‘சந்திப்பு’ தொடருக்காக....
இஸ்லாத்தில் கவிதை... ?
என்ற கேள்வியுடன் ‘மார்க்க பிரச்சாரகர்’ சகோ. A. அஸ்ரப்தீன் பிர்தெளசி அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
சகோ. A. அஸ்ரப்தீன் பிர்தெளசி அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
மதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவர் சிவகங்கை மாவட்டம் வரிச்சியூர் என்ற ஊரில் தப்லிக் மதரஸாவில் ஆரம்ப மார்க்கக் கல்வியை பயின்று பிறகு நாகர்கோயில் அல் ஜாமியத்துல் பிர்தெளசி மதரஸாவில் பட்டம் பெற்றவர். தமிழகம் முழுவதும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மார்க்க பிரச்சாரத்தை மேற்கொண்ட இவர் நமதூரில் ஐந்து ஆண்டுகளாக மார்க்கப்பணிகள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் எழுதிய ‘அதிசய மனிதர் தஜ்ஜால்’, ‘சொர்க்கம் நரகம்’, ‘இஸ்லாத்தின் பார்வையில் விருந்து’ ஆகிய நூல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...
சகோ. அஸ்ரப்தீன் அவர்களின் நிறைய பயான் கேட்டிருக்கேன், எதையும் தெளிவாக எடுத்துச்சொல்லும் ஆற்றல் மிக்கவர், நன்றி பகிர்வுக்கு
ReplyDeleteமார்க்கத்தை நன்கு கற்க துடிக்கும் ஒரு 'கற்றுக்குட்டி'யாக இருக்கும் நான், இக்காணொளியில் இணைவைத்தல், ஆபாசம் போன்ற கருத்துடைய கவிதைகளை தவிர்த்துவிட்டு மற்றவை இஸ்லாத்தில் கூடும் என்ற தொனியில் பேசியிருக்கும் சகோ. A. அஸ்ரப்தீன் பிர்தெளசி அவர்களின் கருத்துகள் என்னை சிந்திக்க வைக்கின்றன.
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரருக்கு !