.

Pages

Sunday, August 5, 2012

வாகனம் : அதிரையில் அதிகாரிகளால் அதிரடி சோதனை !!!


இன்று ( 05-08-2012 )காலை நமதூர் ஈ.சி.ஆர் சாலையில் பட்டுக்கோட்டை வட்ட ஆர்.டி.ஓ அதிகாரிகள் கதிர்வேல், முருகன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற வாகனச் சோதனையில்........

1. மொபைல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுகிறார்களா ?

2. ஆல்கஹால் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா ?

3. பொதி மூட்டை போல், பள்ளி குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி, அதிவேகமாக செல்கின்றனரா ?

4. வாகனத்தில் கண்ணாடிக் கதவுகளில் கண்ணை உறுத்தும் வித விதமான “ஸ்ட்டிக்கர்” ஒட்டப்பட்டுள்ளதா ?

5. வாகன ஓட்டுனர் உரிமம், வாகனத்திற்கான இன்சூரன்ஸ், அரசால் வழங்கப்படும் வாகனம் உரிமம், புகை அளவீடு விவரம் போன்ற ஆவணங்கள் உரிமையாளரிடம் உள்ளனவா ?

6. வாகனத்தின் தரம் ( F.C. ) உரிய அதிகாரிகளிடம் முறையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா ?

போன்ற சோதனைகளில் ஓட்டுனர்கள் பலர் சிக்கினர். இதில் அவர்களுக்கு “அபராதம் விதித்தல்” , “வாகனம் பறிமுதல்”, “எச்சரிக்கை” போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து நாம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகளிடம் பேசினோம் “ இவை சாதாரணமாக நடைபெறுகிற சோதனை என்றும், விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்வது தொடரும் என்றும்” தெரிவித்தார்.

சோதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு நமது வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு விடைபெற்றோம்.

வாகன ஓட்டுனர்களே !

சட்டத்தில் குறிப்பிடப்பட்ட சாலை விதிகள் மற்றும் வாகனப் பராமரிப்பு போன்றவற்றை முறையாக கடைபிடிப்பதால் விபத்துகள் குறைவதற்கு  இவை உதவும் மேலும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் “அபராதம் விதித்தல்” , “வாகனம் பறிமுதல்”, “எச்சரிக்கை” போன்ற நடவடிக்கைகளையும் தவிர்த்துக்கொள்ளலாம்.

சேக்கனா M. நிஜாம்

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers