைப்பு ஒத்துழைக்க முன்வருவதில்லை.

    ஒரு சில பிரச்சனைகளை தனி ஒருமனிதனாக நின்று சாதிக்கமுடியும், இன்னும் சில் பெரிய பிரச்சனைகளை சமுக அமைப்பாக நின்று சாதிக்கமுடியும், இதையெல்லாம் விட ஆகக்கூடின அதாவது மேலே கட்டுரையில் சொல்லப்பட்ட பிரச்சினைகளை எல்லோரும் சேர்ந்தால் மாத்திரமே நேரான பாதையில் கொண்டுவரமுடியும்.

    யார்? யார்? தயார்?

    முதலில் ஒரு கடையை சரிசெய்தால் மற்றவைகள் தானாக வழிக்கு வந்துவிடும். வாருங்கள் முயற்சிப்போம், தயக்கம் வேண்டாம்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

  5. செமவிழிப்புணர்வு ஆக்கமப்பா.

    தக்க சமயத்தில் பதிந்து கலக்கிட்டேப்பா..

    இந்த மோசடி காலா காலமாக நடந்து வருகிறது.

    ரேசனில் நுகர் பொருள் வாங்க வருபவர்களும் இது பற்றி கேட்டு சம்பந்தப்பட்ட இலாக்காவுக்கு இது பற்றி எந்த புகாரும் செய்வதில்லை.
    பொது மக்களின் அலட்சியப்போக்கும் இவர்களின் மோசடிக்கு ஒரு வகையில் ஊட்டச்சத்தாக ஆகிவிட்டது.
    ஆகவே தாங்கள் வாங்கும் பொருளின் எடை குறைவாக இருப்பின் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தால் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்று ஏமாற்ற யோசிப்பார்கள்.

    ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்.

    நம் நாட்டின் நிலைமை பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    அப்புறமா நீங்க சொல்லுவீங்க

    ப்பூ..திமிரப்பாரு..!

    ReplyDelete
  6. சமூக தீமையிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமென்றால் நிச்சயமாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றிக்கும் விழிப்புணர்வு அவசியம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers