ஜனநாயகத்தின் நான்காவது தூணாக !? வர்ணிக்கப்படும் ஊடகத்துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊடகத்துறை.
ஊடகத்துறை என்பது சமூகத்தில் நடைபெறும் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கும் சென்றடைந்து அதற்குரிய தீர்வும் எட்டுகிறது. இதனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது.
இத்தகைய ஊடகத்தை நமது சமூகத்தினர் பயன்படுத்தி நமது சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், சமுதாய வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு போன்ற நல்ல நோக்கங்களுக்காக சரித்திரம் படைக்க இளம் தலைமுறையினர் சவால் நிறைந்த ஊடகங்களில் அடியெடுத்து வைத்து சாதிப்பதற்கு தயாராக வேண்டும் !
இதற்கு எடுத்துக்காட்டாக நமதூரைச் சேர்ந்த பிரபல பதிவர்கள் மின்னணு துறையாகிய இணையதளத்தைப் பயன்படுத்தி சமூகம், கல்வி, அரசியல் போன்றவற்றை சார்ந்த விழிப்புணர்வு ஆக்கங்கள், மார்க்க விளக்கங்கள், முக்கிய நிகழ்வுகள், சிந்தணையத் தூண்டும் செய்திகள், உடல் நல குறிப்புகள், விளையாட்டு செய்திகள், அறிவிப்புகள், வரலாற்று ஆய்வுகள், அழகிய கவிதைகள், புகைப்படங்கள், காணொளிகள், கடிதங்கள் போன்றவற்றை அவரவர்களின் தனித்தன்மையுடன் பிறர் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் நமது சகோதர இணையதளம் மற்றும் வலைத்தளங்களில் பதிந்து வருகின்ற இவர்களால் பலர் பயனுற்று பாராட்டுகளையும் அளிக்கின்றனர்.
நமதூர் பதிவர்களிடம் ...
1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...
ஆகிய கேள்விகளை முன்வைத்து ஒவ்வொருவராக தனித்தனியே சந்தித்து அவர்களின் கருத்தைப் பெறுவது என உத்தேசித்துள்ளேன். இதன் அடிப்படையில் வாரம் ஒரு பதிவர் என அவர்களின் கருத்துகளைப்பெற்று கூடுதலாக அவர்களைப்பற்றிய சிறு குறிப்புகளுடன் நமது சகோதர வலைதளங்களில் தொடராகப் இடம்பெறுவதற்கு முயற்சித்துள்ளேன் ( இன்ஷா அல்லாஹ் ) !
வெளிநாடு வாழ் நமதூர் பதிவர்களுக்கு தனித்தனியே மின்னஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்தைப்பெற்று அவர்களைப்பற்றிய சிறு குறிப்புகளுடன் பதிவு செய்யப்படும் ( இன்ஷா அல்லாஹ் ) !
அந்த வரிசையில் பிரபல எழுத்தாளார், மூத்த பதிவர் சகோ. அதிரை அஹ்மது அவர்களை இந்த வாரம் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
இவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
“தமிழ் அறிஞர்” என்று இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற மூத்த சகோதரர் அதிரை அஹ்மது அவர்கள் மார்க்கப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி போன்றவற்றில் மூழ்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் நமதூருக்கு பெருமை சேர்க்கும் அளவு பல புத்தகங்களை எழுதிருப்பவர் குறிப்பாக இஸ்லாமிய இலக்கிய சிந்தனை, இஸ்லாம் ஓர் அறிமுகம், மழைப்பாட்டு உரை, ஒருமைப்பாட்டு, சிறுமிப்பாட்டு, பெண்மணி மாலை, அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன், நபி வரலாறு சிறுவருக்கு, பேறுபெற்ற பெண்மணிகள் – பாகம் ஓன்று, பேறுபெற்ற பெண்மணிகள் – பாகம் இரண்டு, வட்டியை ஒழிப்போம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்), தமிழ்மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட ஆங்கில நூல்களாகிய Salma Al Farisi, Khabbab Bin Aratt, Abu Zar Ghifari, Abu Abdullaah Zubair Bin Al Awaam, Miqdad Bin ‘Amr Al Aswad’, தன்னால் எழுதப்பட்ட ஆங்கில நூலாகிய Wisdom in the Dawn மற்றும் அதன் தமிழாக்கம் இளமை பருவத்திலே போன்ற நூல்களும், நமது சகோதர வலைதளங்களில் ‘நல்ல தமிழ் எழுதுவோம்’ மற்றும் ‘கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை’ போன்ற நெடுந்தொடர்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல நூல்களுக்கு முன்னுரை, கருத்துரை வழங்கியுள்ளார் என்பதும் இவர்களின் கூடுதல் சிறப்பாகும்.
இறைவன் நாடினால் ! பதிவர்களின் சந்திப்பு தொடரும்...
அல்லாஹ்வின் உதவியால், ஆசான் அவர்களின் பேட்டியை முதன்மைப்படுத்தி வெளியிட்டு அவர்கட்குரிய கண்ணியத்தை வழங்கி விட்டீர்கள்; மிக்க நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் குறுவிடுப்பில் -ஹஜ்ஜுப் பெருநாளில் தாயகம் வந்து உங்கள் ஆவலை நிறைவேற்றும் வண்ணம் என் பேட்டி மூலம் என் பங்களிப்பை வழங்குவேன்.
ஆசான் அவர்களின் அறிவுரைகளை என்னைப் போன்ற புதிய பதிவர்கள் பின்பற்றி அவர்கள் வேண்டி நிற்கின்ற சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.