"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பர்கள்" சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். "சிரிப்பு" என்பது இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவதோடு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த உதவுகிறது.
1. ஆட்டையே கழுதையாக்கின ஊரா அதிரை ?
2. கடந்த காலங்களில் அதிரையில் நடந்த பல்சுவை நிகழ்வுகள்...
ஆகிய கேள்விகளை முன்வைத்து ‘சந்திப்பு’ தொடருக்காக அதிரை புஹாரி அவர்களை ஒரு அருமையான இடத்தில் வைத்து அவர்களின் நகைச்சுவை உரையைக் காணொளியாகப் பதிந்தோம்.
அதிரை புஹாரி அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
அதிரையின் மூத்த பத்திரிக்கையாளர் அதிரை புஹாரி அவர்கள் 1977 ஆம் ஆண்டு பிரபல வார இதழான குமுதத்தில் தனது முதல் நகைச்சுவை துணுக்கு பிரசுரமானதிலிருந்து எழுத்தார்வத்தை வளர்த்துக்கொண்டவர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு பத்திரிக்கையில் குறிப்பாக குமுதம், ஆனந்த விகடன், தினத்தந்தி, துக்ளக், குங்குமம், பாக்கியா, கல்கி போன்றவற்றிற்கு இவர் எழுதி அனுப்பும் பல்வேறு பல்சுவை துணுக்குகள் தொடர்ந்து பிரசுரமாகி வருவதால் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் எழுதி வருகிறார்.
காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மூத்த மாணவர்களில் ஒருவரான இவர், இதுவரை 1000 க்கும் மேற்பட்ட ஜோக்ஸ்களை எழுதியுள்ளதோடு, பிரபல தமிழ் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! ‘சந்திப்புகள்’ தொடரும்...
ஹா..ஹா.. அதிரை புகாரி அவர்கள் தனது நகைச்சுவைத் துணுக்குகள் ஒன்றிரண்டை எடுத்து விட்டால், இன்னும் அருமையாக இருக்குமே!!
ReplyDeleteதமிழ் வார இதழில் அதிகமாக ஜோக்ஸ் படிச்சிருக்கேன், யார் அது என்று இது வரை தெரியாமல் இருந்த்து... அறிய தந்தமைக்கு நன்றி...
ReplyDelete