இணையத்தினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்வதுடன் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரின் வீட்டிலும் கணிணி என்பது கட்டாயத் தேவை என்ற அளவிற்கு, இதன் பயன்பாடு கூடிக் கொண்டே செல்கிற்து.
இணையம் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் "அடுத்தக் கட்டம்" என்று சொன்னால் மிகையாகாது அந்தளவிற்கு நிமிடத்தில் எண்ணற்ற பக்கங்கள் கொண்ட தகவல்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. மாணவ, மாணவிகள் இணையதளத்தை பயன்படுத்தும் போது அதில் பயனுள்ள பகுதிகளை மட்டுமே பார்க்க பழகிக்கொண்டால் சாதிக்க நிறையவே இருக்கிறது” என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம்...
1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...
ஆகிய கேள்விகளை முன்வைத்து சகோ. அபூ சுஹைமா அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
சகோ. அபூ சுஹைமா அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு :
அபூசுஹைமா - பிரபல மார்க்க அறிஞர் மர்ஹூம் முஹம்மது அலிய் ஆலிம் அவர்களின் புதல்வரும் மூதறிஞர் மர்ஹூம் அபூபக்கர் ஆலிம் அவர்களின் பேரரும் ஆவார். பள்ளிப்படிப்பை கா.மு. மேல் நிலைப்பள்ளியிலும், பட்டப் படிப்பை சென்னை புதுக்கல்லூரியிலும் படித்து இளங்கலை பட்டம் பெற்றவர்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக அச்சகத் துறையில் பணியாற்றி, பிறகு சுயமாக கணினி வரைகலையில் நிபுணத்துவம் பெற்றார்.அச்சுப்பதிப்புத் துறையிலிருந்ததால் பல்வேறு அறிஞர்களின் நூற்களையும் தட்டச்சு செய்யும்போது வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேச, வாசிக்க அறிந்தவர். வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத்தில் இருந்ததால் அரபு மொழியையும் பேச, வாசிக்க அறிந்தவர்.
இணையம் பிரபலமடையத் தொடங்கிய காலகட்டத்தில் வலைப்பூக்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். தற்போது அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...
நமது சமுதாயத்தை சேர்ந்த அறிஞர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை முடக்கிக்கொள்ளாமல், பொது உலகத்திற்கு வர வேண்டும் என்னும் கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய சகோதரரின் பேச்சு கவனிக்கப்படவேண்டியது.
ReplyDeleteஅன்புடன்,
அதிரை என்.ஷஃபாத்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஅதிரை மின் ஊடக வட்டாரத்தில் அபூ ஹஷிமா என்கிற பெயர் மிகவும் பிரபலமாக பேசப்படும். காணும், கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது பற்றி மகிழ்ச்சி. அதிலும் நான் மிகவும் மதிக்கும் ஜனாப். முகமது அலிய் ஆலிம் அவர்களின் மகனார் என்பதை அறியும்போது மிகவும் சந்தோசம்.
தம்பி ஷேக்கனா நிஜாம் அவர்களுக்கு நன்றி.
சமீபத்தில் இவருடனான என் சந்திப்பில் இரண்டு விஷயங்களை நான் அவரிடம் கற்றுக்கொண்டேன்...
ReplyDelete1. எளிமை
2. அமைதியான பேச்சு
தங்களின் சமூகப்பணி சிறக்க என் வாழ்த்துகள் !
அன்பு சகோ அபு சுகைமாவின் கருத்து
ReplyDeleteநான் வரவேற்கிறேன் ..நமது சமுதாயத்திற்குள்
சுழன்று கொண்டிராமல் அனைத்து சமுதாய
மக்களும் நுகரும் வண்ணம் நமது படைப்பு
இருக்கும்