.

Pages

Sunday, September 9, 2012

'ஸ்மார்ட் கிளாஸ்' - அப்புடின்னா என்ன ?



தற்போது - ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் புதிய வகுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாடங்களை ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பின்னர் மாணவர்களுக்குப் புரிகின்றதோ இல்லையோ மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி பாடங்களையே படங்களாக்கிக் காட்டி பல்வேறு உதாரணங்களையும் இம்முறை மூலம் எடுத்துக்காட்டும் போது வகுப்பறைகளில் மட்டுமின்றி வாழ்க்கையில் எங்கு எதைப் பார்த்தாலும் அதனுடன் தான் படித்த பாடத்தை ஒப்பிட்டு நோக்கும் முறையை இந்த ஸ்மார்ட் கிளாஸ் சிஸ்டம் ஏற்படுத்தித் தருகிறது என்றால் அது மிகையல்ல.

படிப்பது என்ன என்பது மாணவர்களுக்குப் புரிய வேண்டும். வெறும் தாள்களில் அச்சிட்ட பாடத்தை வாசிப்பதனாலும், மனப்பாடம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது உபயோகமாக இருக்காது. கற்கும் முறையை விட கற்பிக்கும் முறை எளிதாக இருந்தால் கற்பதிலும், கற்பிப்பதிலும் ஆர்வம் கூடிக் கொண்டே இருக்கும். இந்த முறையை ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலமான கல்வி வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட் வகுப்புக்கு ஒரு சர்வர், ஒவ்வொரு வகுப்பறையிலும் எல்.சி.டி. மானிட்டருடனான கம்ப்யூட்டர் தேவை. இந்த சர்வர்களில் நமக்குத் தேவையான அனைத்துப் பாடங்களையும் நாம் பதிவு செய்து கொள்ள முடியும். இதைத் தவிர இன்டர்நெட் மூலம் தேவையான விஷயங்கள், எஜூசாட் மூலம் கிடைக்கும் விஷயங்களை டவுன்லோட் செய்து தேவையான நேரத்தில் வகுப்பறைகளில் காண்பிக்கவும் சர்வர் உதவும்.

புத்தகத்தைப் பார்த்து பாடம் படிப்பதை விட, செயல் வழி மற்றும் "விஷுவல்' முறையில் படிப்பது அதிக பலன் அளிக்கிறது. வெளிநாட்டு பள்ளிகளில் இந்த திட்டம் மூலம் படிக்கும் மாணவர்கள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர்.

இதற்கான பாடங்கள், "இன்டர்ஆக்டிவ் போர்டில்' தயாரிப்பின்போதே புகுத்தப்படுகிறது. பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாணவர்களே திரையில் விடையை கண்டுபிடிக்க முடியும். ஜீரண மண்டலம் போன்ற பாடங்களை அசையும் படங்களுடன் வண்ணமயமாக காணொளியாக திரையில் காண முடிவதால், பாடங்கள் எளிதில் மனதில் பதியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks : http://viduthalai.periyar.org.in

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers