kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Sunday, October 21, 2012
[3] ஏன் அழுதாய்...? ‘அழும் குரல்' தொடர்கிறது...
தொட்டிலில் விட்டில் பார்த்து
பொக்கை வாய் சிரித்த
செல்ல குழந்தையிடம்
உலகில் நீ பிறந்ததும்
அலுத்து விட்டு இப்போது
சிரிக்கின்றாய்
ஏன் அழுதாய் அப்போது..?
உள்ளத்தில் ஒன்றும்
உதட்டில் ஒன்று பேசும்
மனிதனைக்கண்டு மருண்டு
அழுதேன்
உதவி செய்கிறேன்
என்று உபத்திரம் செய்யும்
மனிதனை கண்டு
மருண்டு அழுதேன்
அரசியல் செய்வதாய்
கூறி கொத்து கொத்தாய்
மனித சமுதாயத்தை
கொள்ளும் காலத்திலா
நான் பிறந்தேன் என
கதறி அழுதேன்
கல்வி, மருத்துவம்
காசு பார்க்கும் கயவர்
உள்ள காலத்திலா
நான் பிறந்தேன் என
நினைத்து அழுதேன்
அதிரை சித்திக்
‘அழும் குரல்' தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுக்கு முதலில் நன்றி.
ReplyDeleteஅன்பின் தம்பி அதிரை சித்திக் அவர்களின் மிகவும் மென்மையான இந்தக் கவிதை படிப்பதற்கு இனிமையாக இருக்குது.
அதன் வாக்கியத்தின் கோர்வைகள், சொல்ல நினைப்பதை எப்படி சொன்னால் போய்ச் சேரும் என்று தத்ரூபமாக எடுத்துச் சொல்லியிருப்பது மிகவும் அருமை.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
HO Palayankottai TN.,
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
______________________________________________
சமூகத்தின் அவலங்கள் அழும் குரலாக ஓங்கி ஒலிக்கட்டும்
ReplyDeleteஅழும் குழந்தை
ReplyDeleteஅழும் காரனம்
கேட்க்க
நாமெல்லாம்
வெட்க்கப்பட் வேண்டும்
அழும் குழந்தை
சிரித்திடவே
நம்மோடு சேர்ந்து விட்டதோ
This comment has been removed by the author.
ReplyDeleteகாக்கா அதிரை சித்தீக் அவர்களின் ஆக்கங்களை நான் படித்து ருசித்து வருகிறேன்.............தங்களின் மென்மையான வாக்கிய கோர்வைகள் சமூகத்தின் அவலங்களை முன்னிண்று காட்டுகிறது....
ReplyDeleteவாழ்த்துக்கள் காக்கா.....
__________________
J,M MOHAMED NIZAMUDEEN
(www.nplanners.webs.com)