‘சந்திப்பு’ தொடருக்காக...
1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...
ஆகிய கேள்விகளுடன் சகோ. அப்துல் மாலிக் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
சகோ. அப்துல் மாலிக் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
ஆசிரியர் மர்ஹூம் அப்துல் சமது அவர்களின் இளைய மகனான இவர் , தற்போது துபாயில் ஐடி துறையில் பணி செய்துக்கொண்டிருக்கிறார். விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய இவர் நமதூர் காதிர் முகைதின் கல்லூரியில் சாம்பியனாக இருந்தவர். எண்ணற்ற கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ள இவர் சமூக ஆர்வலரும் கூட.
நமது சகோதர வலைதளங்களில் பதியும் சிறந்த ஆக்கங்களுக்கு பதிவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருகின்றார்.
சகோ. அப்துல் மாலிக் அவர்களின் தந்தை மர்ஹூம் ஆசிரியர் அப்துல் சமது அவர்கள் (முன்னாள் உதவி தலைவர் - அதிரை பைத்துல்மால், தலைவர் - பெற்றோர்-ஆசிரியர் கழகம் )
ஊடகத்துறையை பற்றி :
ஊடகத்துறை என்பது மக்களிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடையே ஒன்றெனக்கலந்து விவாதிக்கும் ஒரு இத்தியாதியாக இருக்கிறது. முன்னெல்லாம் ஜர்னலிசம் (Journalism) பட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து செயல்படுத்தியது போக இப்போ கூகிளின் கட்டற்ற சேவையான பிளாக் (BLOG) என்ற தனகென்ற வலைத்தளம் கணக்கை உருவாக்கி தன் மனதில் பட்டது, கண்டது, செயல் படுத்த நினைப்பது, விருப்பு, வெறுப்பு அனைத்தையும் எழுத்தின் வடிவில் மக்களை சென்றடைய எழிய வழியாக உருவாகி இருக்கிறது. இதற்கென ஒரு வரைமுறையை கையாண்டு புரட்சியின் மூலம் எதையும் சாதிக்கமுடியும், இயலாத பட்சத்தில் அந்த துறையை கொஞ்சமேனும் அசைத்துப்பார்க்கலாம்.
நானும் ஒரு ரேஞ்சர் சைக்கிள் வைத்திருக்கிறேன் என்று சொல்லுவதற்காக மட்டும் எனக்கு ஒரு வலைத்தளம் ஆரம்பித்து பிறகு அதன் வளர்ச்சியால், எழுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை வரும்போதுதான் ஊடகத்துறையில் என்னாலும் முடிந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துசொல்ல ஏதுவாக இருந்தது. முதன் முதலில் கருத்துக்கள் வரவில்லை என்று எண்ணி யாருமேயில்லாத டீக்கடையில் யாருக்காக தேத்தனி ஆத்தனும் என்று சோர்வுற்ற போதெல்லாம் மூத்த பதிவர்கள் சிலர் உன் பதிவுகள் பதிவிட்ட அடுத்த நிமிடம் பல நூறு வாசகர்கள் வாசிக்கிறாங்க என்ற உண்மையை சொன்னாங்க.
இதுலே நிறைய பேர் வாசிக்க மட்டுமே செய்றாங்க, யாருமே கருத்து சொல்லுறது இல்லை, இது நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி செல்கிறார்களா இல்லை பயமா இல்லை தட்டச்சு பிராப்ளமா என்று தெரியவில்லை. நம் சமூகத்தில் நடக்கு அவலங்களை நோட்டீஸ் அடிச்சி ஒட்டவேணாம், ஒரு சில கருத்து சொல்லி நம் மனதை தேத்திக்கலாம், நல்லவற்றை எடுத்து சொல்லி பாராட்டலாம். இப்படி ஒரு சிறு உந்துத்தால் சிறந்த சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்கள் மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கமாக அமையும்.
ஊடகத்துறையில் அச்சுத்துறையை விட எலக்ட்ரானிக் துறையே அதிவீத வளர்ச்சி கண்டுள்ளது என்பதற்கு இணையம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அச்சில் ஏற்றியவகைகளை தேடி காலங்கார்த்தாலே தேத்தனியும் பேப்பர் கையுமா இருக்கனும் என்ற அவசியமில்லை. அதற்காக நேரம் விரயம் செய்து படித்த காலம் போய் இன்று கையடக்க ஆண்ட்ராய்ட் அலைபேசியினூடே அனைத்து செய்திகளையும் அறிய முடிகிறது என்பது மறக்கமுடியாத உண்மை
ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
மாநிலத்துக்கு ஒன்று ஊடகம் இருந்த காலம் போய் தெரு/ஆளுக்கு ஒன்று என்று விரிவடைந்திருப்பது ஊடகத்துறையில் நம்மவரின் பங்கு அலப்பறியது. ஆலிம்சாமார்களை தேடிப்போய் விளக்கம் கேட்ட காலம்போய் இன்று கையடக்கத்தில் எல்லாமே. கடந்த நோன்பில் ஒரு நாள் சரியாக காலை 6 மணிக்கு உணவு சரியில்லாமல் வாந்தியும் பேதியும் போனது, நிறைய பேர் நோன்பு முறிந்துவிட்டது எனவே மறுபடியும் நோன்பிருக்கவேண்டும் என்று சொன்னார்கள், இணையத்தில் தேடினேன் ஆதாரமுள்ள ஹதீஸ் கிடைத்து நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிந்தேன், ஆகவே இன்று எந்தவித கேள்விக்கும் விடை எலக்ட்ரானிக் ஊடகத்துறையினால் சாத்தியமே.
மேலும் எது வளர்ச்சியடைகிறதோ அதுவே வீழ்ச்சிக்கும் வழிவகை செய்கிறது. நம் சமுதாயத்தவர்கள் இந்த ஊடகத்தை வைத்துக்கொண்டு தன்னை சார்ந்த சமூகத்தவரையே எதிரியாக்கி அவர்களை பற்றிய கட்டுரைகளை பரப்பும் குணம் அதிகரித்துள்ளது. ஒரு மெயில் குழுமத்தில் என்னை இணைத்தனர் அது ஹதீஸ் குரானை ஆராயும் தளமாக இருந்தது. நாள் பட அத்தளம் இவர்/அவரை தாக்கியும் குறிபிட்ட செய்தியை எடுத்து வாதாடுவதும் எந்தளவுக்கு நாம் கால விரயத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்றெண்ணி வருத்தம்தான் மிஞ்சுகிறது. இவ்வளவு வளர்ச்சியுள்ள இந்த ஊடகத்தை நாம் சரியான வழியில் சிந்தித்து செயல்படுத்தினால் நாளை நம் சமுதாயம் உச்சத்தில் இருக்கும், நம் மரபுவழி சமுதாயம் பயனடைய நாம் ஏன் அடிக்கோலிடக்கூடாது..
அறிவுரை..!
அறிவுரை என்பது எல்லோரும் எல்லோருக்கும் இலவசமாக தருவாங்க, அதையே நானும் செய்ய விரும்பல, திறமையானவங்க நிச்சயம் நல்ல ஆரோக்யமான ஊடகமாக செயல்பட்டு இச்சமுதாயத்தை கல்வியின் பக்கம் முன்னேற்றமடைய செய்வாங்க. இன்று நம்மூரில் நிறைய இளைஞர்கள் நகைச்சுவையாகவும், அறிவுடனும் திறமையாகவும் எழுதுறாங்க என்பது மிக்க சந்தோஷம். எனக்கு தெரிந்து அதிரையில்தான் அதிகமானோர் தனித்தனி பிளாக் வைத்திருக்காங்க. நல்லவழிகளில் பயன்படுத்தினால் நாளை நீயும் வரலாற்றில் ஒரு அங்கமாக இருப்பாய்.
நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு :
இதை பற்றி சொல்லவேண்டுமானால் தனி பதிவே போடவேண்டும், எவ்வளவு கவிதைகள், கட்டுரைகள், சமுதாய சிந்தனைகள் மாஷா அல்லாஹ். நம்மவர்கள் சாப்பிடதான் லாயக்கு என்ற காலம் போய் இன்று எல்லா துறைகளிலேயும் சாதித்த்து சாதித்துக்கொண்டிருப்பதை கண்கூடாக காண்கிறோம். ஊரில் இருப்பவர்களை விட வெளிநாடுகளில் வாழுவோர் உடனுக்குடன் உள்ளூர் செய்திகளை அறிய தருகிறார்கள், இதை நானு அனுபவித்திருக்கேன். எந்த ஒரு நிகழ்வும் இந்த ஊடகத்துறையின்மூலம் சாத்தியமே அதை நம்மக்கள் செய்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...
மாஷா அல்லாஹ் ...
ReplyDelete[[நம்மவர்கள் சாப்பிடதான் லாயக்கு என்ற காலம் போய் இன்று எல்லா துறைகளிலேயும் சாதித்த்து சாதித்துக்கொண்டிருப்பதை கண்கூடாக காண்கிறோம்]]
செம பாய்ண்ட் மச்சான் :)
மாஷா அல்லாஹ் ...
ReplyDelete[[நம்மவர்கள் சாப்பிடதான் லாயக்கு என்ற காலம் போய் இன்று எல்லா துறைகளிலேயும் சாதித்த்து சாதித்துக்கொண்டிருப்பதை கண்கூடாக காண்கிறோம்]]
செம பாய்ண்ட் மச்சான் :)
வாழ்த்துகள் !
ReplyDeleteஅருமையான கருத்துகள்...
எனது நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி !
தொடருங்கள் சமூகப்பணிகளை என்றென்றும்...
மிக்க நன்றி நிஜாம், சமது சாரின் மகன் என்பதில்தான் எனக்கு பெருமையே...
ReplyDeleteவாழ்த்துக்கள் மச்சான் உங்கள் சேவைகள் என்றென்றும் எங்களுக்கு தேவை ... மேன் மேலும் இந்த அற்புத பணிகள் வழற எனது வாழ்த்துக்கள் ..
ReplyDelete