“தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பது முதுமொழி. “பல் போனால் சொல் போச்சு” என்பது சொலவடை. பல் இல்லாவிட்டால் “பொக்கை வாய்” என கேலி பேசுவோரும் உண்டு. இந்த பல்லில் சிங்க பல், தங்க பல், கடாப் பல், அறிவு பல், நரிப்பல், தெத்திப் பல் போன்ற பெயர்களிலும் இவற்றை அழைப்பது உண்டு.
பல்லுக்கு இம்புட்டு பில்டப்பா !? :)
1. நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்பட்டவுடன் உடனே ஒரு “பாரசிட்டமால்” போட்டால் சரியாகிவிடும் என எண்ணுகின்ற ஒரு வகையினரும்......
2. முறையான மருத்துவரிடம் சென்று அலோபதி சிகிச்சை மேற்கொள்வோரும்.........
3. இல்லை....இல்லை....நாட்டு வைத்தியம் பார்த்தல்தான் எனக்கு குணமாகும் !? என்று சொல்லி, அருகில் உள்ள ஊருக்குச் சென்று பற்களில் உள்ள பூச்சிகளை (புழு) நீக்கிவிட்டால் போதும் குணமாகி விடலாம் !? என எண்ணுகின்ற மற்றொரு வகையினரும் உள்ளனர்.
சரி விசயத்துக்கு வருவோம்......
பல் வலி என்றவுடன் நமதூரைச் சார்ந்த பெண்கள் சிலர் பல்லில் பூச்சி (புழு) எடுப்பதற்காக அருகில் உள்ள “ஒடையநாடு” என்ற ஊருக்கு சென்று அங்குள்ள நாட்டு வைத்தியர் !? ஒருவரை சந்தித்து பற்களில் இருக்கும் பூச்சியை (புழு) !? எடுத்துவருவதாகவும் இதனால் பல்வலி குணமாகி விடுகின்றது என்று ஒரு கருத்து பெண்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
இதையடுத்து நமது கவனத்துக்கு இச்செய்தி வந்தவுடன் நாம் விசாரணையில் அதிரடியாய் இறங்கினோம்.
அதிரைப்பட்டினம் இங்கிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் உள்ள அழகிய கிராமம் “ஒடையநாடு” இவ்வூரில் முஸ்லிம்கள், மாற்று மதத்தினர் என சரிசமமாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ளவரிடம் பல்லுக்கு பூச்சி எடுக்கும் டாக்டர் எங்கே ? என்றாலே அனைவரும் கைகாட்டுகின்றனர் அவரின் சிறிய கூல்டிரிங்க்ஸ் கடையை. நாமும் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேசினோம்.....
“ஆமாம்...பல் பூச்சி எடுப்பதற்காக பல ஊர்களிலிருந்து வருகின்றனர். ஒரு வகை வேரை’க்கொண்டு ( பெயர் என்ன ? என்பதை சொல்ல மறுத்துவிட்டார் ) வலி ஏற்படும் பற்களில் வைத்து தேய்த்தால் அதில் உள்ள புழுக்கள் !? அனைத்தும் வெளியே வந்துவிடும். பல்லை பிடுங்க வேண்டியதில்லை”.....என்று உரையாடிக்கொண்டு இருக்கும்போதே ஒரு அம்மா தனது 8 வயது சிறுவனை பல் வலி என்று பற்களில் பூச்சி எடுப்பதற்காக இவரிடம் அழைத்து வருகின்றார்.
உடனே எங்களை அமர வைத்துவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு செல்வதாகச் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் கையில் வேர் ஒன்றைப் பிடுங்கி கொண்டு வருகிறார். அவ்வேரை சிறுவனின் வாயில் விட்டு ஆட்டுகிறார்.....சில நிமிடங்களில் என்ன ஆச்சர்யம் ! புழு வந்து கீழே கொட்டுகிறது...! அதுவும் ஒன்றல்ல 10 புழுக்கள்….உடனே கையில் வைத்துள்ள இலையை பற்களில் வைத்து மெல்லச்சொல்லி அச்சிறுவனிடம் கொடுக்கிறார்.
ட்ரீட்மென்ட் ஓவர் !
இதற்காக ஒரு வருட கேரண்டி கொடுத்து மருத்துவ பீஸ்’ஸாக ரூபாய் 100 ஐ பெற்றுக்கொண்டார் அதாவது ஒரு பூச்சிக்கு(புழு) ரூபாய் 10 வீதம் வசூல் செய்கின்றார்.
இம்மருத்துவ முறையைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டோம்........தனது பெயரை “இளங்கோவன்” என அறிமுகம் செய்துகொண்டு தொடர்கிறார்.......
பற்களில் பூச்சி எடுப்பது குறித்து நமதூர் பிரபல பல் மருத்துவர் சகோ. பஜ்லூர் ரஹ்மான் BDS அவர்களை சந்தித்து விளக்கம் கோரினோம்….
ஆக மருத்துவர் சகோ. பஜ்லூர் ரஹ்மான் BDS அறிவுரையின் பேரில் பற்களில் பூச்சி(புழு) எடுப்பது என்பது மோசடியான ஓன்று என்பது நிரூபணம் ஆகின்றது. நமதூர் சகோதர, சகோதரிகள் இதுபோன்ற மோசடியான வைத்திய முறைகளை தவிர்த்துக்கொள்வது நமது உடலையும், பொருளாதாரத்தையும், நேரத்தையும் பாதுகாப்பதாக அமையும். ( இன்ஷா அல்லாஹ் !)
மேலும் பல் நலத்தை பேணுதல் மிகவும் முக்கியமான ஓன்று. பல நேரங்களில் இருதயம், சர்க்கரை, தோல் போன்ற நோய்கள் பல் நலனுடன் சம்பந்தப்படும் ஒன்றாகும். பல் வலி எடுத்தால் நமக்கு ஒரே தீர்வு பல்லை புடுங்கிறது மட்டும்தான் என்று நினைக்காதீங்க... இன்றைய மருத்துவ துறையில் பற்களுக்கு எண்ணற்ற நவீன ட்ரீட்மென்ட் வந்துள்ளன. அவற்றில் “ROOT CANAL TREATMENT “ம் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது.பல்லில் ஏற்படும் சொத்தை, கூச்சம், பற்குழி, சுத்தம் செய்தல் போன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள் பாதுகாக்கப்படும்.
மேலும் கீழ்கண்ட மூன்று விஷயங்களை முக்கியமாக நாம் கடைபிடித்தால் நம் பற்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்பது மருத்துவரின் ஆலோசனையாக உள்ளது.
அதாவது,
1. தினமும் இருமுறை பல் துலக்குவது.
2. சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் தண்ணீரால் வாய்யை கொப்புளிப்பது.
3. ஆறு மாதத்திற்கு ஒரு முறை தகுதியுள்ள மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது.
நமது பல்லை பாதுகாக்க நாம் அடிக்கடி பல் மருத்துவரை சென்று பார்ப்பது இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. தகுதியுள்ள பல் மருத்துவரை சந்தித்து அவர்களின் ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்வது என்பதே சிறந்தது.
பல் இருந்தால் தான் இளிக்க முடியும்.... :)
பல் இருந்தால் தான் வார்த்தை ஜொலிக்க முடியும்.... :)
பல் இருந்தால் தான் “பக்கோடா” சாப்பிட முடியும் :)
மேலும் நமது மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டிய முகவரி :
Dr. M.H. பஜ்லுர் ரஹ்மான் B.D.S. M.C.I.P
"ஆயிஷா பல் மருத்துவமனை"
28-G, ஆஸ்பத்திரி தெரு ரோடு, ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்
அதிரைப்பட்டினம்
அலைப்பேசி : 0091 9600714614
பார்வை நேரம் :
காலை 9.00 மணி to மதியம் 01.00 மணி வரை
மாலை 08.30 மணி to 10.00 மணி வரை
ஞாயிறு காலை 09.00 மணி to மதியம் 2.00 மணி வரை
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் தொடரும்....
0 comments:
Post a Comment
கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.