kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, September 24, 2012
மிரட்டும் மின்வெட்டால் அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு [காணொளி] !!!
கடும் மின் பற்றாக்குறை காரணமாக அதிரையில் மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களில் மட்டும் 16 மணி நேர அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து வருகின்றன.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால் பொதுமக்கள் மாத்திரமல்ல பள்ளிகளில் காலாண்டுத்தேர்வுகள் எழுத தயாராகும் மாணவ, மாணவிகளும் மிகவும் அவதியுறும் நிலை ஏற்பட்டு உள்ளன.
மேலும் இதனால் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதோடு பொது மக்களின் அன்றாட பணிகளும் முடங்கிப் போயுள்ளன.
குடிநீருக்காக ஆங்காங்கே பொதுமக்கள் காலிக்குடத்துடன் காட்சியளிப்பது மனதை நெருடவைக்கின்றன. ஒரே ஒரு ஆறுதலான விஷயமென்றால் குறிப்பிட்ட பகுதிகளில் டேங்கர் வண்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதுதான்.
குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கில் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக நமதூர் பேரூராட்சி தலைவர் அவர்களிடம் விளக்கத்தைக் கேட்டோம்.
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் இருந்து இது போன்று தண்ணீர் தட்டுபாடு வந்ததில்லே.ஆனால் இப்போது வந்து வி ட்டது நமது ஊருக்கு.இன்னும் என்ன என்ன தட்டுப்பாடுகள் வரபோகுது என்று தெரிய வில்லை அல்லாஹு தான் மக்களை காபத்தணும்.
ReplyDelete