'தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்' என்பது முதுமொழி. 'பல் போனால் சொல் போச்சு' என்பது சொலவடை. பல் இல்லாவிட்டால் 'பொக்கை வாய்' என கேலி பேசுவோரும் உண்டு. இந்த பல்லில் சிங்க பல், தங்க பல், கடாப் பல், அறிவு பல், நரிப்பல், தெத்திப் பல் போன்ற பெயர்களிலும் இவற்றை அழைப்பது உண்டு.
பல்லுக்கு இம்புட்டு பில்டப்பா !? :)
1. நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்பட்டவுடன் உடனே ஒரு 'பாரசிட்டமால்' போட்டால் சரியாகிவிடும் என எண்ணுகின்ற ஒரு வகையினரும்...
2. முறையான மருத்துவரிடம் சென்று அலோபதி சிகிச்சையை எடுத்துக்கொள்வோரும்...
3. இல்லை.... இல்லை.... நாட்டு வைத்தியம் பார்த்தல்தான் எனக்கு குணமாகும் !? என்று சொல்லி, அருகில் உள்ள ஊருக்குச் சென்று பற்களில் உள்ள பூச்சிகளை (புழு) நீக்கிவிட்டால் போதும் குணமாகி விடலாம் !? என எண்ணுகின்ற மற்றொரு வகையினரும்
என இருக்கத்தான் செய்கின்றனர்.
சரி விசயத்துக்கு வருவோம்...
பல் வலி என்றவுடன் சிலர் பல்லில் பூச்சி (புழு) எடுப்பதற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள 'உடையநாடு' என்ற கிராமத்திற்கு சென்று அங்குள்ள நாட்டு வைத்தியர் !? ஒருவரை சந்தித்து பற்களில் இருக்கும் பூச்சியை (புழு) !? எடுத்துவிட்டால் பல்வலி குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சிலர் அந்நாட்டு வைத்தியரை !? நாடிச்செல்கின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் சென்று வருவது நமது கவனத்துக்கு வந்தவுடன் அதன் உண்மை நிலையை அறிய நாம் விசாரணையில் அதிரடியாய் இறங்கினோம்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இங்கிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் உள்ள அழகிய கிராமம் 'உடையநாடு'. பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் இவ்வூரில் பல்லுக்கு பூச்சி எடுக்கும் டாக்டர் எங்கே ? என்றாலே அனைவரும் கைகாட்டுகின்றனர் அவர் சொந்தமாக நடத்துகின்ற சிறிய கூல்டிரிங்க்ஸ் கடையை நோக்கி. நாமும் அங்கே சென்று நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் தொடர்ந்து பேசினோம்...
'ஆமாம்...பல்லில் பூச்சி எடுப்பதற்காக பல ஊர்களிலிருந்து இங்கு வருகின்றனர். ஒரு வகை வேரை’க்கொண்டு [ அதன் பெயர் என்ன ? என்பதை சொல்ல மறுத்துவிட்டார் ] வலி ஏற்படும் பற்களில் வைத்து தேய்த்தால் அதில் உள்ள புழுக்கள் !? அனைத்தும் வெளியே வந்துவிடும். பல்லை பிடுங்க வேண்டியதில்லை'.... என்று உரையாடிக் கொண்டிருக்கும் போதே ஒரு அம்மா தனது 8 வயது சிறுவனை பல்லில் வலி எனச்சொல்லி பற்களில் பூச்சி எடுப்பதற்காக இவரிடம் அழைத்து வருகின்றார்.
உடனே எங்களை அமர வைத்துவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு செல்வதாகச் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் கையில் வேர் ஒன்றைப் பிடுங்கி கொண்டு வருகிறார். அவ்வேரை சிறுவனின் வாயில் விட்டு ஆட்டுகிறார்.....சில நிமிடங்களில் என்ன ஆச்சர்யம் ! புழு வந்து கீழே கொட்டுகிறது...! அதுவும் ஒன்றல்ல... இரண்டல்ல... பத்து புழுக்கள்… உடனே கையில் வைத்துள்ள இலையை பற்களில் வைத்து மெல்லச்சொல்லி அச்சிறுவனிடம் கொடுக்கிறார். இதோடு ட்ரீட்மென்ட் ஓவர் !
இதற்காக ஒரு வருட கேரண்டி !? கொடுத்து மருத்துவ பீஸ்’ஸாக ரூபாய் 100 ஐ பெற்றுக்கொண்டார் அதாவது ஒரு பூச்சிக்கு(புழு) ரூபாய் 10 வீதம் வசூல் செய்கின்றார்.
இம்மருத்துவ முறையைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டோம்.... தனது பெயரை 'இளங்கோவன்' என அறிமுகம் செய்துகொண்டு தொடர்கிறார்...
பற்களில் பூச்சி [ புழு ] எடுப்பது குறித்து பிரபல பல் மருத்துவர் பஜ்லூர் ரஹ்மான் BDS அவர்களை சந்தித்து விளக்கத்தைக் கோரினோம்…
ஆக மொத்தத்தில் மருத்துவர் பஜ்லூர் ரஹ்மான் BDS அறிவுரையின் பேரில் பற்களில் பூச்சி(புழு) எடுப்பது என்பது மோசடியான ஓன்று என்பது நிரூபணம் ஆகின்றது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடியான வைத்திய முறைகளை தவிர்த்துக்கொள்வது நமது உடலையும், பொருளாதாரத்தையும், நேரத்தையும் பாதுகாப்பதாக இருக்கும்.
பல்லில் ஏற்படும் சொத்தை, கூச்சம், பற்குழி, சுத்தம் செய்தல் போன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள் பாதுகாக்கப்படும்.
மேலும் கீழ்கண்ட மூன்று விஷயங்களை முக்கியமாக நாம் கடைபிடித்தால் நம் பற்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்பது மருத்துவரின் ஆலோசனையாக இருக்கின்றது.
அதாவது,
1. தினமும் இருமுறை பல் துலக்குவது.
2. சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் தண்ணீரால் வாய்யை கொப்புளிப்பது.
3. ஆறு மாதத்திற்கு ஒரு முறை தகுதியுள்ள மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது.
நமது பல்லை பாதுகாக்க நாம் அடிக்கடி பல் மருத்துவரை சென்று பார்ப்பது இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. தகுதியுள்ள பல் மருத்துவரை சந்தித்து அவர்களின் ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்வது என்பதே சிறந்தது.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் தொடரும்....
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஎனக்கு பற்களில் சமீபகாலமாக கூசுதல், ஈறுகளில் வலி, பற்களை தாங்கி உள்ள சதைப் பகுதிகளில் வலி இப்படி பல அவதிகளில் சிரமப்பட்டேன்.
பற்கல் சம்பந்தப்பட்டவைகளுக்கு துபாய் போன்ற அரபு நாடுகளில் சிகிச்சை பெறுவது என்றால் அது ரொம்ப ஜாஸ்தி.
பற்களின் அவஸ்தையினால் கவலைப்பட்டுக் கொண்டிருந்த வேலையில் எனக்கு பழக்கமான ஒரு ஆப்பிரிக்கா-எதியோப்பியா தேசத்தைச் சேர்ந்த நண்பர் கீழ்கண்டவாறு பற்களை துலக்கச் சொன்னார்.
பல் துலக்கும் பிரஸ்சில் பற்பசையை எடுத்துக்கொண்டு அந்த பற்பசையின்மேல் சிறிதளவு உப்புத்தூள்களை இட்டு இறுதியில் அதன்மேல் மிகவும் சிறிதளவு கடுவு எண்ணெயை இட்டு தினமும் காலை, பகல், இரவு படுப்பதற்கு முன் என துலக்கி வந்தால் பற்கள் சம்பந்தப்பட்ட எந்த நோயும் வராது என்று சொன்னார்.
நான் அன்றிலிருந்து இதை தொடர்ந்து செய்து வருகின்றேன், உண்மையில் அந்த அவஸ்தைகளிலிருந்து விடுதலைகிடைத்ததோடு பற்களும் வெண்மையாகி வருகின்றது.
நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
// பல் துலக்கும் பிரஸ்சில் பற்பசையை எடுத்துக்கொண்டு அந்த பற்பசையின்மேல் சிறிதளவு உப்புத்தூள்களை இட்டு இறுதியில் அதன்மேல் மிகவும் சிறிதளவு கடுவு எண்ணெயை இட்டு தினமும் காலை, பகல், இரவு படுப்பதற்கு முன் என துலக்கி வந்தால் பற்கள் சம்பந்தப்பட்ட எந்த நோயும் வராது என்று சொன்னார்.//
ReplyDeleteமனித உரிமைக்காவலரின் ஆலோசனை அருமை !
ட்ரைப் பண்ணித்தான் பார்ப்போமே
மிகவும் பயனுள்ள பதிவு.
ReplyDeleteபோலி மருத்துவத்தின் ஏமாற்று வேலைகளை தெளிவாக எடுத்து சொன்னதற்கு நன்றி.
பொது மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பதிவுக்கு கொண்டுவந்து நமது பல்லின் வகைகளையும் அதன் பலம் பலகீனத்தின் விபரங்களை அருமையாக விவரித்து எழுதி இருந்த சகோதரர் சேக்கனா M.நிஜாம் அவர்களுக்கு முதலில் நன்றி.
பல் மருத்துவர் [அதிரை]பஜ்லூர் ரஹ்மான் BDS அவர்களின் அறிவுரை பல்லினால் ஏற்படும் பின்விளைவுகளின் விபரம் அறியாதவர்களை சிந்திக்க வைக்கும்.
நமதூரில் இத்தனை காலமாக பல்லுக்கென்று சரியான மருத்துவர் இல்லாத குறையை பல் மருத்துவர் ஜனாப் பஜ்லூர் ரஹ்மான் BDS,அவர்கள் தீர்த்து வைத்து இருக்கிறார். வாழ்த்துக்களுடன் நன்றி.
கண்டிப்பாக அணைவரும் அறிய வேண்டிய தகவல்.
ReplyDeleteமிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நண்பரே !
DeleteThanks for Add.,
ReplyDeleteDear Mr.Nizam., Your article is very good and useful for all. This is the first time I am arrival in you web side as advised my dearest friend Mr.Jamal Mohamed.
Regards
AIDA TEKLEZHI-Dubai-UAE
Freind of Mr.K.M.A. Jamal Mohamed.
India.
// Dear Mr.Nizam., Your article is very good and useful for all. This is the first time I am arrival in you web side as advised my dearest friend Mr.Jamal Mohamed.
ReplyDeleteRegards
AIDA TEKLEZHI-Dubai-UAE
Freind of Mr.K.M.A. Jamal Mohamed.
India.//
Dear Aida TEKLEZHI
Thanks for your visit and comments
பயனுள்ள தகவல் நண்பரே.எனது முதல் வருகையிலே உங்கள் தளத்தின் உறுப்பினராகிவிட்டேன்
ReplyDeleteமிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நண்பரே
Deleteஅன்பு தம்பி சேகன .எம் ,நிஜாம் அவர்களின்
ReplyDeleteகருத்து ..அனைவருக்கும் ஒரு பாடம் ..
இவருடைய கருத்து அறிந்து உண்மையை
புலப்படுத்திய விழிப்புணர்வு பக்கம்
மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு தரும் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஇன்னும் சில கிராமங்களில் பல்வலி என்றால் மந்திரித்து பாடம் போடுகிறார்கள்..
மிக்க நன்றி அன்புச்சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும்
Deleteஇந்த வைத்தியம் டாஸ்மாக் பிரியர்களுக்கு மட்டும் பல்லில் பூச்சியினால் வலி ஏற்பட்டால் 1/2 பெக் விஸ்கியை ராவாக வாயில் ஊற்றி ஒரு நிமிடம் ஊறவைக்கவும் பிறகு அதை நன்றாக கொப்பளித்து துப்பிவிடவும் இப்போது பூச்சி போயே போச்சி. இது என் நன்பர் ஒருவர் கடைபிடிக்கும் வழிமுறை மேலும் நிறைய டாஸ்மாக் வைத்தியம் அவர் கைவசம் உள்ளது.
ReplyDeleteஎன்னை யாரும் கும்பல் சேர்ந்து அடிக்க வந்துடாதிங்க அதுக்கும் எங்களிடம் டாஸ்மாக் லிக்விட் வெப்பன்ஸ் இருக்கு.
நாம் உட்கொள்ளும் உணவுக்கு மிக முக்கியம் பல் அதை நாம் கவனமாக பார்த்துக்கொள்ளவும் மலிவு விலை பல் பொடிகளை உபயோகிக்க கூடாது.இதில் எது உண்மை என்று மக்கள் தெரிந்து அதை பயன் படுதிக்கொள்ளவும்.
ReplyDelete