குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்துவைத்தும், அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தும் அவர்களின் எதிர்கால இல்லற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் பெற்றோர்களை உதாசீனப்படுத்துகிறது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளன. ஆடம்பரமாக வீட்டைக் கட்டி அதற்கு தாய் தந்தையர் பெயரைச் சூட்டி மகிழும் பிள்ளைகள் அவர்களை கவனிக்கத் தவறி விடுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை !
வருவாய் இழந்து, உடல் தளர்ந்து, நோய்வாய்பட்ட சூழ்நிலையில், அவர்களின் மனம் புண்படும்படி கொடுமைகள் நடப்பது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.
1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்பவர்களாகட்டும்....
2. தான் தூக்கி வளர்த்த மகன்/மகள் ஆகியோரின் அன்பைப்பெறாமல் தவிக்கக்கூடியவர்களாகட்டும்...
3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டவர்களாகட்டும்...
4. மகன்/மகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியவர்களாகட்டும்....
5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களாகட்டும்...
6. தேவையான நேரத்தில் உன்ன உணவுக் கொடுக்காமல் பசிக் கொடுமையால் அவதிப்படுபவர்களாகட்டும்...
7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுபவர்களாகட்டும்...
என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
வயதான அப்பா-வாப்புச்சா-உம்மம்மா-பெரியம்மா ஆகியோருக்கு ஆதரவாக சட்ட திட்டங்கள் இருந்தாலும் யாரும் புகார் செய்ய முன்வருவதில்லை என்பதால், கொடுமைகள் வெளியில் தெரியாமலே போய் விடுகிறது. அனாதைகளைப் போல நடத்துவதை சமூக அவமானமாகக் கருதி, அவர்களுக்கு வயதான காலத்தில் அன்பும், பரிவும், பாசமும், உயிர்வாழ உணவும், இருக்க இடமும், உடுத்த உடையும் வழங்குவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.
மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை அனுபவங்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடாது என்பதையும் இளம் வயது அறிவுக்கு புலப்படாத பல விசயங்களை மூத்தவர்களின் அனுபவத்தால் நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசின் சார்பாக வருமான வரிவிலக்கு, ரயில், விமான பயணங்களில் கட்டண சலுகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித்தொகை போன்றவற்றை வழங்கி கெளரவிக்கும் போது, நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்/தந்தையருக்கு நமது கடமைகளை செலுத்த மறந்துவிடுகின்றோம்.
1. குறிப்பிட்ட நேரத்தில் சத்தான உணவு
2. போதுமான உடற்பயிற்சி, ஓய்வு
3. தொழுகை
4. நண்பர்கள், குடும்பத்தினருடன் பழகுதல்
5. குழந்தைகளுடன் விளையாடுதல்
6. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை
7. சமூக சேவைகளில் ஈடுபடுதல்
போன்றவற்றில் அவர்களை கவனம் செலுத்தவைத்து, அவர்கள் படும் கஷ்ட/நஷ்டங்களை நன்கு புரிந்து அதற்கேற்றார் போல் அவர்கள் மீது பரிவு/பாசத்துடன் நாம் ஒவ்வொருவரும் நடந்து கொள்வோம். [ இறைவன் நாடினால் ! ]
இன்றைய இளைஞன்-இளைஞி ! நாளைய அப்பா-வாப்புச்சா-உம்மம்மா !!
வாழ்க அப்பா-வாப்புச்சா-உம்மம்மா ! வளர்க அவர்களின் ஆரோக்கியம் !!
[அப்பா-வாப்புச்சா-உம்மம்மா-பெரியம்மா = தாத்தா - பாட்டி]
சேக்கனா M. நிஜாம்இறைவன் நாடினால் ! தொடரும்...
உள்ளத்தின் நல்ல உள்ளம்
ReplyDeleteதம்பி நிஜாமின் உள்ளம்
எனக்கு எதிர் மறையான எண்ணம்
தோன்றியது அவலத்துடன காணப்படும்
முதியோருக்கு இல்லம் அமைத்து
நற் பணிவிடை செய்தால் என்ன
என்று தோன்றியது ..தவறாக என்ன வேண்டாம்
கால சூழல் முதியவர்களை கண்டுக்கொள்ளாமல்
போக வைப்பதுதான் பரிதாபம் ..!
எதிர்காலம் புரியாம இன்று முதியவர்களை வெறுத்து ஒதுக்கு அவலம் அதிகமாகிட்டே வருது, இதெல்லாம் நல்லதுக்கில்லே, அல்லாஹ் அவர்களுக்கு ஆரோக்யத்தையும், பாதுகாப்பையும் தருவானாகவும்...
ReplyDelete