.

Pages

Thursday, August 2, 2012

தொடர்ந்து தொல்லை தரும் “பேன்”னு !!!



தலையும் தலை சார்ந்த பகுதியாகிய “முடி”யில் வாழக்கூடிய பேன், ஈறு போன்றவற்றால் பெண்கள் மாத்திரம்மல்ல குழந்தைகளும் இதன் பாதிப்புக்குள்ளகின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை உண்டாக்குகின்றன. பொது இடங்களில் தலையை சொறிய சொறிய சுகம் தரும் இவற்றால் மற்றவர்கள் முன் அவமானத்தையும் தேடித்தருகிறது.

கூந்தலை அதாங்க "முடி"யை ஸ்ட்ராங்கா பிடிச்சிகிட்டு, ரத்தத்தை சோக்கா உறிஞ்ஜூமாம். கூந்தல்’னா என்னன்னு கேட்டுடாதிங்க தலைக்கு மேலே உள்ளதத்தான் சொல்லுறேன் அப்புறம் இதை சொல்லிகிட்டே நம்ம முல்லை பெரியாறு பார்ட்டிகளின் ( அதான்ப்ப மலையாளி’ஸ் ) ஓட்டலில் போய் கேட்டுறாதிங்க.....தட்டுலே கணவாயை வைத்து சாப்பிடச் சொல்லிடுவான்

கூந்தல் பொலிவு பெற, பொடுகை நீக்க, முடி வளர'ன்னு சொல்லி டி.வி’லே சில விளம்பரங்களை ரொம்ப சோக்கா  போட்டு காட்டு காட்டுன்னு காட்டுவாய்ங்க ( ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ !? என்னோவோ ! ) அப்பொருளில் மனித உடலுக்கு தீங்கிழைக்கூடிய ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

பேனை ஓரளவு ஒழிப்பதற்கு எளிமையான, பாரம்பரிய மற்றும் பயனுள்ள முறையென்றால் அது ஒன்றே ஒன்றுதானுங்க......

அது “பேன் சீப்பு” ங்க....இதை மற்றவங்களுக்கு பயன்படுத்த கொடுக்காமே நீங்க மட்டும் பயன்படுத்தி பாருங்க :)

ஆங்... அப்புறம் சொல்ல மறந்துட்டேன் டெய்லியும் “குளிக்க” மறந்திறாதிங்க :)

இறுதியா ஒன்னு கேக்கிறேன்..... தொடர்ந்து “டை” அடிக்கிறவங்களுக்கும், ”டோப்பா”வை டாப்புல மாட்டிகிறவங்களுக்கும் பேனு தலையில் இருக்குமாங்க !? அறிந்தவர்கள் அறியத்தரலாம் :)

அபூ இஸ்ரா

1 comments:

  1. நம்ம ஊரு பெண்களுக்கு பேன் தொல்லை
    வெளிநாட்டில் வாழும் தொழிலாளி குடி இருப்பில்
    மூட்டை பூச்சி தொல்லை ..
    மூட்டை பூச்சியை பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers