.

Pages

Tuesday, September 4, 2012

'சந்திப்பு' : ‘புகைப்படக்கலை வல்லுனர்’ சகோ. சாகுல் ஹமீத்புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை. தொழிநுட்பங்களை முறையாக கையாண்டால் மட்டுமே சிறந்த புகைப்படங்களை நாம் பெறமுடியும். புகைப்படங்கள் மூலம் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தவும், நீண்ட செய்திகளை சுருக்கமாக பிறர் புரிந்துகொள்ளவும் ஊடகத்துறைக்கு இவை பயன்படுகின்றன.

‘சந்திப்பு’ தொடருக்காக இந்த வாரம்...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. சாகுல் ஹமீத் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. சாகுல் ஹமீத் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
‘புகைப்படக்கலை வல்லுனர்’ என இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற சகோ. சாகுல் ஹமீத் அவர்கள் தான் படிக்கும் காலங்களில் ‘பூப்பந்து’ விளையாட்டில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்சென்றுள்ளவர்.

காமிராவை தனது மூன்றாவது கண் போல் பாவிக்கும் இவர் ‘பேசும்படம்’ என்ற பெயரில் அழகிய புகைப்படங்களை நமது சகோதர வலைதளங்களில் பதிந்து பல அறிவியல் சார்ந்த சமூக விழிப்புணர்வு ஆக்கங்களை நமதூர் தமிழில் அழகாக எழுதியுள்ளார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசும் இவருக்கு ஏராளமான நட்பு வட்டாரம் உள்ளன.

பல நாடுகளில் பணியாற்றிய பிறகு தற்போது தன் சுய தொழிலாக சவூதி தமாம் நகரில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் சமிபத்தில் ‘கிளிக்’கிய  அழகிய புகைப்படம் :

1. ஊடகத்துறையைப் பற்றி...
இன்றைய காலத்தில் ஊடகங்கள் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றன . நமது வாழ்வோடு ஊடி  இருப்பதால்தான் இவைகளுக்கு ஊடகங்கள் என்று பெயர் வந்ததோ என்னவோ தெரியவில்லை . நமதூரில் பிறந்து வாழ்ந்தவர்களுக்கு தெரியும்  ஊடகம் என்று ஒருவகை மீனுக்குப் பெயர் உண்டு  நல்ல ருசியாக இருக்கும். செய்திப்பகிர்வு நிறுவனங்களுக்கு ஊடகம் என்று பெயர் வந்த காரணம் எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனால் பலர் இரவில் படுக்கும் முன்பும் இணையதள ஊடகங்களைப் பார்த்துவிட்டே படுக்கிறார்கள். அதுபோல் எழுந்ததும் அவற்றின் முகத்திலேயே விழிக்கிறார்கள். காபியை உறிஞ்சும் நேரத்தில் ஊடகங்களில் வரும் செய்திகளையும் கண்கள் உறிந்து மூளைக்கு அனுப்புகின்றது.

பேருந்துகளில் பயணிக்கும்போது பேருந்தில் ஒலிபரப்பப்படும் திரைப்பாடல்களுக்கு போட்டியாக பயணிகள் கையில் இருக்கும் தொலைபேசி ரிங்க் டோன்கள் நம்மைப்படுத்தும் இம்சை நாய்ஸ் பொல்லுசன் சகிக்கவில்லை. இருந்த போதிலும் அரசுத்துறைகள் அனைத்தும் கணிணி மயமக்கப்படுதல், கல்வித்துறை கணினிமயமாக்கப்பட்டு தொலைதூர பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் வர்த்தகம்,  ரயில், பஸ், விமானசீட்டுக்களை எளிதாக வீட்டில் இருந்தவாறே பெறுதல், மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சையின் லைவ் களை பதிவு செய்தல் உட்பட பல வியக்கத்தக்க முன்னேற்றங்கள் ஊடகத்துறையின் வழியாக நமக்கு கிடைத்த பொற்குவியலாகும்.

2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கும் அளப்பறியதாக இருக்கிறது. சமுதாயத்தின் பல பகுதிகளில் வாழ்வோரும் தாங்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்துக்காக ஒரு வலைதளத்தை உருவாக்கிக்கொண்டு தங்களது பிரச்னைகளை ஹைலைட் செய்து காட்டுவதற்கு உதவியாக இருக்கிறது.

இன்று வலைத்தளம் உருவாகுவது அன்று ஐந்து பைசாவுக்கு அஞ்சல் அட்டை வாங்குவதைவிட இலகுவாகிவிட்டது. உதாரணமாக சிறு குக்கிராமங்களிண் பெயர்களில்கூட உதாரணம் உடையநாடு, சம்பை , செந்தலை என்ற பெயர்களில் எல்லாம் வலைதளங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.

3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
இளம்பதிவாளர்களுக்கென்று  நான் ஆலோசனை கூற நான் தகுதிபெரவில்லை காரணம் நான் இன்னும் இளைஞனாகவே இருப்பதாக மனத்தால் கருதுகிறேன். ஆனாலும் மூத்த பதிவாளர்கள் அதிரை அஹமது காக்கா, மற்றும் இப்ராஹீம் அன்சாரி மாமா ஆகியோர் கூறியதுபோல் இளைஞர்கள் சமூக வாஞ்சையுடன் கூடிய பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதிய வேண்டுமென்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். சமுதாய முன்னேற்றம் என்பது கல்வி வளர்ச்சி, சிந்தனை மாற்றம் ஏற்படாமல் ஏற்படாது. இவைகளுக்கும் இவை சார்ந்த விழிப்புணர்வுகளுக்கும் இளையவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனது பதிவுலகில் அடிக்கடி குப்பை கூளங்கள் ஒழிப்பதன் அவசியம் கருதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறேன்.

4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...
 நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு என்னவெனில் நமது பதிவர்கள் பெரும்பாலும் பல நாடுகள் கண்டவர்கள்.கண்டம் விட்டு கண்டம் போய் வந்தவர்கள்  அவர்கள் தங்களது அனுபவங்களை அதிகம் பதிகிறார்கள். இந்த ஊடகத்தின் மூலம் குடத்தில் இட்ட விளக்குகள் போல் இருந்த பல பதிவாளர்கள் குன்றின் மேல் இட்ட விளக்காக பிரகாசிக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி கட்டுரைகள் , விளக்க விமர்சனங்கள் என தரமிக்க ஆக்கங்களை நமது ஊர் பதிவர்கள் பதிவது நமது ஊரின் தரத்தை உலகுக்கு அறிவிப்பதாக இருக்கிறது. நமது தளங்களில் வரும் ஆக்கங்கள் மற்ற தளங்களில் அடிக்கடி எடுத்துப்போடப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

வலைதள நெறியாளர்கள் நமது ஊர் பதிவர்களின் ஆக்கங்களை பதிய முடியாமல் அவைகளை வாரக்கணக்கில் வரிசையில் காக்கவைத்திருப்பது ஒரு ஆரோக்கியமான அடையாளமே. குறிப்பாக நமது ஊர் கவிகளைப் பொருத்தவரை சபீர் அவர்கள் இணையற்ற கவிதைகளை தந்து வருகிறார். கவியன்பன் கலாம் அவர்கள் யாப்பு இலக்கணம் கற்று அவைகளை அளித்து வருகிறார். மார்க்கம் தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகள் அதிரை அஹமது காக்கா அவர்களாலும், அலாவுதீன் அவர்களாலும், சகோ. ஜாகிர் அவர்களால் எழுதப்பட்டுவரும்   'படிக்கட்டுகள்' போன்ற கட்டுரைகளும், ஷேக்கனா M. நிஜாம் அவர்களால் எழுதப்படும் பல கட்டுரைகளும் நமது மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன, அரசியல் பொருளாதார சமய கட்டுரைகள் இப்ராஹீம் அன்சாரி மாமா அவர்களாலும் அனைவரும் அறியும் வண்ணம் ஆரோக்கியமான கல்வியை புகட்டிவருகிறது. இப்படி இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும்...

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

3 comments:

 1. புகைப்படக்கலை வல்லுனருக்கு என் வாழ்த்துகள் !

  இவரின் பேசும் படங்களே எனக்கு போட்டோகிராபியில் ஒரு ஆர்வத்தை வரவழைத்தது என்று சொல்லலாம். மிக நேர்த்தியாக இருக்கும் இவரின் புகைப்படங்கள்.

  சமீபத்தில் இவருடனான என் சந்திப்பில் அழகிய புகைப்படம் எடுப்பது எப்படி...? கேமிராவின் ஆங்கில், பேக்கிரவுண்ட், டிஸ்டன்ஸ், ஜூம் போன்ற நுணுக்கங்களை நன்கு கற்றுத்தந்தவர்.

  நகைச்சுவை கலந்த அறிவார்ந்த இவரின் பேச்சு எனக்கு அவருடனான நல்ல நட்பை வளர்த்துக்கொள்ள தூண்டும்.

  நமதூரின் முதல் தொழில்நுட்ப சார்ந்த போட்டோ கிராஃபர் என்ற பெருமையை தட்டிச்செல்கிறார்.

  தொடருங்கள்.....

  ReplyDelete
 2. //வலைதள நெறியாளர்கள் நமது ஊர் பதிவர்களின் ஆக்கங்களை பதிய முடியாமல் அவைகளை வாரக்கணக்கில் வரிசையில் காக்கவைத்திருப்பது ஒரு ஆரோக்கியமான அடையாளமே. குறிப்பாக நமது ஊர் கவிகளைப் பொருத்தவரை சபீர் அவர்கள் இணையற்ற கவிதைகளை தந்து வருகிறார். கவியன்பன் கலாம் அவர்கள் யாப்பு இலக்கணம் கற்று அவைகளை அளித்து வருகிறார்.//
  ஜசாக்கல்லாஹ் கைரன்

  ஒற்றுப் பிழைகளில் உழன்று கொண்டும் இன்னும் கற்றுக் குட்டியாகவே இருந்து , யாப்பிலக்கண மாணவனாக இருக்கும் அடியேனையும் நினைவு கூர்ந்த உங்களின் நல்லெண்ணத்திற்கு உளம்கனியும் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

  ReplyDelete
 3. தான் எடுக்கும் புகைப்படங்களால் கவர்வதைப்போலவே தனது கருத்துக்களாலும் கவர்கிறார் மருமகன் ஷாகுல் ஹமீது. விஷுவல் மீடியா என்பது மிகவும் சக்திவாயந்த கருவி. அதை சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும் என்ற வாழ்த்துக்களோடு - இப்ராஹீம் அன்சாரி.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers