வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டும் தேர்தலில் ஓட்டுப்போட முடியாது. வாக்காளர் குடியிருக்கும் பகுதியின் புகைப்பட வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கவும், திருத்தம் செய்யவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு இன்றுமுதல் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. 1-1-2013 அன்று 18 வயது முடிந்தவர்கள் (அதாவது 31-12-1994 அன்றோ அல்லது முன்போ பிறந்தவராக இருத்தல் வேண்டும்), வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். ஒரு சட்டமன்றத் தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்றத் தொகுதிக்கு வீடு மாறியிருந்தால் படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இன்றுமுதல் (திங்கட்கிழமை) 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6ஏ-ல் விண்ணப்பிக்கலாம். ஒரு சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே வீடு மாறியிருந்தால் படிவம் 8ஏ-ல் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் ஒருவரின் பெயரை நீக்குவதற்கு படிவம் 7-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
பெயர், வயது, பாலினம், உறவுமுறை ஆகிய பதிவுகளில் திருத்தம் செய்யவும், அல்லது சரியான புகைப்படம் இடம்பெறச் செய்யவும் படிவம் 8-ல் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் படிவங்களை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் (வாக்குச்சாவடி அமைவிடம்) பெற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு பள்ளிக்கூடம் வாக்குச்சாவடி அமைவிடமாக இருந்தால், அந்தப் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது http//ceotamilnadu.nic.in அல்லது http//election/tn.gov.in ஆகிய இணைய தளங்களில் இருந்தும் இலவசமாக படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவங்களை வாக்குச்சாவடி அமைவிடங்களில் சமர்ப்பிக்க வேண்டும். முதன்முறையாக விண்ணப்பிப்போரைத் தவிர, மற்ற அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் எண்ணையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை நாடு முழுவதும் செல்லத்தக்கது ஆகும். வீடு மாறினாலோ அல்லது நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஓட்டுப் போடலாம். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்துவிட்டால், தாசில்தார் அல்லது மண்டல அலுவலகத்தில் 001சி-ல் புதிய அட்டை கோரி விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் ஓரிடத்திற்கு மேல் பெயரைப் பதிவு செய்தாலோ அல்லது தவறான தகவல்களைத் தந்தாலோ சம்பந்தப்பட்ட வாக்காளர் மீது, 1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 31-ன் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்காக வரும் 7, 14, 21-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
வயது சான்றாக பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளிக்கூட சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட்டின் நகல் அளிக்கலாம். இருப்பிடச் சான்றாக வங்கி, தபால் அலுவலக நடப்புக் கணக்கு கையேடு அல்லது ரேஷன் கார்டு, பாஸ்போர்ட்டு, டிரைவிங் லைசென்ஸ், வருமான வரிவிதிப்பு ஆணை அல்லது விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது அவரது பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர் பெயரிலோ உள்ள குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு போன்றவற்றின் சமீபத்திய ரசீது அல்லது விண்ணப்பதாரர் கொடுத்துள்ள முகவரிக்கு வந்துசேர்ந்த தபால் துறையின் தபால் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யக் கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களின் மீது வாக்காளர் பதிவு அதிகாரி உத்தரவு பிறப்பிக்கும் முன்பு, அதில் அளிக்கப்பட்டு உள்ள தகவல்கள் குறித்து வாக்குச்சாவடி அதிகாரி, வீடுகளுக்குச் சென்று விசாரணை நடத்துவார்.
வரைவு புகைப்பட வாக்காளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.), நகராட்சி கமிஷனர், தாசில்தார் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கிறது. நகரப் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும், கிராமப் பகுதிகளில் கிராம சபைகளுக்கும் அந்தந்தப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலின் பாகம் (நகல்) வழக்கப்படும்.
வரும் 6 மற்றும் 9-ந் தேதிகளில் கிராம சபைக் கூட்டங்களிலும், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியலின் சம்பந்தப்பட்ட பகுதிக்கான பாகம், பிரிவு ஆகியவை படித்துக் காட்டப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.
Source : Cheif Election Commissioner Mr. Praveen Kumar
Picture Credit : GOOGLE
நமது நாடு நமக்கு வழங்கியிருக்கும் ஜனநாயகக் கடமையாகியாகிய ஓட்டுரிமையை நிலை நிறுத்தும் விதமாக நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டியது அவசியமாகிறது.
ReplyDeleteசகோதரர்களே :
இறைவன் நாடினால் ! நாம் விழிப்புணர்வுடன் இருப்போம்.
அவசியம் நம் உரிமையை மீட்பது என்றால் வாக்காளர் பட்டியலில் நம் பெயர் இருக்க வேண்டும், அருமையான விழிப்புணர்வு நிஜாம்
ReplyDeleteநமது நாடு நமக்கு வழங்கியிருக்கும் ஜனநாயகக் கடமையாகியாகிய ஓட்டுரிமையை நிலை நிறுத்தும் விதமாக நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டியது அவசியாகிறது.
ReplyDeleteஅது போல கல்யாணம்,பிள்ளைபேறு இவைகளுக்கும் அரசு பல சலுகை வழங்குகின்றது இதை நம்மவர்கள் பெறவது கிடையது.அவைகளை நாமும் பெறவேண்டும். அரசு மருத்துவமனையை கண்டிப்பாக பயன் பாடுத்த வேண்டும்
தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் வரைவுப் பட்டியல் இன்று அந்தந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள தங்களது விவரங்களைப் பார்த்து அதில் திருத்தம் செய்யவும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், பெயரை சேர்க்கவும், பட்டியலில் உள்ள பெயரை நீக்கவும் இன்று (01-10-2012 ) முதல் விண்ணப்பிக்கலாம்.
ReplyDeleteஇதற்கு வசதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் வரும் ஒரு வாரத்துக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அவர்கள் வாழும் மாநகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பங்களைப் பெற்று வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நண்பர் நிஜாமின் இந்த அளப்பரிய சேவையினை பாராட்டுகிறேன் . இன்னும் நீங்கள் நிறைய எழுத வேண்டும் நண்பரே குறிப்பாக இன்று அதிரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது அதை பற்றி எழுதுங்கள் அதனை பற்றியும் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துங்கள்
ReplyDeleteஸ்ரீனிவாசன் உங்கள் நண்பன் மற்றும் துணை பேராசிரியர் . காதிர் முகைதீன் கல்லூரி