.

Pages

Thursday, September 13, 2012

'சந்திப்பு' : பதிவர் சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) 


பின்னூட்டம் என்பது ஒரு தனிக்கலை. நல்ல பின்னூட்டமும், விமர்சனமும் படைப்பாளிக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதோடு மட்டுமல்லாமல் நல்ல ஆக்கங்களும் அவரிடமிருந்து பெறுவதாக அமையும் .

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
இணையத்தோடு அதிக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தனது தமிழ் ஆர்வத்தை நன்கு வளர்த்துக்கொண்டவர். நமது சகோதர வலைதளங்களில் பதியும் சிறந்த ஆக்கங்களுக்கு பதிவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருகின்றார்.

கட்டுரை, கவிதைகள் என நமது சகோதர வலைத்தளத்தில் பதிந்துள்ள இவர் சமூக ஆர்வலரும் கூட.

சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) அவர்களின் தந்தை M.A.M. முஹம்மது ஹனீபா அவர்கள் :


ஊடகத்துறையைப் பற்றி...
இது நமது சமுதாயத்துக்கு மிக முக்கியம். காரணம் அக்காலங்களில் இதில் நம்மவர்கள் ஈடுபடாததன் விளைவை நாம் சந்தித்திக் கொண்டிருக்கிறோம்.

அவையில் சில,
வரலாற்றின் பின்னணியில் பெரும்பாலும் நம்மவர்களின் பங்கு புறக்கணிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.மேலும் நம்மவர்களை பற்றி இட்டுக்கட்டி தவறாகவே அதிகம் சொல்லப்பட்டு வருகிறது.பெரும்பாலான இத்துறையில் நம்மவர்களின் பங்கு மிகக் குறைவாக இருப்பதால் நமக்கு ஏற்படும் பாதகங்களை இருட்டடிப்பு செய்து நம்மை படிப்படியாக பின்னோக்கி  2 ம் தர குடிமகனாக தள்ளி வருகிறது இந்த ஊடக குறையை களைய நம்மவர்கள் பங்கு அவசியம்.

இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
தற்போது இதில் ஈடுபடும் இளம் பதிவர்களின் சேவை பாராட்டக் கூடியது. அவர்களின் வளர்ச்சியும் சொல்லத்தக்க புகழத்தக்க வகையில் இருப்பது மகிழ்ச்சி. அதே சமயம் ஏதாவது செய்தி வேணுமே என்று இல்லாததை இட்டுக்கட்டி எழுதுவதை தவிர்க்க வேண்டும். செய்தி சாராம்சத்தில் ஆதாரம் உண்மை  அறிந்து அவசரப்படாமல் நிதானமாக வெளியிடுவது பல்வேறு சர்ச்சைகளை தவிர்க்கும்.ஆள்பவர்களை அணுசரித்து அவர்களிடம் அழகாக பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.அது போல ஆளாத அடுத்த நிலையில் உள்ளவர்களுடனான விரோதப் போக்கு ஏதும் இருந்தால் அதை இரு தரப்பாரிடம் நடுநிலையாளர்களை வைத்து இஸ்லாமிய அடிப்படையில் தீர்த்து வைக்க பாடுபட வேண்டும். குறைகளை இணையத்தில் வெளியிடுவதோடு நின்று விடாமல் அத்தகவல் ஆள்பவரையும் அடையச்செய்திடல் வேண்டும்.

மேலும் வெளியிடப்படும் செய்திகள் ஒரு சார்பில்லாமல் நடுநிலையோடு இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ்த்தவறுகள் நம் ஊடகங்களில் அதிகம் காணப்படுகிறது. இவற்றை களைய அதிரை அகமது காக்கா, இப்ராஹிம் அன்சாரி காக்கா, ஜெமீல் காக்கா மற்றும் நம் தமிழ் அறிஞர்களை நாடி நல்ல தமிழுக்கு முக்கியத்துவம் காட்ட வேண்டும். CMN சலீம் அவர்களின் விழிப்புணர்வு தகவல்களையும் அவ்வப்போது பிரசுரிக்கச் செய்திடல் வேண்டும்.

பின்னூட்டம் என்பது மேலும் பண்படுத்தும் ஊக்கமாக மட்டும் இருக்க வேண்டுமே ஒழிய மனதை புண்படுத்தும் தாக்கமாக இருக்கக் கூடாது. மாற்று கருத்தென வரும் போது அதில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். போலிப் பெயர்களில் வரும் கருத்துக்கள் ஆக்கத்திற்கு எதிராகவும் வரலாம், நாளை அதை வெளியிடும் தளத்திற்கு எதிராகவும் அமையலாம். எனவே போலிகள் இன்று நல்லதாக தெரிந்தாலும் அறவே அனுமதிக்ககூடாது. நம்மவர்களின் எழுத்துக் கூர்மை எதிர்காலத்தில் தமிழகம் முழுக்க அனைத்து பத்திரிக்கை துறைகளிலும் பிரதிபலிக்க ஆயத்தமாவோமாக !

நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...
அல்ஹம்துலில்லாஹ் நமது பெரும்பாலான பதிவர்கள் மிகச்சிறப்பாக நமதூர் செய்திகளை வீடியோ புகைப்பட ஆதாரத்தோடு சிறப்பாக வழங்குவதோடு சமுதாய, மார்க்க  செய்திகளையும் சிறப்பாக வெளியிட்டு சிறந்த சேவை செய்யும் நம்மவர்கள்  மேலும் மேலோங்கிட துஆ செய்தவனாக.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

6 comments:

  1. வாழ்த்துகள் நண்பருக்கு !

    நேரில் சந்தித்தது இல்லையென்றாலும் இருமுறை போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளோம்.

    நமது சகோதர வலைதளமொன்றில் பதிந்த "வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு" என்ற எனது விழிப்புணர்வு கட்டுரையில் "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற வார்த்தையில் எழுத்துப்பிழை ஓன்று அதில் இருந்ததை அழகாக குறிப்பிட்டு கூறியது அவரின் "தமிழ் ஆர்வம்" எனக்கு வியப்பளித்தன.

    அதேபோல் அவரின் தகப்பனார் நட்பை விரும்பும் மிக எளிமையான மனிதர்

    தொடருங்கள்...தங்களின் சமூகப்பணிகளை என்றென்றும்....நமது சமூகத்திற்கு இறைவன் நாடினால் !

    ReplyDelete
  2. மு.செ.மு.சபீர் அஹமது(திருப்பூர்)என அதிரை நிருபரால் பலருக்கும் அறியப்பட்ட நான் எனது மைத்துனர் ஜஹபர் சாதிக் கின் ஆர்வமூட்டலால் தான் எனது எழுத்து முயற்ச்சியையும் தொடங்கினேன் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் மேலும் சிரக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

  3. அஸ்ஸலாமு அலைக்கும்.

    சகோ.நிஜாம்;
    அன்று நடந்த திருத்தத்தை இன்றும் விழிப்புடன் ஞாபகப்படுத்தியது நீங்கள் சொல்ல நினைவுக்கு வந்தன. நன்றி.சகோதரா!

    மைத்துனர் சபீர் காக்கா :
    நன்றி
    எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
    ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

    ReplyDelete
  4. ஆக்கங்களுக்கு ஊக்கம் தரும்
    ஜாபரின் பின்னூட்டங்கள்
    பாராட்ட தக்கவை ..
    நல்ல சிந்தனை ..நல்ல கருத்துக்களுடன்
    வரும் படைப்புகள் பனி விழும் மலர்வனம்தான்

    ReplyDelete
  5. Congrats ! Best wishes msm ! ! Go ahead !!!
    Raffia
    With Regards.
    From Jeddah.





















    ReplyDelete
  6. Congrats ! Best wishes msm ! ! Go ahead !!!
    Raffia
    With Regards.
    From Jeddah.





















    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers